நத்தார் தினத்தன்று 67 பேருடன் பயணித்த அஜபர்ஜான் (Azerbaijian) விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 38 பேர் பலியாகி பலியாகி இருந்தனர். இந்த விபத்துக்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றாலும் ரஷ்யாவின் சனாதிபதி பூட்டின் இன்று திடீரென மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனாலும் இந்த விபத்தில் ரஷ்யாவின் பங்கு என்ன என்றும் பூட்டின் தெரிவிக்கவில்லை.
Baku என்ற அஜபர்ஜான் நகரில் இருந்து Grozny என்ற Caspian கடலுக்கு மேற்கே உள்ள ரஷ்ய நகருக்கு பறந்த அஜபர்ஜான் விமான சேவைக்குரிய விமானம் காஸ்பியன் கடலுக்கு கிழக்கே Kazakhstan நாட்டில் உள்ள Aktau என்ற நகரில் விழுந்து நொறுங்கியது.
J2-8243 என்ற சேவை இலக்கம் கொண்ட இந்த விமானத்தின் பின் பகுதியில் இருந்த பெரும்பாலானோர் உட்பட 29 பேர் தப்பி இருந்தனர்.
ரஷ்ய அதிகாரிகள் சிலர் விபத்து இடம்பெற்ற நேரம் Grozny பகுதியில் யூக்கிறேனின் ஆளில்லா விமானங்கள் (drones) பறந்ததாகவும் அவற்றை அழிக்கும் முயற்சியில் ரஷ்ய படைகள் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளனர்.
2014 ஆண்டு யூக்கிரேனின் கிழக்கே பறந்த மலேசியாவின் விமானம் ஒன்றை (flight MH17) ரஷ்ய ஆதரவு குழு ஒன்று தவறுதலாக தாக்கியதில் 298 பேர் பலியாகி இருந்தனர்.