அமெரிக்கா இதுவரை காலமும் HTS குழுவின் தலைவர் Ahmed al-Sharaa வின் தலைக்கு $10 மில்லியன் bounty வைத்திருந்தது. இவரே தற்போது சிரியாவில் ஆட்சியை கைப்பற்றி உள்ள HTS என்ற ஆயுத குழுவின் தலைவர். Golan Heights வாழ்ந்த இவரின் குடும்பம் 1967ல் இடம்பெற்ற இஸ்ரேல் ஆக்கிரமிப்பின் பின் சவுதி சென்று வாழ்ந்தது.
பலஸ்தீனர்கள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களின் கைகளில் படும் அவலங்களை பார்த்த இவர் 2003ம் ஆண்டு சிரியாவில் இருந்து ஈராக் சென்று al-Qaeda in Iraq என்ற அல்கைடாவின் கிளையுடன் இணைந்தார்.ஈராக்கில் இவர் அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தவர்.
அமெரிக்காவால் விடுவிக்கப்பட்ட இவர் அல்கைடாவின் பண, ஆயுத உதவியுடன் சிரியா திரும்பி அசாத்துக்கு எதிராக போராட்டம் செய்தார். Abu Bakr al-Baghdadi யின் அரவணைப்பை கொண்ட இவரின் சிரியா கிளை Jabhat al-Nusra என்று பெயர் கொண்டது. 2013ம் ஆண்டு வரை இந்த குழு ISIS குழுவுடனும் நெருக்கத்தை பேணியது.
பின்னர் இவர் ISIS உடனான தொடர்பை முறித்து கொண்டார்.
அமெரிக்கா Operation Inherent Resolve தாக்குதலை சிரியாவில் ஆரம்பித்த பின் இவர் அமெரிக்காவுக்கு எதிராக மீண்டும் எச்சரிக்கைகள் விடுத்தார். மற்றைய ஆயுத குழுக்களை அமெரிக்காவிடம் இருந்து உதவிகளை பெறவேண்டாம் என்றும் இவர் கட்டளை விடுத்தார்.
2013ம் ஆண்டில் இவரை அமெரிக்கா Specially Designated Global Terrorist என்று கூறி இவரின் தலைக்கு $10 மில்லியன் bounty வைத்தது.
தற்போது இவர் அமெரிக்காவின் நண்பர் ஆகிறார்.