இன்று 26 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்திய குடியரசு தினத்தில் கலந்து கொள்கிறார் அமெரிக்க ஜானதிபதி ஒபாமா. அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் இந்திய குடியரசு தினத்தில் கலந்து கொள்வது இதுவே முதல் தடவை. அது மட்டுமல்லாது அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் தனது ஆட்சிக்காலத்தில் இரு தடவைகள் இந்தியா செல்வது இதுவே முதல் தடவை. . ஒபாமாவை வரவேற்கும் இந்திய பிரதமர் மோடிக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் வரை அமெரிக்கா விசா கொடுக்க மறுத்து வந்திருந்தது. . இந்தியாவில் […]
சீனாவின் பங்குச்சந்தை (Shanghai Index) நேற்று (2015/01/19) 7.7% வீதத்தால் வீழ்ந்துள்ளது, அதாவது 260 புள்ளிகளால் வீழ்ந்துள்ளது. 2008 ஆம் ஆண்டுக்கு பின் இதுவே மிகப்பெரிய வீழ்ச்சி ஆகும். . இந்த வீழ்ச்சிக்கு பல காரணிகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. முதலாவது சீன அரசு சட்டத்துக்கு முரணாக வளர்ந்துவரும் margin trading முறையை கட்டுப்படுத்த முன்வந்துள்ளமை. உதாரணமாக 1 மில்லியன் Yuanஐ (சீன நாணயம்) முதலிடும் ஒருவரை அவரின் பங்குச்சந்தை முகவர் 2 மில்லியன் Yuanஇக்கு பங்குகளை […]
முதலில் பாவனைக்கு வந்திருந்தது முனைக்கு-முனை பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட (dedicated) copper கம்பிகளால் தொடுக்கப்பட்ட தொலைபேசி முறைமை. அழைக்கப்படும் நபர் அழைக்கும் நபரின் அடுத்த வீட்டில் இருந்தால் என்ன, அடுத்த கண்டத்தில் இருந்தால் என்ன, அவர்களின் தொலைபேசிகள் copper wire களினால் உரையாடல் தொடரும் வரை இணைக்கப்பட்டு இருந்தன. முதலில் இந்த இணைப்பு வேலைகளை மனித இணைப்பாளர்களே செய்து வந்திருந்தனர். பின்னர் தொழில் நுட்பம் நிறைந்த இலத்திரனியல் உபகரணங்கள் இந்த இணைப்புக்களை இணைத்து வந்தன. இணைப்பை மனிதன் இணைந்தால் […]
ஜோர்டான் (Jordan) நாட்டால் இன்று 15 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா. Security Council இல் முன்வைத்த இஸ்ரவேல்-பாலஸ்தீனியர் விவகாரத்துக்கான தீர்வு 1 வாக்கு குறைவால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்வு அடுத்த படியை அடைய மொத்தம் 15 வாக்குகளில் குறைந்தது 9 வாக்குகளை பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு 9 வாக்குகளை இந்த திட்டம் பெற்றிருந்தாலும், அமெரிக்கா இதை veto மூலம் நிராகரித்து இருக்கும். ஆனால் அமெரிக்கா veto பாவிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதை விரும்பி இருந்திருக்கவில்லை. . இந்த […]
அமெரிக்கா கட்டிய பனாமா கால்வாயை மிஞ்சும் வகையில் நிக்கரகுவாவை ஊடறுத்து புதியதோர் கால்வாயை கட்ட இன்று அடிக்கல் நாட்டியுள்ளது சீனா. நிக்கரகுவாவின் சன் குவான் (San Juan) ஆற்றையும் நிக்கரகுவா வாவியையும் உள்ளடக்கி செல்லப்போகும் இந்த கால்வாய், அத்திலாந்திக் சமுத்திரத்தையும் பசிபிக் சமுத்திரத்தையும் இணைக்கப்போகும் இரண்டாவது கால்வாய் ஆகும். . ஆதியில் அமெரிக்கா இந்த வழியில் கால்வாய் ஒன்றை அமைப்பதை ஆராய்ந்து இருந்தது. ஆனால் பின்னர் பனாமாவை தெரிந்து கொண்டது. . 2013 ஆம் ஆண்டு ஜூன் […]
SONY நிறுவனம் அண்மைக்காலங்களில் Hollywood திரைப்பட தயாரிப்பில் இறங்கியிருந்தது. 1989 ஆண்டு முதல் SONY பல திரைப்படங்களையும் தொலைக்காட்சி நாடகங்களையும் வேறு பல நிருவனங்களுடன் இணைந்து தயாரித்து இருந்தது. SONY அண்மையில் The Interview என்ற ஒரு நகைச்சுவை படத்தை தயாரித்து இருந்தது. இந்த படம் வரும் நத்தார் தினத்தன்று திரையிடப்பட்டு இருந்தது. . இந்த படத்தின் கதைப்படி வெளிநாடவர் இருவர் பத்திரிகையார் உருவில் வடகொரிய சென்று, அந்நாட்டு தலைவர் Kim Jong-Un உடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி […]
1961 ஆம் ஆண்டு துண்டிக்கப்பட்ட அமெரிக்கா-கியூபா உறவை மீண்டும் புதிப்பிக்கும்படி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இன்று பணித்துள்ளார். இதன் முதல் கட்டமாக கியூபாவின் தலைநகர் ஹவானாவில் இருந்த அமெரிக்க தூதுவர் நிலையம் மீண்டும் ஆரம்பிக்கப்படும். அத்துடன் அமெரிக்கர்கள் கியூபா செல்லவும் இலகுவாக அனுமதிக்கப்படும். கடந்த 18 மாதங்களாக நடாத்திய பேச்சுவார்த்தைகளின் பயனாகவே இந்த முடிபு எடுக்கப்பட்டுள்ளது. . இந்த புது உறவின் ஒரு அங்கமாக அமெரிக்கா தன்னிடம் கைதிகளாக இருந்த 3 கியூபா நாட்டவர்களை விடுதலை செய்யவுள்ளது. […]
அமெரிக்காவில் இன்று வெளியிடப்பட்ட Senate Report, அவர்களால் கைது செய்யப்பட்ட al-Queda உறுப்பினர் மீது சட்டங்களுக்கு அப்பால் CIA செய்த கொடூர விசாரணைகள் புதிதாக உண்மைகள் எதையும் கொடுக்கவில்லை என்கிறது. al-Quedaவின் தலைவர் ஒசாமாவின் மறைவிடத்தை கண்டுபிடித்ததிலும் CIAயின் விசாரணைகளால் பெறப்பட்ட உண்மைகள் பயன்படவில்லை என்கிறது இந்த அறிக்கை. . சுமார் 120 சந்தேகநபர்கள் மீது நடாத்தப்பட்ட water-boarding (கைதியின் முகத்தை மேலே பார்க்க வைத்து முகத்தில் நீண்ட நேரம் பெருமளவு நீரை ஊற்றுதல்), ஒரு வாரகாலம் […]
அமெரிக்காவின் NASA இன்று காலை Florida நேரப்படி 7:05 மணிக்கு செலுத்திய Orion என்ற விண்கலம் தனது பரீட்சையை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த பரீட்சை புதன் கோளுக்கு மனிதரை எடுத்துச்செல்லும் நோக்கிற்கான முதல் பரீட்சையே. . மொத்தம் 4 மணித்தியாலங்கள் 24 நிமிடங்கள் பயணித்த இந்த கலம் இரண்டு தடவைகள் பூமியை வலம் வந்து இருந்தது. இது முதல் சுற்றில் 270 km உயரத்திலும் இரண்டாம் சுற்றில் 5794 km உயரத்திலும் பயணித்து இருந்தது. தற்போது உலகை […]
Transparency International என்ற ஊழல் எதிர்ப்பு குழு நடாத்திய இந்த ஆண்டு கணிப்பில் இலங்கை 38 புள்ளிகளை மட்டும் பெற்று 85வது இடத்தை அடைந்துள்ளது. Burkina Faso, இந்தியா, Jamaica, Peru, Philippines, Thailand, Trinidad and Tobago, Zambia போன்ற நாடுகளும் 38 புள்ளிகளை பெற்று 85 இடத்தை இலங்கையுடன் இணைந்து பெற்றுள்ளன. மொத்தம் 174 நாடுகள் இந்த கணிப்பில் உள்ளடக்கப்பட்டு இருந்தன. . Denmark 92 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தையும், New Zealand […]