அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி George H. Bush இன்று (2018-11-30) தனது 94 ஆவது வயதில் காலமானார். 1991 ஆம் ஆண்டில் சதாமை குவைத்தில் (Kuwait) இருந்து விரட்டியதால் பிரபலம் அடைந்து இருந்தாலும், அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் காரணமாக ஒருமுறை மட்டுமே இவர் ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தார்.
.
இரண்டாம் உலக யுத்த காலத்தில் அமெரிக்க கடற்படையின் விமானியாக இருந்த இவர் 1944 ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்டும் இருந்தார். இராணுவ சேவைக்கு பின் அரச சேவைக்கும், அரசியலுக்கும் வந்த இவர் 1989 ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டுவரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி வகித்தவர். இவர் அமெரிக்காவின் 41 ஆவது ஜனாதிபதி ஆவார்.
.
1992 ஆம் ஆண்டு தேர்தலில் இவரை பில் கிளின்டன் வென்று இருந்தார்.
.
சுமார் 8 மாதங்களுக்கு முன் இவரின் மனைவி Barbara Bush மரணமாகி இருந்தார்.
.
இவரின் மகன் Bush இரண்டு தடவைகள் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இருந்தார். ஆனாலும் தந்தைக்கே மரியாதை அதிகம்.
.