nVIDIA உலக பங்கு சந்தையில் முதலாவது நிறுவனம்

nVIDIA உலக பங்கு சந்தையில் முதலாவது நிறுவனம்

nVIDIA என்ற பெருமளவில் AI (Artificial Intelligence) தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய கணனி chip தயாரிக்கும் நிறுவனம் உலக அளவில் முதலாவது பங்குச்சந்தை (stock) பெறுமதி கொண்ட நிறுவனம் ஆகியுள்ளது.

நேற்று செவ்வாய் இதன் பங்குச்சந்தை பெறுமதி $3.334 ட்ரில்லியன் ($3,334 பில்லியன்) ஆகியுள்ளது. இரண்டாம் இடத்தில் $3.317 ட்ரில்லியன் பங்குச்சந்தை பெறுமதி கொண்ட Microsoft நிறுவனமும், மூன்றாம் இடத்தில் $3.286 ட்ரில்லியன் பெறுமதி கொண்ட Apple நிறுவனமும் உள்ளன.

நேற்று செவ்வாய் மட்டும் nVIDIA பங்குச்சந்தை பெறுமதி $113 பில்லியனால் அதிகரித்து உள்ளது.

இரண்டு கிழமைகளுக்கு முன் nVIDIA பங்கு ஒன்றின் விலை $1,200 வரையில் இருந்தது. அந்த பழைய பங்கு ஒவ்வொன்றுக்கும் புதிய 10 பங்குகள் வழங்கப்பட்டன (1 க்கு 10 stock split). அதனால் புதிய பங்கு ஒன்றின் விலை $120 ஆனது. அந்த புதிய பங்கு நேற்று செவ்வாய் $135.58 ஆகியது.

அமெரிக்காவை தளமாக கொண்ட nVIDIA Jensen Huang என்ற தாய்வானில் பிறந்த சீனராலும் மேலும் இருவராலும் 1993 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.