அக்டோபர் மாதத்தில் நாடளாவிய அளவில் கரோனா தடுப்பு மருந்துகளை மக்களுக்கு வழங்கவுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது. இந்த செய்தியை Mikhail Murashko என்ற சுகாதார அமைச்சர் கூறியுள்ளார். அவ்வாறு ரஷ்யா செய்யுமானால் அதுவே உலகின் முதலாவது கரோனா தடுப்பு மருந்து வழங்களாகும்.
முதலில் வைத்திய துறை ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இந்த தடுப்பு மருந்து வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். மாஸ்கோவில் உள்ள Gamaleya Institute ஆய்வுகளை செய்து முடிந்துள்ளன என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
அவ்வாறு அக்டோபர் மாதத்தில் பெரும் அளவில் மருந்தை வழங்க, குறைந்தது இந்த மாதமாவது அந்த மருந்துக்கு சட்டப்படியான அனுமதி வழங்கப்படவேண்டும். அவ்வாறு செய்தாலே மருந்து தயாரிப்பு வேலைகளுக்கு போதிய காலம் கிடைக்கும்.
ஆனாலும் மேற்கு நாடுகள் இந்த அறிவிப்பில் சந்தேகம் கொண்டுள்ளன. அமெரிக்காவின் தொற்றுநோய் அதிகாரியான Anthony Fauci தனது கூற்றில் ரஷ்யாவும், சீனாவும் தடுப்பு மருந்தை வழங்க முன் தேவையான சோதனைகளை செய்கின்றன என்று தான் நம்புவதாக கூறியுள்ளார். அமெரிக்கா தடுப்பு மருந்தை சந்தைக்கு வழங்க முன் வேறு எந்த நாடும் அவ்வாறு செய்யும் என்று தான் நம்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகள் தமது கரோனா ஆய்வுகளை ரஷ்யன் hackers திருடியதாக கூறியிருந்தன.