1885ம் ஆண்டு DJA என்று ஆரம்பிக்கப்பட்டு பின்னர் 1896ம் ஆண்டு முதல் Dow Jones Industrial Average என்று அல்லது DOW என்று சாதாரணமாக அழைக்கப்படும் DOW சுட்டி தெரிந்து எடுக்கப்பட்ட 30 அமெரிக்க பங்குச்சந்தை பங்குகளின் விலைகளை கொண்டு கணிக்கப்படுவது.
இந்த சுட்டி கணிப்பில் முதலில் உள்ளடக்கப்பட்ட இரண்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் Intel நிறுவனமும் Microsoft நிறுவனமும் ஆகும். அப்போது கணினியின் CPU chip தயாரிக்கும் Intel தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருந்தது. CPU கணினியின் மூளையாக கருதப்படும்.
ஆனால் Intel புதிய artificial intelligence (AI) தொழில்நுட்பத்தில் பின்னடைந்தது. அதேவேளை nVIDIA போன்ற புதிய நிறுவனங்கள் உச்சத்தை அடைந்தன.
2000ம் ஆண்டில் இருந்த பங்கு ஒன்றின் விலையின் 70% பெறுமதியை Intel தற்போது இழந்துள்ளது.
தனது நெருக்கடியை குறைக்க Intel 15% ஊழியர்களை பதவி நீக்கம் செய்கிறது.