அனுர அரசுக்கு 62% ஆதரவு

அனுர அரசுக்கு 62% ஆதரவு

Verite Research ஆய்வு அமைப்பு செய்துகொண்ட கணிப்பெடுப்பில் தற்போதைய அனுர அரசின் செயற்பாடுகளை 62% மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் அக்கால ரணில் அரசுக்கு 24% ஆதரவு மட்டுமே இருந்தது. அனுர அரசின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளாத மக்களின் வீதம் 16% ஆக உள்ளது.

அத்துடன் இலங்கையின் பொருளாதாரம் நலம் அடைந்து வருவதாக 55% மக்கள் உணருகின்றனர். அதேவேளை 47% மக்கள் பொருளாதாரம் நலமாக இல்லை என்று கருதினாலும், கடந்த ஜூலை மாதம் 71% மக்கள் பொருளாதாரம் நலமாக இல்லை என்று கருதி இருந்தனர்.

இந்த ஆய்வுக்கு 1,050 இலங்கையர் பயன்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த கணிப்பு கணக்கெடுப்பு ஜனவரி 31ம் திகதி முதல் பெப்ரவரி 5ம் திகதி வரை செய்யப்பட்டது.