Musab Msallem என்ற லிபிய (Libya) மத்திய வங்கி அதிகாரி அவரது வீட்டில் இருந்து அடையாளம் காணப்படாதோரால் ஞாயிறு காலை கடத்தப்பட்டுள்ளார். அதனால் மத்திய வங்கி உடனடியாக அனைத்து சேவைகளையும் இடைநிறுத்தி உள்ளது.
மத்திய வங்கியின் Information Technology பிரிவின் தலைமை அதிகாரியான Msallem மட்டுமன்றி வேறு அதிகாரிகளும் மிரட்டப்பட்டு உள்ளனர்.
இந்த கடத்தலின் நோக்கம் Seddik al-Kabir என்ற மத்திய வங்கியின் ஆளுநரை பதவியில் இருந்து விரட்டுவதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
2011ம் ஆண்டு சர்வாதிகார குணம் கொண்ட NATO கடாபியை (Gaddafi) விரட்டி படுகொலை செய்த பின் லிபியா சிதைந்துள்ளது. NATO நாடுகள் உட்பட பல அந்நிய நாடுகள் லிபியாவின் எண்ணெய் வளத்தில் கண்ணாய் உள்ளன.