வழக்கமான சர்வதேச இராசதந்திர விதிமுறைகளுக்கு அப்பால் முரண்டுபட்டு செயல்படும் வடகொரியாவை எப்படி கையாள்வது என்று தெரியாமல் குழம்பியுள்ளது அமெரிக்கா. பகிரங்கமாக வடகொரியாவின் நடவடிக்கைகளை பலமாக சாடிவரும் அமெரிக்கா, தாம் அளவுக்கு அதிகம் வடகொரியாவை சீண்டி தேவையற்ற யுத்தம் ஒன்றை ஆரம்பித்து விடுவோமோ என்றும் கவலை கொள்கிறது. ஒருபுறம் அணுகுண்டு வீசக்கூடிய B-52 மற்றும் B-2 விமானங்களையும் அதிநவீன F-22 யுத்த விமாங்களையும் தென்கொரியா மேலாக அண்மையில் பறக்க விட்டாலும், மறுபுறம் கொரிய குடா பகுதியில் தமது இராணுவ நடவடிக்கைகளை குறைக்கவும் தொடங்கியுள்ளது […]
பொருளாதாரத்தில் முடங்கிப்போகும் ஐரோப்பிய நாடுகளில் சைப்பிரசும் அடங்கும். கல்விமான்கள் உலகம் வங்கிகளை ஒரு பாதுகாப்பானதும் புத்திசாலிகளின் பண வைப்பிடமாகவும் அடையாளம் காண்பதுண்டு. ஆனால் சைப்பிரஸ் அது பொய்யாகி விட்டது. பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தப்பும் நோக்கில் அவ்வரசு 100,000 யூரோக்களுக்கும் அதிகமாக Bank of Cyprus PCL, இல் வைப்பு வைத்திருந்தோரின் முதலில் 40% ஐ ‘வரி’ ஆக அபகரிக்கிறது. மிகுதி 60% கூட வைப்பாளார்களுக்கு பணமாக கிடைக்கப்போவது இல்லை. பதிலாக அந்த வங்கிகளில் அவர்களின் 60% இக்கு […]
இலங்கையை பிறப்பிடமாக கொண்ட ராஜ் ராஜரட்ணம் (Raj Rajaratnam) என்பவர் அமெரிக்காவில் பங்கு சந்தை மோசடிகள் காரணமாக 11 வருட சிறையை அனுபவித்து வருகிறார். இவர் பெரிய நிறுவனக்களின் தரவுகளை களவாக பெற்று அதற்கு ஏற்ப அந்த நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு அல்லது விற்பனை செய்து அதன் மூலம் சட்டவிரோத இலாபம் பெற்றுவந்துள்ளார். அந்த குற்றம் நிறுபிக்கப்பட்டதாலேயே அவர் 11 வருட சிறை தண்டனை பெற்றார். இப்போது அவரின் தம்பியார் ரெங்கன் என்பவர் மீது வழக்கு தொடர்கிறது அமெரிக்க […]
இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான இராயதந்திர உறவு முறிவு இப்போது ஐரோப்பிய நாடுகளையும் உள்ளே இழுக்கிறது. Massimiliano Latorre, Salvatre Girone என்ற இரண்டு இத்தாலிய படையினர் கடந்த வருடம் (2012) இரண்டு இந்திய மீனவர்களை இந்தியாவின் தென் பகுதி கடலில் வைத்து சுட்டு கொன்றிருந்தனர். இத்தாலியர்களின் கூற்றுப்படி, இவர்கள் இந்திய மீனவர்களை கடல் கொள்ளையர் என்று கருதியிருந்திருந்தனர். அத்துடன் இத்தாலியின் கூற்றுப்படி, சம்பவம் நடந்த பகுதி சர்வதேச கடல், அதனால் இத்தாலியிலேயே இந்த விசாரணை நடாத்தப்படல் அவசியம். ஆனால் இவர்களை கைது செய்த […]
ஜோர்ஜ் புஷ் (George Bush) ஈராக்கிய சதாம் மீது நடாத்திய யுத்தம் காரணமாக அமெரிக்காவுக்கு ஏற்பட்ட மொத்த செலவு U$ 2.2 trillion என்கிறது Brown University யின் Watson Institute. இதில் யுத்தத்துக்காக நேரடியாக செலவிட்ட தொகை $1.7 trillion, யுத்தத்தால் பாதிக்கப்பட்டோரை 40 வருடங்கள் வரை பராமரிக்க கணிக்கப்பட்ட தொகை $490 பில்லியன். இந்த $ 2.2 trillion தொகையானது ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட தொகையின் சுமார் 40 மடங்காகும். அதாவது ஆரம்பத்தில் புஷ் குழு யுத்த செலவு சுமார் $50 முதல் […]
சீனாவில் உள்ள Yunnan மாநில Coca Colaவின் பிரிவுக்குள் அடங்கிய விநியோக வாகனங்கள் சட்டவிரோதமாக GPSகளை (Global Positioning System) பாவிக்கின்றன என்று குற்றம் சாட்டுகிறது Yunnan மாநில அரசு. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் சீனாவின் முக்கிய, பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட நிலையங்களை வரைபடங்களில் இலகுவில் அடையாளப்படுத்த முடியும். அதனால் சீனாவில் மேற்கு நாட்டு சேவையான GPS பாவனைக்கு மெரும் தடை உண்டு. GPS மேற்கு நாட்டு செய்மதிகளை பாவித்து செயல்படுவன. GPS ஆனது அமெரிக்கா இராணுவத்தால் உருவாக்கப்பட்டது. அத்துடன் இது மேற்கு நாடுகளின் […]
Google நிறுவனத்தின் Street View என்ற பிரிவே உலகப்படத்தையும், சில நாடுகளில் வீதிகளை படம்பிடித்தும் Google Map இல் வெளியிடுகிறது. இவ்வாறு வீதிகளை படம்பிடிக்க ஒவ்வொரு வீதியிலும் Camera பொருத்திய வாகனங்கள் செல்லும். அவ்வாறு செல்லும் வாகனங்கள் படம் பிடித்தலுடன் மட்டும் நின்றுவிடாது, வீதியின் இருபுறத்தேயும் உள்ள வீடுகளின் Router களில் உள்ள தனியார் விபரங்களையும் எடுத்து சென்றுவிட்டது. இது தவறுதலாக நடந்துவிட்டது என்கிறது Google. ஆனால் பல அமெரிக்க மாநில அரசுகள் அதை நம்புவதாக இல்லை. இப்போது Google இதற்கு […]
வெள்ளையர்களுக்கு மட்டும் என பொது சேவைகள் இருந்த காலம் போய்விட்ட இக்காலத்தில் இஸ்ரவேலில் இனவாத பயணிகள் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அங்கு பாலஸ்தினியர்களுக்கு மட்டும் என பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதாவது பஸ் நிலையங்களில் பாலஸ்தினியர்களுக்கு ஒரு வரிசை, யூதர்களுக்கு இன்னோர் வரிசை. இந்த சேவை மத்திய வகுப்பு தொழில் புரியும் பாலஸ்தினியர்களை West Bank இல் இருந்து Tel Aviv இக்கு தினமும் எடுத்துச்செல்லும். இதில் யூதர்கள் விரும்பினால் பயணிக்கலாம் ஆனால் யூதர்களுக்குரியத்தில் பாலஸ்தினியர்கள் பயணிக்கக்கூடாது. இந்த சேவையை Afikim […]
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இந்திய அரசின் விசாரணை, இந்தியாவில் இயங்கும் Cadbury’s என்ற chocolate தயாரிக்கும் நிறுவனம் இல்லாத ஒரு தொழிற்சாலையை பயன்படுத்தி $46 மில்லியன் வரி ஒழிப்பு செய்துள்ளது. Cadbury’s இனது ஆவணங்களின்படி இவர்களின் Himachal Pradesh தொழில்சாலை 2010 ஆம் ஆண்டு பங்குனி 31 முதல் chocolate உற்பத்தியை ஆரம்பித்துள்ளது. ஆனால் அந்த தொழில்சாலைக்கு முறைப்படி அரச உரிமை அப்போது கிடைத்திருக்கவில்லை. அவ்வகை அரச உரிமை 2011 ஆம் ஆண்டு தை மாதம் 14 ஆம் திகதியே அவர்களுக்கு கிடைத்துள்ளது. […]