015 ஆம் ஆண்டு இஸ்ரேல் தனது மிக பெரிய துறைமுகமான ஹைபாவை (Haifa) சீனாவுக்கு 25 வருட குத்தகைக்கு வழங்கி இருந்தது. இஸ்ரேலின் போக்குவரத்து அமைச்சும், சீனாவின் Shanghai International Port Group நிறுவனமும் இணைந்து இந்த துறைமுகத்தை சீனாவின் Belt and Road திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்ய இணங்கின.
.
இங்கு சீனா $2 பில்லியன் முதலீட்டைஇதில் செலவிடவுள்ளது. பதிலுக்கு சீனா 25 வருடங்களுக்கு இந்த துறைமுகத்தின் பெரும்பான்மை உரிமையை கொண்டிருக்கும்.
.
இந்த உடன்படிக்கை தற்போது அமெரிக்காவில் பெரும் விசனத்தை ஏற்படுத்தி உள்ளது. எப்போதுமே இஸ்ரேலின் பாதுகாப்புக்கும், உதவிக்கும் வரும் அமெரிக்காவுக்கு எதிரான சீனாவுக்கு இஸ்ரேல் தனது துறைமுகத்தை வழங்கியதே இந்த வெறுப்புக்கு காரணம்.
.
கடந்த காலங்களில் இந்த துறைமுகத்தை அமெரிக்க கடற்படை பெரிதும் பயன்படுத்தி வந்துள்ளது. ஆனால் இந்த துறைமுகம் சீனாவின் கட்டுப்பாட்டுள் வந்த பின்னர் அமெரிக்காவின் கடற்படை கப்பல்கள் அங்கு செல்வதை தவிர்க்கும் என்று கூறப்படுகிறது.
.
அமெரிக்க அழுத்தம் காரணமாக இந்த துறைமுக இணக்கத்தை இஸ்ரேல் தற்போது மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்து உள்ளது. ஆனாலும் இந்த இணக்கத்தில் இருந்து இலகுவில், பெரும் நட்டஈடு வழங்காது, இஸ்ரேல் வெளியேற முடியாது. சீனா ஏற்கனவே முதலீடுகளை செய்து, பணிகளை ஆரம்பித்து உள்ளது.
.
இஸ்ரேலின் Ashdod துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் பணியையும் சீனா $876 மில்லியனுக்கு ஏற்கனவே வென்றுள்ளது.
.