1987 ஆம் ஆண்டு அமெரிக்காவும், ரஷ்யாவும் செய்துகொண்ட Intermediate Nuclear Forces (INF) இணக்கத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் தெரிவித்து உள்ளார்.
.
றேகனும் (Reagan), கர்பசோவும் (Gorbachev) செய்து கொண்ட இந்த உடன்படிக்கையின்படி அமெரிக்காவோ அல்லது ரஷ்யாவோ 500 km தூரம் முதல் 5,500 km தூரம் வரை பாயக்கூடிய, நிலத்தில் இருந்து ஏவப்படும் நடுத்தர அணு ஏவுகணைகளை தயாரிக்க முடியாது. இந்த உடன்படிக்கை குறிப்பாக ஐரோப்பாவை பாதுகாக்கும் நோக்கிலேயே செய்யப்பட்டது.
.
ரஷ்யா இந்த உடன்படிக்கைக்கு முரணாக ஏவுகணைகளை தயாரிக்கிறது என்று கூறியுள்ளார் ரம்ப். அதை மறுக்கிறது ரஷ்யா.
.
1987 இல் கணக்கில் எடுக்கப்படாத சீனா இன்று மிக பெரிய இராணுவ பலமாகியதும், சீனா இந்த கட்டுப்பாட்டுக்குள் அடங்காததும் அமெரிக்காவின் தீர்மானத்துக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
.
அமெரிக்கா INF இணக்கத்தில் இருந்து வெளியேறுமாயின், மீண்டும் ஒரு பலமுனை அணுவாயுத போட்டி ஆரம்பிக்கலாம்.
.