ஒபாமா ஆட்சியில் உதவி சனாதிபதியாக இருந்த ஜோ பைடென் (Joe Biden) அமெரிக்காவின் 46 ஆவது சனாதிபதி ஆகிறார். தற்போதைய சனாதிபதி ரம்ப் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்குகள் தொடர்ந்தாலும், 20 electoral வாக்குகளை கொண்ட Pennsylvania மாநிலத்தில் பைடென் வெற்றி பெற்றதால் அவர் அமெரிக்காவின் அடுத்த சனாதிபதியாக ஆகிறார்.
Arizona, Nevada, Georgia, North Carolina, Alaska ஆகிய மாநிலங்களில் இறுதி முடிவுகள் இதுவரை வெளிவரவில்லை என்றாலும் 20 வாக்குகளை கொண்ட Pennsylvania மாநிலத்தை வென்றதால் பைடென் 273 electoral வாக்குகளை பெற்று சனாதிபதி ஆகிறார். சனாதிபதியாக வெல்ல குறைந்தது 270 electoral வாக்குகளே தேவை.
கனடாவின் பிரதமர் ஏற்கனவே பைடெனுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
அதேவேளை 100 ஆசனங்களை கொண்ட அமெரிக்க Senate தேர்தலில் தற்போது Democratic கட்சி 48 ஆசனங்களையும், Republican கட்சி 48 ஆசனங்களையும் வென்றுள்ளன. பைடெனின் Democratic கட்சி 50 அல்லது அதற்கு மேற்பட்ட காங்கிரஸ் (Senate) ஆசனங்களை வெற்றி பெறாவிடின் பைடெனின் ஆட்சி பலம் அற்றதாவே இருக்கும்.
Senate 50:50 ஆசனங்களை கொண்ட நிலை உருவாகி அந்த அவை தீர்மானங்களை எடுக்க முடியாத நிலை உருவாகும்போது மட்டும் உதவி சனாதிபதிக்கு ஒரு வாக்கு உண்டும். அந்நிலையில் உதவி சனாதிபதி தனது வாக்கை அளித்து தீர்மானத்தை நடைமுறை செய்யலாம். உதவி சனாதிபதியே Senate தலைவர் ஆவார்.
பைடென் சுதந்திரமான ஆட்சி செய்ய Senate அவரின் ஆதிக்கத்தில் இருப்பது அவசியம்.
பைடென் வெற்றியால் கமலா ஹாரிஸ் முதலாவது பெண் உதவி சனாதிபதி ஆகிறார்.