இலங்கையில் புதுவருடம் முதல் Plug G

TypeG

இலங்கையில் 2019 ஆம் ஆண்டு தை மாதம் முதலாம் திகதி முதல் type G வகை 13-amp மின் plugs மற்றும் sockets வகைகள் மட்டுமே சட்டப்படியானதாக இருக்கும். இதுவரை பாவனையில் இருந்துவந்த உருளை (round) pin களுக்கு பதிலாக புதிய plugs மற்றும் sockets செவ்வக (rectangle) pin களை கொண்டிருக்கும்.
.
முதலாம் திகதி முதல் type G வகை plugs மற்றும் sockets மட்டுமே சட்டப்படி விற்பனை செய்ய முடியும். அதுமட்டுமன்றி கடைகளில் விற்பனை செய்யப்படும் தொலைக்காட்சி, வானொலி போன்ற மின் தளபாடங்களும் type G வகை plus மற்றும் sockets களை மட்டுமே கொண்டிருக்கும்.
.
பழைய வகை, type D, plugs மற்றும் sockets இறக்குமதி செய்வது 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் திகதி முதல் தடை செய்யப்பட்டு இருந்தது. இவற்றின் விற்பனை 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் திகதி முதல் தடைசெய்யப்பட இருந்தது. ஆனால் விற்பனை தடை பின்னர் 2018 ஆம் ஆண்டு இறுதிவரை நீடிக்கப்பட்டது.
.
இப்புதிய சட்டம் புதிய வீட்டு வேலைப்பாடுகளுக்கு மட்டுமே நடைமுறையில் இருக்கும். பழைய வகை plugs மற்றும் socket கொண்டுள்ள வீடுகள் தொடர்ந்தும் பழைய வகையை பயன்படுத்தலாம். ஆனால் அவற்றுக்கு புதிய தொலைக்காட்சி, வானொலி போன்ற மின் பொருட்கள் கொள்வனவு செய்வது கடினமாக இருக்கும். இவர்கள் மாற்றுவழி ஒன்றை கையாளல் வேண்டும்.
.
Type G வகை plugs மற்றும் sockets களே Bahrain, சீனா, ஹாங் காங், மலேசியா, கட்டார், சிங்கப்பூர், UAE, UK ஆகிய நாடுகளில் பாவனைக்கு உள்ளன. இவை 240 V மற்றும் 50 Hz அளவுகளை கொண்டவை.
.
கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் type A, மற்றும் type B பாவனையில் உள்ளன. இவை 120 V, மற்றும் 60 Hz அளவுகளை கொண்டவை.

.