இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கும் அதன் கிளை நிறுவனங்களுக்கும் (Adani Group) எதிராக Hindenburg Research என்ற நிதி ஆய்வு நிறுவனம் வெளியிட்ட பாதகமான ஆய்வு அறிக்கை காரணமாக அதானி நிறுவன பங்கு சந்தை பெறுமதி சுமார் $12 பில்லியனால் இன்று புதன் வீழ்ச்சி அடைந்துள்ளது.
அதானி நிறுவனம் UAE, Caribbean, Mauritius ஆகிய இடங்களில் இரகசிய நிறுவனங்களை அமைத்து சொத்துக்களை ஒளிப்பதாகவும், உரிய வருமான வரியை செலுத்த தவறுவதாகவும் கூறப்படுகிறது.
அதானி நிறுவனம் ஜனவரி மாதம் 27ம் திகதி மேலும் பெருமளவு பங்கு சந்தை பங்குகளை விற்பனை செய்து $2.5 பில்லியன் திரட்ட இருந்தது. அந்நிலையிலேயே இந்த அறிக்கை வெளியாகி நிதி திரட்டலை குழப்பி உள்ளது.
அதானியின் சகோதரன் Vinod அதானி Mauritius என்ற நாட்டில் 38 இரகசிய shell நிறுவனங்களை கொண்டுள்ளதாக மேற்படி அறிக்கை கூறுகிறது.
அதானி நிறுவனம் மேற்படி குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது.
மிக குறுகிய காலத்தில் உலகத்தின் 3ஆவது பெரிய செல்வந்தர் ஆனா அதானியிடம் சுமார் $120 பில்லியன் செல்வம் உள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரம் அதானி நிறுவனங்களுக்கு சுமார் $23 பில்லியன் கடன் உள்ளதாகவும் குறிப்பிடபப்டுகிறது.
Short-seller விசயம் தொடர்பாக Hindenburg Research மீது அமெரிக்காவும் விசாரணை ஒன்றை செய்கிறது.