இந்திய செல்வந்தர் அதானிக்கு சொந்தமான Adani Group மீது அமெரிக்காவின் Hindenburg Research மீண்டும் முன்வைத்த குற்றச்சாட்டு காரணமாக Adani Group திங்கள் காலை $19 பில்லியன் பங்குச்சந்தை பெறுமதியை இழந்துள்ளது.
இந்திய Nifty 50 பங்குச்சந்தை சுட்டியில் உள்ளடக்கப்பட்ட Adani Enterprises, Adani Ports ஆகியன பெருமளவு இழப்பை சந்தித்துள்ளன.
Hindenburg சனிக்கிழமை வெளியிட்ட தனது தகவலில் Securities and Exchange Board of India (SEBI) தலைமை அதிகாரி Madhabi Puri Buch உம் அவரின் கணவரும் வெளிநாட்டு முதலீடு ஒன்றில் பெருமளவு பணத்தை கொண்டுள்ளதாகவும் அதே முதலீட்டில் அதானியின் சகோதரன் Vinod உம் பெருமளவு பணத்தை முதலிட்டு உள்ளதாகவும் கூறியுள்ளது.
SEBI யே அதானி மீதான முன்னைய குற்றச்சாட்டுகளை விசாரணையும் செய்கிறது.
Hindenburg Research நிறுவனம் பங்குச்சந்தை மூலம் முதலீடு பெற்று இயங்கும் நிறுவனங்களின் குளறுபடிகளை அறிந்து, அதை பகிரங்கம் செய்து அதன் மூலம் வருமானம் பெறும் short seller ஆகும். 2023ம் ஆண்டு அதானி மீதான இவ்வகை தகவல் ஒன்றை வெளியிட்ட Hindenburg $4.1 மில்லியனை உழைத்திருந்தது.