அதானியின் கொழும்பு துறையும் அமெரிக்க விசாரணையில் 

அதானியின் கொழும்பு துறையும் அமெரிக்க விசாரணையில் 

இலங்கை அரசு பகிரங்க கேள்விகள் எதுவும் இன்றி Adani Ports என்ற அதானியின் நிறுவனத்துக்கு கொழும்பு துறைமுகம் ஒன்றை (WCT: West Container Terminal) கட்டி, சேவைக்கு விட அனுமதி வழங்கி இருந்தது. இந்த திட்டத்துக்கு US International Development Finance Corp.  என்ற அமைப்பு $500 மில்லியன் கடன் வழங்கவும் முன்வந்திருந்தது.

ஆனால் அண்மையில் அமெரிக்கா அதானி உட்பட 8 பேர் மீது $250 மில்லியன் இலஞ்ச குற்றச்சாட்டை சுமத்தி, அவர்களை கைது செய்ய ஆணையும் வழங்கியுள்ளது. இந்நிலையில் இலங்கை துறைமுக விசயத்தையும் அமெரிக்கா விசாரணை செய்ய முன்வந்துள்ளது.

US International Development Finance Corp. என்ற மேற்படி அமைப்பு தற்போது அதானி நிறுவனத்துக்கான தனது $500 மில்லியன் கடன் முற்றாக தீர்மானம் செய்யப்படவில்லை என்று கூறுகிறது. தாமும் அதானி மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதாக தற்போது கூறுகிறது அந்த அமெரிக்க அமைப்பு.

அதேவேளை இலங்கையின் புதிய AKD அரசு அதானியின் காற்றாடி மூல மின் உற்பத்தி (wind power) திட்டத்தை விசாரணை செய்து வருகிறது.

கொழும்பு East Container Terminal சீனாவின் உரிமையில் உள்ளது.