முன்னாள் சனாதிபதி ஒபாமாவின் உப-சனாதிபதியான ஜோ பைடனின் (Jow Biden) மகன் Hunter Bidenனை விசாரிக்குமாறு ரம்ப் யுக்கிரைனுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். காரணம் இன்றி அவ்வாறு செய்ய யுக்கிரைன் பின்னடிக்க, அந்த நாட்டுக்கான இராணுவ உதவியையே இடைநிறுத்தினார் ரம்ப்.
.
அடுத்த சனாதிபதி தேர்தலில் Joe Biden Democrtic கட்சி சார்பில் தனக்கு எதிராக போட்டியிடக்கூடும் என்று கருதும் ரம்ப் முன்கூட்டியே Biden குடும்பம் மீது குற்றம் சுமத்த முனைந்துள்ளார்.
.
யுக்கிரனுக்கு அமெரிக்கா வழங்க இருந்த $250 மில்லியன் அவசர இராணுவ உதவியை இடைநிறுமாறு ரம்ப் தனது chief of staff ஆகிய Mick Mulvaneyக்கு பணித்துள்ளார். இது அமெரிக்க சட்டத்துக்கு முரணானது.
.
Burisma என்ற யுக்கிரைன் எண்ணெய்வள நிறுவனம் ஒன்றில் Hunter Biden முன்னர் director ஆக பணியாற்றி இருந்தார். அந்த நிறுவனம் மீது குளறுபடி விசாரணைகளை யுக்கிரைன் தொடர்ந்தாலும், Joe Biden மற்றும் Hunter Biden மீது எந்தவித குற்றச்சாட்டுக்களும் இல்லை என்று யுக்கிரைன் கூறியுள்ளது.
.