USS Fitzgerald என்ற அமெரிக்காவின் யுத்த கப்பலும், பிலிப்பீன் நாட்டில் பதியப்பட்ட ACX Crystal என்ற கொல்கலன் காவும் பலசரக்கு கப்பலும் கடலில் மோதியதால் அமெரிக்காவின் யுத்த கப்பல் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. அத்துடன் சுமார் 7 அமெரிக்க படையினரையும் காணவில்லை என்று கூறப்படுகிறது. . உள்ளூர் நேரப்படி சனி காலை 2:30 மணியளவில், ஜப்பானின் Shizuoka கரையில் இருந்து 20 km தொலைவில் இந்த விபத்து இடம்பெற்று உள்ளது. . சுமார் 222 மீட்டர் நீளம் […]
கடந்த மாதம் தாம் சிரியாவில் வீசிய குண்டு ஒன்றுக்கு IS குழுவின் தலைவர் அபு பக்கர் அல் பக்டாடி (Abu Bakr al-Bagdadi) கொலை செய்யப்பட்டு இருந்திருக்கலாம் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு கருதுகிறது. இதை உறுதிப்படுத்த ரஷ்யா விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. இந்த செய்தியை ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு இன்று வெள்ளி அறிவித்து உள்ளது. . IS குழுவின் கூட்டம் ஒன்றை நோக்கி மே 28 ஆம் திகதி நடாத்திய தாக்குதல் ஒன்றுக்கே அல் பக்டாடி உட்பட […]
பிரித்தானியாவின் லண்டன் நகரில் உள்ள Grenfell Tower என்ற 24 மாடிகள் கொண்ட அடுக்குமாடியில் தீ பற்றிக்கொண்டதால் குறைந்தது 17 பேர் பலியாகி உள்ளனர் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் பலர் தற்போதும் காணாமல் உள்ளனர். . தீயை முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சுமார் 24 மணி நேரம் எடுத்தது. . தீக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. ஆனால் கடந்த நவம்பர் மாதத்தில் Grenfell Action Group என்ற குடியிருப்பாளர் குழு இவ்வகை ஆபத்து நிகழலாம் என்று […]
மேற்கு நாட்டு தரமான அரசியல் தலைவர்களுடன் ஒப்பிடக்கூடிய ஒருசில ஆசிய அரசியல் தலைவர்களுள் சிங்கப்பூரின் தந்தை Lee Kuan Yewவும் ஒருவர். அவர் ஒரு சிறிய, வறிய நகரமான சிங்கப்பூரை செழுமைமிக்க நாடாக மாற்றியவர். ஆனால் அவரின் பிள்ளைகளின் குடுப்ப சண்டை தற்போது பகிரங்கத்துக்கு வந்துள்ளது. . Lee Kuan Yewவின் முதல் மகன் (Lee Hsien Loong) தற்போது சிங்கப்பூரின் பிரதமர் ஆகவுள்ளார். இவர் தந்தையின் கட்சியான PAP (People’s Action Party) மூலம் 2004 […]
கட்டாருக்கு எதிராக சவுதி தலைமையில் எகிப்து, யேமென் ஆகிய நாடுகள் எடுத்த எதிர்ப்பு நடவடிக்கைகள் பிளவை மேலும் ஆழப்படுத்த ஆரம்பித்துள்ளது. அதேவேளை இந்த முரண்பாடு, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கும் புதிய தல
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது பிரித்தானிய உத்தியோகபூர்வ பயணத்தை (state visit) பின்போட விரும்புவதாக பிரித்தானிய பிரதமர் மேயிடம் கூறியதாக பிரித்தானிய பத்திரிகையான காடியன் (Guardian) கூறியுள்ளது. டிரம்ப் பிரித்தானியாவுக்கு சென்றால் அங்கு பலத்த எதிர்ப்பு ஊர்வலங்களை சந்திக்க நேரிடும் என்ற பயமே இந்த பின்னடிப்புக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. . ஆனால் வெள்ளைமாளிகையும், மேயின் அலுவலகமும் டிரம்பின் பயணம் குறித்தபடியே இடம்பெறும் என்று கூறியுள்ளன. ஆனால் இரு தரப்பும் டிரம்ப், மே இடையிலான தொலைத்தொடர்பு உரையாடல் […]
சீனா பாகிஸ்தானில் தனது One Road One Belt திட்டத்துக்காக கட்டிவரும் துறைமுகத்துக்கு (Gwadar port) போட்டியாக இந்தியா ஈரானில் ஒரு துறைமுகத்தை, $500 மில்லியன் செலவில், கட்ட தீர்மானித்திருந்தது. ஈரானின் Chabahar என்ற இடத்தில் கட்டப்படும் இந்த துறைமுகத்துக்கு இந்தியா சீனாவின் உதவியை நாடவேண்டிய நிலைக்கு தற்போது தள்ளப்பட்டு உள்ளது. . இந்தியா கட்டும் துறைமுகத்துக்கு தேவையான தொழிநுட்ப வசதிகள் இந்தியாவிடம் இல்லை. அதனால் இந்தியா மேற்கு நாடுகளிடம் இருந்து தேவையான நுட்பங்களை பெற திட்டமிட்டு […]
ஈரானில் இன்று புதன் காலை இடம்பெற்ற இரண்டு தாக்குதல்களுக்கு 12 பேர் பலியாகியும், மேலும் 42 பேர் காயமடைந்தும் உள்ளனர். மூன்றாவது தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் ஈரான் புலனாய்வு அமைச்சு கூறியுள்ளது. . ஒரு தாக்குதல் Imam Khomeini’s நினைவாலயத்திலும் மற்றைய தாக்குதல் ஈரான் பாராளுமன்றத்திலும் இடம்பெற்று உள்ளன. தலைநகர் தெகிரானில் உள்ள இந்த இரண்டு இடங்களும் சுமார் 20 km இடைவெளியில் உள்ளன. குறைந்தது ஒரு தற்கொலை தாக்குதல்காரரும் பங்கு கொண்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. . ஈரானின் […]
இந்தியாவின் பல மாநிலங்களில் தற்போது வெப்பநிலை அதிஉயர்வாக காணப்படுகிறது. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வெப்பநிலை 48 C ஆகவுள்ளது. தலைநகர் டெல்லியில் வெப்பநிலை 47 C ஆக்கவுள்ளது. . ஆந்திராவிலும், தெலுங்கானா மாநிலத்திலும் கடந்த மாதத்தில் மட்டும் 220 பேர் வெட்ப கொடுமைக்கு பலியாகி உள்ளனர். கடந்த 4 வருடங்களில் சுமார் 4,620 பேர் இந்தியாவில் வெட்ப கொடுமைக்கு பலியாகி உள்ளனர் என்று இந்தியாவின் Earth Sciences அமைச்சு கூறியுள்ளது. . இந்த அதிஉயர் வெட்பத்துக்கு […]
சவுதி அரேபியா தலைமையில் சில இஸ்லாமிய நாடுகள் கட்டாருடனான உறவுகளை துண்டித்து உள்ளன. இன்று திங்கள் சவுதி, UAE, எகிப்து, ஆகிய நாடுகள் கட்டாருடனான உறவுகளை துண்டித்தன. அதை தொடர்ந்து யேமென் (Yemen), லிபியா, மாலைதீவு ஆகினாவும் கட்டாருடனான தொடர்புகளை துண்டித்தன. . சவுதி கட்டாருடனான தனது எல்லைகளை மூடி, விமான மற்றும் கடல் பயணங்களை நிறுத்தி உள்ளது. எகிப்து கட்டார் தூதுவரை 48 மணித்தியாத்துள் வெளியேறுமாறு பணித்துள்ளது. அத்துடன் தனது தூதுவரையும் திருப்பி அழைத்துள்ளது. . […]