அதானி முதலீடுகளை இடைநிறுத்தும் பிரான்சின் TotalEnergies 

அதானி முதலீடுகளை இடைநிறுத்தும் பிரான்சின் TotalEnergies 

அதானி நிறுவனங்களில் மேற்கொண்டு முதலீடுகள் செய்வதை பிரான்சின் எண்ணெய் வள நிறுவனமான  TotalEnergies தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளது. 

அமெரிக்கா தற்போது அதானி மீது தொடுத்துள்ள $265 மில்லியன் இலஞ்ச குற்றச்சாட்டே TotalEnergies தனது புதிய முதலீடுகளை இடைநிறுத்த காரணம்.

TotalEnergies அதானியின் Adani Green Energy என்ற நிறுவனத்தில் 19.7% பங்கை 2021ம் ஆண்டு கொள்வனவு செய்திருந்தது. Adani Total Gas என்ற கூட்டுறவு நிறுவனத்தில் TotalEnergies 37.4% உரிமையை கொண்டுள்ளது.

அதானி மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை அற்றன என்று நிரூபிக்கும் வரை TotalEnergies மேற்கொண்டு அதானி நிறுவனங்களில் முதலீடு செய்யாது என்று TotalEnergies அறிவித்துள்ளது.

அதானியின் நிறுவனங்களில் TotalEnergies இதுவரை சுமார் $5 பில்லியன் முதலீட்டை செய்துள்ளது.

அதேவேளை தெலுங்கானா மாநிலம் அதானி Young India Skill University என்ற பல்கலைக்கழகத்துக்கு வழங்க முன்வந்த 100 கோடி இந்திய ரூபாய் ஏற்க மறுத்துள்ளது.

இந்திய பிரதமர் மோதி இதுவரை இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து எதையும் தெரிவித்து இருக்கவில்லை.