அமெரிக்க, இந்திய, ஜப்பானிய இராணுவங்கள் இணைந்து செய்யும் இராணுவ பயிற்சியான Malabar 2017 தற்போது வங்காள விரிகுடாவில் நடைபெற்று வருகிறது. இம்முறை மூன்று நாடுகளின் மிக பெரிய யுத்த கப்பல்கள் இந்த Malabar 2017இல் பங்கு கொள்கின்றன. . அணுசக்தியில் இயங்கும் அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலான Nimitz, ரஷ்யாவின் தயாரிப்பான இந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் விக்கிரமாதித்தய, ஜப்பானின் Izumo ஆகிய யுத்த கப்பல்கள் உட்பட 17 கப்பல்கள், நீர்மூழ்கிகள் என்பன இந்த ஒத்திகையில் […]
கடந்த ஒன்பது மாதங்களாக நடாத்திய போரின்பின், இன்று ஞாயிறு ஈராக்கிய படைகள் ஈராக்கின் மோசுல் (Mosul) நகருள் நுழைந்துள்ளது. இதுவரை மோசுல் நகர் IS குழுவின் தலைநகர் போலவே செயல்பட்டு வந்திருந்தது. இந்நகரில், Tigris நகருக்கு மேற்கு பகுதியின் பல பாகங்கள் குண்டுகளுக்கு முற்றாக இரையாகி உள்ளன. . இந்த வெற்றியை பாராட்ட ஈராக்கின் பிரதமர் Haider al-Abadi இன்று ஞாயிறு மோசுல் சென்றுள்ளார். . ஈராக்கின் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் Sami al-Aradi தான் […]
இந்தியாவின் அரச சொத்தான Air India விமான சேவையை தனியார் வசப்படுத்த இந்திய அரசு தீர்மானம் கொண்டுள்ளது. கடந்த மாதம் இந்திய அரசு இந்த முடிவை நிறைவேற்றி இருந்திருந்தாலும் இதுவரை எந்தவொரு தனியார் நிறுவனமும் Air Indiaவை கொள்வனவு செய்ய முன்வரவில்லை. . நீண்ட காலமாக நட்டத்தில் இயங்கிவரும் Air India விமான சேவைக்கு சுமார் 520 பில்லியன் ($8 பில்லியன்) ரூபாய்கள் கடன் உள்ளது. அத்துடன் இந்த சேவை வருடம் ஒன்றுக்கு Air India 45 […]
இன்று நாம் பயன்படுத்தும் பெற்ரோலில் இயங்கும் (internal combustion) கார் போன்ற வாகனங்களுக்கு வயது 100க்கும் அதிகம். ஆனால் தற்போது அவ்வகை வாகனங்களுக்கு முடிவு காலம் நெருங்கி விட்டது போல் தெரிகிறது. சீன உரிமை கொண்டதும், சுவீடனில் தலைமையகத்தையும் கொண்டதுமான Volvo என்ற வாகன தயாரிப்பு நிறுவம் 2019 ஆம் ஆண்டுமுதல் தாம் பெற்ரோலில் இயங்கும் கார் போன்ற குடும்ப வாகனங்களை தயாரிக்கப்போவது இல்லை என்று புதன்கிழமை அறிவித்துள்ளது. இந்நிறுவனம் 2019 ஆண்டின் பின் மின்னில் இயங்கும் […]
கடந்த மே மாதம் மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு நேரடியாக பறக்கும் விமானங்களில் வரும் பயணிகள் தமது கைபைகளில் கணனிகள், பெரிய புகைப்பட கருவிகள் கொண்டிருப்பது தடை செய்யப்பட்டு இருந்தது. மொத்தம் 10 மத்தியகிழக்கு விமான நிலையங்களில் இருந்து அமெரிக்கா வரும் 8 விமான சேவைகள் இந்த கட்டுப்பாட்டால் பாதிப்பு அடைந்து இருந்தன. சில விமான சேவைகள் அமெரிக்காவுக்கான தமது சேவைகளை குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. . இன்று புதன் டுபாயில் இருந்துவரும் Emirates விமான […]
வடகொரியா இன்று செய்வாய் மிக நீண்ட தூரம் செல்லக்கூடிய இருகட்ட ICMB ஏவுகணை (two-stage Intercontinental Ballistic Missile) ஒன்றை ஏவியதை அமெரிக்கா கடுமையாக சாடியுள்ளது. . இந்த ஏவுகணையை வெற்றிகரமாக ஏவிய வடகொரியா “உலகின் எந்த பாகத்தையும் தாக்கக்கூடிய நம்பிக்கையும், பலமும் கொண்ட நாட்டை உருவாக்கி உள்ளோம்” என்று கூறியுள்ளது. இந்த ஏவுகணை 40 நிமிட நேரத்தில் சுமார் 2,800 km உயரம் சென்று, 933 km தொலைவில் வீழ்ந்துள்ளது. . வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு […]
இந்தியாவின் உத்தர பிரதேச ஆளும் கட்சியான BJP உறுப்பினர் ஒருவருக்கு வாகன போக்குவரத்து தண்டம் விதித்த பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் தூர இடமொன்றுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். . Shrestha Thakur என்பவர் உத்தர பிரதேசத்தின் Bulandshahr நகரின் உதவி SP பதவியில் உள்ள போலீஸ் அதிகாரி. அவர் ஜூன் 22 ஆம் திகதி BJP உறுப்பினரான Pramod Kumar என்பவருக்கு, உரிய பத்திரங்ககள் இல்லாமை, வாகன இலக்க தகடு இல்லாமை, தலைக்கவசம் இல்லாமை போன்ற […]
ஜெர்மனியின் Bavarian மாநிலத்தில் உள்ள Munchberg என்ற நகரில் இன்று திங்கள் காலை இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றுக்கு குறைந்தது 18 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 30 பேர் காயங்களுடன் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளனர். . மொத்தம் 48 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் ஒன்றும், Truck ஒன்றும் அங்குள்ள A9 Highwayயில் மோதிய பின் விபத்துக்குள்ளான பஸ் தீ பற்றிக்கொண்டது. . உள்ளூர் நேரப்படி திங்கள் காலை 7 மணியளவில் இடம்பெற்ற இந்த […]
சவுதி தலைமையில், UAE, பஹ்ரெயின் உட்பட சில அரபு நாடுகள் ஜூன் மாதம் 13 நிபந்தனைகளை விதித்து இருந்தன. அத்துடன் 13 நிபந்தனைகளும் நாளை ஞாயிருக்கு முன் நடைமுறை செய்யப்படல் வேண்டும் என்றும் கூறப்படு இருந்தது. ஆனால் கால எல்லைக்கு மேலும் சில மணிநேரம் மட்டும் இருக்கும் இந்நிலையில் கட்டார் பணியவில்லை. . கட்டாரின் வெளிவிவகார அமைச்சர் Al-Thani இன்று சனி இத்தாலியில் கூறிய கூற்று ஒன்றில் “இந்த நிபந்தனைகள் கட்டார் அரசின் சுதந்திர உரிமையை பறிக்கும் […]
ஆப்கானித்தானில் தன்னுடன் செயல்பட இந்தியாவை இழுக்கிறது அமெரிக்கா. அமெரிக்காவின் Senate இவ்வாறு இந்தியாவை இழுக்க வேண்டியவற்றை செய்யுமாறு அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்ரகனுக்கு (Pentagon) கூறியுள்ளது. . Senate விடுத்த இந்த கட்டளை, 2018 ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்பு வரவுசெலவு திட்டத்தில் (National Defence Authorization Act) உள்ளது. . ஆப்கானிஸ்தானை சோவித்யூனியன் ஆக்கிரமித்து இருந்த காலத்தில் அவர்களை விரட்ட ஆப்கானித்தானில் அமெரிக்கா வளர்த்து ஆயுத குழுவே முயாஹிடீன் (Mujahideen). அதுவே பின் தலபான் ஆகியது. […]