அடுத்த கிழமை ரஷ்யாவின் ஜனாதிபதி பூட்டினும் (Vladimir Putin), வடகொரியாவின் தலைவர் கிம்மும் (Kim Jong Un) சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்பு Vladivostok என்ற வடகொரியாவின் எல்லைக்கு அருகே உள்ள ரஷ்ய நகரில் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.
.
கிம்முக்கான அழைப்பை பூட்டின் கடந்த வருடம் விடுத்திருந்தார். அமெரிக்க ஜனாதிபதி ரம்பும் இரண்டு தடவைகள் கிம்மை சந்தித்து இருந்தார். ரம்புடனான சந்திப்புகள் குறிப்பிடக்கூடிய முன்னேற்றம் எதையும் வழங்கவில்லை.
.
ரஷ்யாவின் விமான தாயாரிப்பு மற்றும் ரயில் தயாரிப்பு நிறுவனங்களின் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொள்வார்கள்.
.
கிம் பல தடவைகள் சீன, அமெரிக்க, தென்கொரிய தலைவர்களுடன் நேரடி பேச்சுக்களில் ஈடுபட்டு இருந்தாலும், ரஷ்ய தலைவருடன் நேரடியாக பேசுவது இதுவே முதல் தடவை. Cold War காலத்தில் வடகொரியாவும், ரஷ்யாவும் நெருக்கமான உறவை கொண்டிருந்தன.
.