அமெரிக்காவில் அரசியலாகும் சட்டம், ஒழுங்கு

அமெரிக்காவில் அரசியலாகும் சட்டம், ஒழுங்கு

மூன்றாம் உலக நாடுகள் போல அமெரிக்காவிலும் சட்டம் ஒழுங்கு முற்றாக அரசியலாகி வருகிறது. அமெரிக்காவில் ஆட்சிக்கு வரும் Democratic, Republican ஆகிய இரண்டு கட்சிகளும் ஆட்சிக்கு வந்தவுடன் அமெரிக்க சட்டங்களை தமது நலன்களுக்கு பயன்படுத்த முன்வந்துள்ளனர்.

திங்கள்கிழமை ஆட்சிக்கு வந்த Republican கட்சி சனாதிபதி ரம்ப் பதவி ஏற்ற தினமே 2021ம் ஆண்டு January 6ம் திகதி காங்கிரஸ் உள்ள US Capital லில் வன்முறை செய்ததால் கைதான 1,500 பேருக்கு பூரண மன்னிப்பு (full pardon) அளித்துள்ளார். இவர்கள் ரம்பின் 2020 தோல்வியை ஏற்காது வன்முறையில் ஈடுபட்டவர்.

மூன்று வெவ்வேறு அபிப்பிராய வாக்கெடுப்புகளில் 59%, 62%, 66% அமெரிக்கர் January 6ம் திகதி வன்முறையாளருக்கு மன்னிப்பு வழங்கக்கூடாது என்று கூறியுள்ளனர். ஆனாலும் ரம்ப் மன்னிப்பு அளித்துள்ளார்.

ரம்ப் மன்னித்து விடுதலை செய்யப்பட்டோரில் Oath Keepers, Proud Boys போன்ற 14 குழுக்களும் அடங்கும்.

மறுபுறம் ஆட்சியை விட்டு வீடு போகும் முன்னாள் Democratic கட்சி சனாதிபதி பைடென் தனக்கு விரும்பியவர்கள் பலருக்கு மன்னிப்பு அளித்துள்ளார். அதில் பல குற்றங்களை செய்த பைடெனின் மகனும் ஒருவர்.