பிரித்தானியாவின் இலண்டன் மாநகரத்தின் நகரபிதாவாக Sadiq Khan என்பவர் இன்று வெள்ளி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரின் தலைமையில் போட்டியிட்ட Labor கட்சி 9 ஆசனங்களை வென்றிருந்தது. மொத்தத்தில் இவர்கள் 44% வாக்குகளை பெற்றிருந்தனர். Zac Goldsimth என்பவரின் தலைமயில் போட்டியிட்ட Conservative கட்சி 5 ஆசனங்களையும், 31% வாக்குகளையும் பெற்றிருந்தது. Green கட்சி 9% வாக்குளை பெற்றிருந்தது. . Labor ஆட்சியில் இருந்தபோது இவர் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர். இவர் Tooting தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். […]
மே மாதம் முதலாம் திகதி முதல் வேகமாக பரவிவரும் பெரும் காட்டுத்தீ சுமார் 90,000 மக்களை இடம்பெயர வைத்துள்ளது. கனடாவின் Alberta மாகாணத்தில் உள்ள Fort McMurray என்ற நகருக்கு அண்மையிலேயே இந்த காட்டுத்தீ இடம்பெறுகிறது. அவ்விடத்தில் தற்போது அவசரகால நிலைமை பிரகடனம் செய்யப்படுள்ளது. . இதுவரை சுமார் 1,600 கட்டடங்கள் இந்த தீக்கு இரையாகி உள்ளன. இந்த நகரில் இருந்து வெளியேற ஒரேயொரு பெரும்சாலை மட்டுமே இருப்பதால் அதுவும் நெருக்கடியில் உள்ளது. Beacon Hill என்ற […]
கடந்த நவம்பர் மாதத்தில் ஆபிரிக்காவின் Botswana என்ற நாட்டில் 1,109 கரட் வைரம் ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டு இருந்தது. இதை கனடாவின் அகழ்வு நிறுவனமான Lucara Diamond Corporation எடுத்திருந்தது. இந்த வைரம் சுமார் 3 பில்லியன் வருடம் பழமையானதாக இருக்கலாம் என்று கணிப்பிடப்பட்டுள்ளது. இது இதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்ட வைரங்களில் இரண்டாவது பெரியது என நம்பப்படுகிறது. . வரும் ஜூன் 29 அன்று ஏலத்தில் விற்பனை செய்யப்படப்போகும் இந்த வைரம் சுமார் $70 மில்லியன் பெறுமதியானதாக […]
அமெரிக்காவின் Johns Hopkins Medicine நிலைய ஆய்வார்கள் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றின்படி அமெரிக்காவின் மூன்றாவது பெரிய மரண காரணி வைத்தியசாலைகளில் இடம்பெறும் தவறுகள் என்று கணிப்பிடப்பட்டுள்ளது. தவறான மருந்துகளை கொடுத்தல், தவறான உறுப்புக்களை அறுவை செய்தல், தொற்று நோய்கள் பரவலை முறையாக கட்டுப்படுத்தாமை என பல காரணங்கள் இவ்வகை மரணங்களை தோற்றுவிக்கின்றன. . அமெரிக்காவில் வருடம் ஒன்றில் சுமார் 251,000 பேர் வைத்தியசாலை தவறுகள் காரணமாக மரணிக்கின்றனர். அதாவது நாள் ஒன்றில் சுமார் 700 அமெரிக்கர் […]
அமெரிக்காவின் விமானம்தாங்கி கப்பலான USS Stennisக்கும் அதற்கு பாதுபாப்பு வழங்கும் மேலும் 4 அமெரிக்க கடல்படை கப்பல்களுக்கும் Hong Kong துறைமுகம் செல்லும் அனுமதியை சீனா மறுத்துள்ளது. மே மாதம் 3 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதிவரை இந்த துறைமுகத்தில் தங்க அமெரிக்கா அனுமதி கேட்டிருந்தது. ஆனால் சீனா மறுத்துவிட்டது. . இந்த விமானம்தாங்கி கப்பல் இதற்கு முன்னர் தென்சீன கடலூடு சென்றிருந்தது. குறிப்பாக சீனா உரிமை கொள்ளும் புதிய தென்சீன பகுதிகளினூடு சீனாவின் […]
தனது கடல்படையை நவீனப்படுத்தி பலப்படுத்த ஆஸ்திரேலியா 12 புதிய Shortfin Barracuda வகை நீர்மூழ்கி கப்பல்களை கட்ட தீர்மானம் எடுத்திருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவிடம் நீர்மூழ்கிகளுக்கான நவீன தெழில்நுட்ப வசதிகள் இல்லை. அதனால் ஆஸ்திரேலியா தொழில்நுட்பம் கொண்ட நாடு ஒன்றுடன் இணைந்து நீர்மூழ்கிகளை தயாரிக்க முடிவு செய்தது. ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டன. இறுதியில் பிரான்சின் DCNS (Direction des Constructions Navales Services) தெரிவு செய்யப்பட்டுள்ளது. . இந்த 12 புதிய […]
இலங்கைக்கு $1.5 பில்லியன் ($1,500,000,000) கடன் உதவி செய்ய IMF முன்வதுள்ளது என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடனுக்கு பிரதியுபகாரமாக இலங்கை வரிகளை அதிகரித்து வரிமூலமான வருமானத்தை அதிகரிக்க ஒப்புக்கொண்டுள்ளது. அத்துடன் இழப்புகளில் மூழ்கியுள்ள அரச கூட்டுத்தாபனங்களையும் திருத்தி அமைக்க அரசு இணங்கியுள்ளது. . இணங்கியுள்ளபடி VAT (value-added tax) 12% இல் இருந்து 15% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டளவில் இலங்கை அரசால் சேகரிக்கப்பட்ட மொத்த வரி இலங்கை GDPயின் 10.8% ஆக இருந்துள்ளது. […]
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், பாண்டுச்சேரி ஆகிய நான்கு இந்திய மாநிலங்களில் வரும் நாட்களில் தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. அத்துடன் அசாம் மாநிலத்தில் தேர்தல் அண்மையில் முடிவடைந்து உள்ளது. . இந்த ஐந்து மாநிலங்களிலும் இந்திய தேர்தல் ஆணையாளரால் மொத்தம் 113 கோடி இந்திய ரூபாய்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த பணத்தை பயன்படுத்தி தேர்தல்களில் வாக்குக்களை கொள்வனவு செய்யக்கூடும் என்ற அச்சத்தாலேயே இவ்வாறு சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டன. பணம், மதுபானம் அல்லது பொருள்பண்டம் வழங்கி ஆதரவு எடுப்பதை தவிர்க்கவே இந்த […]
அண்மையில் வெளியான விஜயின் திரைப்படமான ‘தெறி’ திரையிடப்படல் கனடாவில் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. Scarborough, Brampton, Mississauga ஆகிய இடங்களில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால் அந்த திரை அரங்கு ஒன்றில் கெடுதியான வாயு பரவல் இடம்பெற்றதால் பார்வையாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, திரையிடலும் நிறுத்தப்பட்டது. பின்னர் Richmond Hill நகரில் இன்று மேலும் ஒரு திரையரங்கு அப்படத்தை திரையிடலை நிறுத்தி உள்ளது. பொலிசார் சம்பவத்தை விசாரணை செய்கிறார்கள். . முதல் 6 நாட்களில், உலக அளவில் இப்படம் சுமார் […]
USSR காலத்தில் ரஷ்யாவின் விண்கலங்கள் Kazakhstan நாட்டில் உள்ள ஏவுதளம் ஒன்றில் இருந்தே ஏவப்பட்டன. அப்போது Kazakhstan USSRஇன் அங்கமாகும். ஆனால் USSR உடைவின் பின் ரஷ்யா Kazakhstanனில் உள்ள ஏவுதளத்தை பயன்படுத்த வருடம் ஒன்றுக்கு சுமார் $117 மில்லியன் வாடகை செலுத்துகிறது. . அவ்வாறு வாடகை செலுத்துவதை தவிர்க்கவும், தம்நாட்டின் முழுக்கட்டுப்பாட்டில் ஏவுதளத்தை வைத்திருக்கவும் புதிதாக ஒரு தளத்தை ரஷ்யா கட்டியுள்ளது. குறைந்தது $5 பில்லியன் செலவில் அமைக்கப்பட்ட இந்த புதிய தளத்தில் இருந்து இன்று […]