கடந்த 21 ஆம் திகதி Prince என்று ஆங்கில இசை உலகில் அழைக்கப்படும் Prince Rogers Nelson என்பவர் மரணமாகியிருந்தார். அமெரிக்காவின் Minneapolis நகரில் பிறந்த இவர் இசைதுறை மூலம் பெருமளவு பணம் சம்பாதித்திருந்தார். ஆனால் இவருக்கு குடும்பமோ, பிள்ளைகளோ இல்லை. . இன்று அவரின் சகோதரி Tyka Nelson நீதிமன்றம் ஒன்றுக்கு வழங்கிய தரவுகளின்படி Prince தனது சொத்துக்குளுக்கு வாரிசு யார் என்பதை குறிக்க உயில் எதையும் எழுதி வைக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. அதனால் இவரின் […]
இந்தியாவை விட்டு தப்பியோடி பிரித்தானியாவில் வாழும் இந்திய வர்த்தகர் Vijay Mallyaவின் இந்திய கடவுச்சீட்டை இந்தியா இரத்து செய்துள்ளது. இவர் இந்திய வங்கிகளில் சுமார் $1.3 பில்லியன் கடன் பெற்று பின் அவற்றை திருப்பி செலுத்தாது தப்பி ஓடியுள்ளார். இவர் தற்போது பிரித்தானியாவில் உள்ள சுமார் $15 மில்லியன் பெறுமதியான மாளிகையில் வாழ்கிறார். . Kingfisher விமானசேவை நட்டத்தில் மூழ்கிய இவரின் மிகப்பெரிய நிறுவனம். அத்துடன் மதுபான நிறுவனம், Formula 1 காரோட்ட குழு என வேறு […]
அமெரிக்க நாணய தாள்களை தற்போது அலங்கரிப்பது வெள்ளை இன முன்னாள் தலைவர்களே. அமெரிக்காவின் $1 தாளில் இருப்பது George Washington (முதலாவது ஜனாதிபதி), $5 தாளில் இருப்பது Abraham Lincoln, $10 தாளில் இருப்பது Alexander Hamilton, $20 தாளில் இருப்பது Andrew Jackson, $50 தாளில் இருப்பது Ulysses Grant, $100 தாளில் இருப்பது Benjamin Franklin. . சிறுபான்மை இனங்களை உள்ளடக்கவும், அமெரிக்காவில் கருப்பு இனத்தின் பங்களிப்பை அடையாளப்படுத்தவும் அமெரிக்கா Harriet Tubman (1822 […]
உலகிலேயே மிகப்பெரிய வைரமாகிய கோகினூர் (koh-i-noor) வைரம் பிரித்தானியாவுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பு என்கிறது தற்போதைய இந்திய அரசு. . இந்த வைரத்தின் ஆரம்பம் திடமாக தெரியாதுவிடினும், இது 13 ஆம் நூற்றாண்டில் ஆந்திராவில் உள்ள Guntur என்ற இடத்தில் எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று பொதுவாக கருதப்படுகிறது. வேறு சிலர் இதை 5,000 ஆண்டுகள் பழமையானது (3000 BC) என்கின்றனர். . ஆரம்பத்தில் 793 கரட் (158.6 கிராம்) எடை கொண்ட இது பல்வேறு ஆட்சியாளர் கைமாறி இறுதியில் […]
இன்று ஞாயிரு கட்டாரின் (Qatar) உள்ள டோக (Doha) நகரில் இடம்பெற்ற OPEC பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்துவதன் மூலம் வீழ்ந்துவரும் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த இந்த கூட்டம் இடம்பெற்று இருந்தது. ஆனால் எண்ணெய் உற்பத்தியில் முக்கிய நாடு ஒன்றான ஈரான் இந்த கூட்டத்தில் பங்கு கொண்டிருக்கவில்லை. சியா முஸ்லீம் நாடான ஈரான் தனது உற்பத்தியை கட்டுப்படுத்தாதவிடத்து சுனி முஸ்லீம் நாடான சவுதியும் தனது எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்த முடிவு எடுக்கவில்லை. . செய்தி […]
கடந்த சில நாட்களாக பசுபிக் கடலின் மேற்கேயும், கிழக்கேயும் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் இடம்பெற்று வருகின்றன. இவற்றுள் பல சிறிய அளவிலானவை என்றாலும் சில மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கங்களாக இருக்கின்றன. . தென் அமெரிக்க நாடான எக்குவடோரை இன்று சனிக்கிழமை 7.8 Richter அளவிலான நிலநடுக்கம் தாக்கியுள்ளது. சுமார் 50 செக்கன்கள் இடம்பெற்ற இதற்கு இதுவரை 28 பேர் பலியாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. US Geological Service இந்த நடுக்கத்தின் மையம் சுமார் 19 km நிலத்துக்கு அடியில் […]
அண்மையில் சவுதியின் தலைவர் King Salman எகிப்து சென்றபோது அந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில், Tiran நீரிணைக்கு மேலாக, பாலம் ஒன்று அமைக்கும் திட்டம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. உண்மையில் இந்த அறிவிப்புக்கு பின்னால் பல இரகசியங்கள் இருந்தமை இப்போது தெரியவந்துள்ளது. . சவுதிக்கும் எகிப்துக்கும் இடையில், Tiran நீரிணையும் செங்கடலும் சந்திக்கும் பகுதியில் இரண்டு குடியிருப்புகள் அற்ற தீவுகள் உள்ளன. இந்த இரண்டு தீவுகளும் 1950 ஆம் ஆண்டு முதல் எகிப்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்துள்ளது. ஆனால் […]
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அடுத்த மாதம் ஜப்பான் செல்கிறார். அங்கு செல்வதன் முக்கிய நோக்கம் G7 கூட்டத்தில் கலந்துகொள்வது என்றாலும், அவர் ஹிரோஷிமாவில் உள்ள அணுக்குண்டு போடப்பட்ட இடத்துக்கும் செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் அவ்விடம் சென்ற அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் John Kerry அதுபற்றி ஒபாமா சிந்திப்பதாக கூறியுள்ளார். அவ்வாறு ஒபாமா குண்டு போடப்பட்ட இடம் செல்லின், இதுவே ஆட்சியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி அவ்விடம் செல்லும் முதல் நிகழ்வாகும். . அவ்வாறு ஒபாமா அங்கு […]
இன்று வெளியான Panama Paper தகவல்களின்படி CIA என்ற அமெரிக்க உளவு நிறுவனமும் பனாமா கணக்குகளை பாவித்து உள்ளது. Mossack Fonseca என்ற நிறுவனத்தின் கணக்குகள் மூலம் CIA தனது கையாட்களுக்கு பணம் வழங்கியுள்ளது. அதில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி றேகன் காலத்து Iran-Contra விடயமும் அடங்கும். . றேகனின் நிர்வாகம், இஸ்ரவேல் மூலம் ஈரானுக்கு ஆயுதங்கள் விற்று அந்த வருமானத்தின் ஒரு பகுதியை நிக்கரகுவா இடதுசாரி எதிர்ப்பு அரசுக்கு வழங்கியிருந்தது. இதை செய்தபோது ஆயுத விற்பனை […]
அமெரிக்காவின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ஒபாமாவிடம் நீங்கள் செய்த மிகப்பெரிய தவறு என்ன என்று கேட்டபோது லிபியாவிலேயே தான் பெரிய தவறு செய்துள்ளதாக கூறியுள்ளார். அதாவது லிபியாவின் கடாபியை 2011 ஆம் ஆண்டில் அழித்த தாம் அதற்கு பின்னரான அந்நாட்டின் நிர்வாகத்தை தம் கருத்தில் கொண்டிருக்கவில்லை என்றுள்ளார். . கடாபியின் காலத்தில் ஓரளவு சட்டம் ஒழுங்குடன் இருந்த லிபியா இன்று உடைந்து பலவேறு குழுக்களால் ஆளப்பட்டு வருகிறது. அந்த குழப்பத்தை பயன்படுத்தி IS அங்கு பெருமளவில் வளர்ந்துள்ளது. . […]