ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு முதல்படியாக யுக்கிறேனுடன் வர்த்தக உடன்படிக்கை ஒன்றில் ஒப்பமிட ஐரோப்பிய ஒன்றியம் முனைந்தது. ஆனால் ஆட்சியில் இருக்கும் ரஷ்யா சார்பு அரசு அந்த ஒப்பமிடலை இழுத்தடித்து வந்தது. அதனை தொடர்ந்து யுக்கிரேனின் மேற்கு சார்ந்த எதிர்கட்சி மேற்கின் ஆதரவுடன் போராட்டங்களில் இறங்கியுள்ளது. இதை கலைக்க யுக்ரேன் அரசு முனைந்து வருகிறது. எகிப்தில் ஜனாயக முறைப்படி ஆட்சிக்கு வந்த அரசை கவிழ்த்த இராணுவ புரட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை ஆதரிக்காத மேற்கு யுக்கிறேனில் மட்டும் ஆர்ப்பாட்டகாரர்களை பாராட்டுகிறது. […]
December 3, 2013 அன்று அமெரிக்காவின் federal நீதிபதி Stephen Rhodes $18 பில்லியன் அளவில் கடனில் மூழ்கி bankruptcy ஆகவுள்ள Detroit நகர அரசு அதன் முன்னாள் ஊழியர்களின் ஓய்வூதியங்களை பெருமளவில் குறைக்க அனுமதி வழங்கியுள்ளார். மதிய, மாநில மற்றும் நகர மட்டங்களில் பல சட்டங்கள் இவ்வகை உழியர்களின் ஓய்வூதியங்களை பாதுகாத்திருந்தும், இந்த தீர்ப்பு அவற்றை பறித்துள்ளது. இந்த தீர்ப்பை முன்னோடியாக கொண்டு மேலும் பல மாநில மற்றும் நகர அரசுகள் தமது முன்னாள் உழியர்களுக்கான […]
தென்-ஆபிரிக்காவில் பிறந்து அப்போது அந்நாட்டை ஆண்ட வெள்ளையர்-மட்டும் என்ற ஆட்சிக்கு எதிராக அகிம்சை முறையில் போராடி 27 வருடங்கள் சிறை சென்று இறுதியில் அந்நாட்டின் ஜனாதிபதியான நெல்சன் மண்டேலா தனது 95 ஆவது வயதில் வியாழக்கிழமை இரவு 8:50 மணிக்கு காலமானார். 1918 ஆம் ஆண்டு July 18 ஆம் திகதி பிரித்தானியர் ஆட்சியின் கீழ் பிறந்த இவர் 1962 இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தே போராட்டத்தில் ஈடுபட்ட இவர், விடுதலை செய்யப்பட்டு […]
சீனாவின் புதிய கிழக்கு சீன கடலின் மேலான வான் பாதுகாப்பு எல்லைக்குள் செல்லும் அமரிக்க விமானக்களை சீனாவின் வேண்டுகோளுக்கு அமைய முன்கூட்டியே அறிவிக்குமாறு ஒபாமா அரசு கேட்டுள்ளது. அமெரிக்க வான்படை சீனாவின் இந்த புதிய வான் பரப்பு எல்லை சட்டத்தை மீறினாலும், அமெரிக்க பயணிகள் மீறுவதை அமெரிக்கா விரும்பவில்லை. ஆனால் ஜப்பான் அரசு தமது பயணிகள் விமானக்களை அவ்வாறு சீனாவுக்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டாம் என கூறியுள்ளது. அதேவேளை தாம் இந்த வான் பரப்பை தொடர்ச்சியாக கண்காணிக்க தொடங்கியுள்ளதாக […]
கடந்த வாரம் சீனா நடைமுறைப்படுத்திய கிழக்கு சீன கடலின் மேலான வான் பாதுகாப்பு எல்லையை அமெரிக்கா மீறியுள்ளது. இன்று செவ்வாய் கிழமை Guam இல் இருந்து புறப்பட்ட இரண்டு அமெரிக்க B52 குண்டுபோடும் விமானங்கள் இந்த சீன வான் பரப்பை உத்தரவின்றி கடந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த பறப்பு சீனாவின் அறிவிப்புக்கு முன்னரே திட்டமிடப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான Pentagon கூறியுள்ளது. அத்துடன் இப்பகுதி சர்வதேச எல்லைக்கு உட்பட்டது எனவும் தாம் இங்கு தொடர்ந்தும் பறக்கவுள்ளதாகவும் Pentagon கூறியுள்ளது. சீனா […]
சீனாவின் உதவியுடன் அமெரிக்கா ஈரான் விவகாரத்தில் ஒரு இணக்கத்தை காணும் அதே வேலையில் சீன கிழக்கு சீன கடலில் ஒரு வான் பாதுகாப்பு வலயத்தை உருவாக்கியுள்ளது (East China Sea Air Defense Identification Zone). இந்த வலயம் சீன எல்லைகளுக்கு வெளியே உள்ளது. அதுமட்டுமன்றி சர்ச்சைக்குரிய Diaoyu தீவுகளும் இந்த வலயத்துள் அடக்கப்பட்டுள்ளது. இதை சீனா கடந்த சனிக்கிழமை அறிவித்துள்ளது. சீனாவின் அறிவிப்புப்படி இந்த வலையத்துள் புகும் எந்தவொரு விமானமும் சீன அரசின் அனுமதியை பெற்றிருக்க […]
ஜெனீவாவின் நேரப்படி ஞாயிறு காலை அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, மற்றும் சீனா ஆகிய 6 பலம்மிக்க நாடுகளும் ஈரானும் அணுசக்தி விடயத்தில் 6-மாத கால உடன்படிக்கை ஒன்றுக்கு இணங்கியுள்ளன. ரசியாவும், சீனாவும் ஈரானின் நலன்களை பாதுகாக்க மற்றைய 4 நாடுகளும் ஈரானின் எதிர்ப்பு நாடுகளின் நலன்களை பாதுகாத்தன. வழமை போல் இந்த உடன்படிக்கையும் மூடிய அறைகளுள் பேசி தீர்மானிக்கப்பட்டுள்ளது. விபரங்கள் முற்றாக வெளியிடப்படவில்லை. உண்மையில் இந்த பேச்சுவார்த்தை 2006 ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த […]
JPMorgan வங்கி உலகில் இரண்டாவது பெரியது, அமெரிக்காவில் முதலாவது பெரியது. இதன் ஆரம்பம் 1895. 2000 அம்ம ஆண்டில் இதுவும் அமெரிக்காவின் மற்றுமோர் வங்கியான Chase Manhattan உடன் இணைந்திருந்தது. 2012 ஆம் ஆண்டளவில் இதன் மொத்த சொத்துக்கள $2500 பில்லியனுக்கும் அதிகம் (1.5 ரில்லியன்). 2005 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு காலங்களில் JPMorgan பல பெரு நட்டங்களை எதிர்பார்க்கக்கூடிய முதலீடுகளில் பங்கெடுத்தது. வேறு பல வங்கிகளும் வீடு அடமான நிறுவனக்களும் இவ்வாறு […]
அண்மையில் சீனாவின் CHEC (China Harbor Engineering Company) $500 மில்லியன்னுக்கும் அதிகம் பெறுமதியான 3 கட்டமைப்பு வேளைகளில் ஈடுபடவுள்ளது. இந்த உடன்படிக்கை November 14ம் திகதி ஏற்படுத்தப்பட்டதாக சீனாவின் Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முதலாவது கட்டமைப்பு மாத்தறையில் ஒரு 250 அறைகளை கொண்ட ஒரு உல்லாச விடுதியை கட்டுவதாகும். இதில் ஒரு வரிகள் அற்ற வர்த்த நிலையமும் அமையும். இதே சீன நிறுவனம் 209 அறைகள் கொண்ட இன்னுமோர் விடுதியை இங்கு இந்த வருட […]
சீனாவின் தற்போதைய அதீத வளர்ச்சிக்கு தந்தையான டெங் சியாஒ பிங் (Deng Xiao Ping) அறிமுகப்படுத்திய கடுமையான சட்டங்களில் ஒன்று ஒரு-குழந்தை சட்டம். இந்த சடத்தின் கீழ் ஒரு தம்பதியினர் ஒரு குழந்தையை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். தவறின் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். பாரிய குற்றப்பணம் செலுத்துதல், மானியங்கள் குறைப்பு, பாடசாலை வசதிகள் மறுப்பு போன்றன இந்த தண்டனைகளில் அடங்கும். இந்த சட்டம் Hong Kong, Macau போன்ற விசேட பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இரணை பிள்ளைகளும் இந்த […]