2023ம் ஆண்டு இந்தியாவின் சனத்தொகை சீனாவின் சனத்தொகையிலும் அதிகமாக இருக்கும் என்று ஐ.நா. கணிப்பிட்டு உள்ளது. தற்போது இந்தியாவின் பிறப்பு விகிதம் 2.2 ஆக உள்ளது.
தற்போது தாய் ஒன்றுக்கு 1.15 பிள்ளைகளை மட்டும் கொண்ட சீன சனத்தொகை அடுத்த ஆண்டு முதல் வீழ்ச்சி அடைய ஆரம்பிக்கும். சீனாவில் ஒரு பிள்ளை மட்டும் என்ற சட்டத்தை தளர்த்தி 2 அல்லது 3 குழந்தைகள் பெறலாம் என்று கூறினாலும் அங்கு சுவை கண்ட பெற்றார் அதிகம் பிள்ளைகளை கொண்டிருக்க விரும்பவில்லை.
Congo, எகிப்த், எதியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பீன்ஸ், தன்சானியா ஆகிய 8 நாடுகளில் மட்டும் அடுத்த 30 ஆண்டுகளில் 50% க்கும் மேற்பட்ட உலக சனத்தொகை அதிகரிப்பு நிகழும்.
உலக சனத்தொகை சுமார் 8 பில்லியன் ஆகவும் இருக்கும்.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் சராசரியாக உலக அளவில் தாய் ஒன்றுக்கு 5 பிள்ளைகள் இருந்தன. ஆனால் தற்போது அது 2.4 பிள்ளைகளாக குறைந்து உள்ளது. சனத்தொகை மாறாது இருக்க பிறப்பு விகிதம் 2.1 ஆக இருத்தல் அவசியம்.
மேற்கு நாடுகளில் பிறப்பு விகிதம் தற்போது மிக குறைவு. அமெரிக்காவில் அது 1.7 மட்டுமே. கனடாவில் அது 1.4 மட்டுமே. 2050ம் ஆண்டு அளவில் 61 நாடுகளில் சனத்தொகை வீழ்ச்சி 1% ஆக இருக்கும்.
2080ம் ஆண்டில் உலக சனத்தொகை 10.4 பில்லியன் ஆக இருக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
இலங்கையின் தற்போதைய பிறப்பு விகிதம் 2.2 மட்டுமே.