கடந்த சனிக்கிழமை இரவு இந்தியாவின் கரையோர பாதுகாப்பு படை (coast guards) 1,500 kg எடை கொண்ட போதையை கப்பல் ஒன்றில் இருந்து கைப்பற்றி உள்ளது. இந்த போதையின் சந்தை பெறுமதி சுமார் $550 மில்லியன் ஆக இருக்கும் என்று கணிப்பிடப்பட்டு உள்ளது. இந்தியாவினால் கைப்பற்றப்பட்ட அதி கூடிய போதை இதுவே. . இந்தியாவின் கரையோர பாதுகாப்பு படைக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை தொடர்ந்து இக்கப்பல் இடைமறித்து சோதனை செய்யப்பட்டு உள்ளது. MV Henry என்ற […]
அமெரிக்காவின் Senate அண்மையில் ரஷ்யா மீது நடைமுறைப்படுத்திய மேலதிக தடைகளுக்கு பதிலடி வழங்கும் நோக்கில் பூட்டின் இன்று ஞாயிறு 755 அமெரிக்க இராசதந்திரிகளை நாட்டைவிட்டு வெளியேற கேட்டுள்ளார். இது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நிலவிவரும் முறுகல் நிலையை மேலும் உக்கிரம் ஆக்கியுள்ளது. . ரஷ்யாவின் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய உரையில், பூட்டின் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நலமான உறவு எதையும் தான் தற்போதைக்கு எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். நிலைமை நலமாக அமையும் என்று தாம் நீண்ட […]
இன்று இலங்கை அரசும் சீன அரசும் அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ளன. இலங்கை அரசு சார்பில் Sri Lanka Ports Authorityயும் சீனா சார்பில் China Merchants Ports Holdingsம் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ளன. . நீண்டகால இழுபறிக்கு பின் முடிவுக்கு வந்த இந்த புதிய ஒப்பந்தப்படி சீனா வரும் 99 வருடங்களுக்கு இத்துறைமுகத்தின் 70% உரிமையை கொண்டிருக்கும். இலங்கை மிகுதி 30% உரிமையை கொண்டிருக்கும். அத்துடன் சீனா தலைமையில் இடம்பெறவுள்ள வர்த்தக நடவடிக்கைகளுக்கு […]
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் (Nawaz Sharif) இன்று வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் உயர்நீதிமன்றால் பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். ஏப்ரல் மாதம் வெளிவந்திருந்த Panama Paper வெளியிட்ட தகவல்களின்படி பிரதமரும், அவரின் 3 பிள்ளைகளும் நீதிமன்றால் குற்றவாளிகளாக காணப்பட்டு உள்ளனர். ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவில், ஐந்துபேரும் பிரதமரை குற்றவாளி என்றுள்ளனர். . இந்த தீர்ப்பின் பின்னர் பிரதமர் தனது பதவியை.துறந்து உள்ளார். பதவி துறந்த பிரதமருக்கு பதிலாக வேறு ஒருவரை அவரின் கட்சி நியமிக்கும். புதிதாக […]
பூட்டானை அண்டிய, இணக்கப்பாடு இல்லாத எல்லைப்பகுதியில் இந்தியாவும் சீனாவும் முறுகல் நிலையில் உள்ளன. இந்த முறுகல் நிலை மேலுமொரு இந்தியா-சீனா யுத்தத்துக்கு வழி செய்யும் முக்கியம் கொண்டதாக இல்லாவிடினும், இரு தரப்பும் பின்வாங்கும் நிலையிலும் இல்லை. . கடந்த மாதம் அளவில் இந்தியா-பூட்டான்-சீனா எல்லைகள் சந்திக்கும் பகுதியில் சீனா தனது வீதி ஒன்றின் நீளத்தை ஆயுதம் தரியாத சீனர்களை பயன்படுத்தி அதிகரித்து. அந்த வீதி தனது எல்லைக்குள் நுழைந்துள்ளது என்று கூறிய இந்திய நட்பு நாடான பூட்டான் […]
அயர்லாந்தின் RUC (Royal Ulster Constabulary) என்ற போலீஸ் சேவை மீது இலங்கை தமிழ் விதவை பெண் ஒருவர் நட்டஈடு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக Police Ombudsman for Northern Ireland கூறியுள்ளது. 1986 ஆம் ஆண்டில் பெயர் குறிப்பிடப்படாத இந்த பெண்ணின் குடும்ப அங்கத்தவர் 10 பேரை இலங்கையின் விசேட அதிரடிப்படை (Special Task Force) படுகொலை செய்ததாகவும், STFக்கு பயிற்சி வழங்கிய RUC அக்கொலையின் பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் கூறி இந்த […]
அமெரிக்கா இன்று சனிக்கிழமை தனது முதலாவது Ford வகை (Ford-class) விமானம் தாங்கி கப்பலை சேவையில் இட்டுள்ளது. USS Gerald R. Ford என்று பெயரிடப்பட்டு உள்ள இந்த விமானம் தாங்கிக்கான ஆரம்ப விழாவை டிரம்ப் முன்னின்று நடாத்தி உள்ளார். இந்த தாங்கி அமெரிக்காவின் 38 வது ஜனாதிபதியின் பெயரை கொண்டது. . தற்போது அமெரிக்காவிடம் இருக்கும் 10 விமானம் தாங்கிகளும் Nimitz வகையை சார்ந்தன. . Nimitz வகை தாங்கிகளுக்கும் Ford வகை தாங்கிகளுக்கும் இடையில் […]
தான் பாலூட்டி வளர்த்த சிரியாவின் அரச எதிர்ப்பு ஆயுத குழுக்களை அமெரிக்காவின் டிரம்ப் அரசு இன்று கைவிட்டுள்ளது. CIAயின் உதவியுடன் ஜோர்டான் மூலம் வளர்த்த சிரியாவின் ஆயுத குழுக்களையே டிரம்ப் அரசு இன்று கைவிட்டுள்ளது. . இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா எதிர்ப்பு நாடான சிரியாவில் உள்ள அசாத் அரசை புரட்சி மூலம் கவிழ்த்து பின் தமது கட்டுப்பாட்டுள் இருக்கக்கூடிய அரசு ஒன்றை அமைக்கும் நோக்குடன் அமெரிக்காவும், மேற்கும் சிரியாவில் ஒரு புரட்சியை போராளிகள் மூலமாக ஆரம்பித்து, வளர்த்து […]
இலங்கையில் உள்ள பொதுமக்களுக்கான அறிவிப்பு பலகைகளில் தமிழை தவறாக பதிப்பதையிட்டு நம் தமிழர் அழுது புலம்புவது உண்டு. அவ்வாறு அழ தமிழில் மீதான அளப்பரிய பற்று காரணமா அல்லது சிங்களத்தின் மீதான வெறுப்பு காரணமா என்ற உண்மையை அறிவது மிக கடினம். . இவ்வாறு சிங்களம் செய்யும் தமிழ் கொலைக்கு அழும் தமிழர் பலர் தமது குழந்தைகளுக்கு மட்டும் உலகின் எந்தவொரு மொழியிலும் அர்த்தம் காணமுடியாத பெயர்களை இடுவதும் உண்டு. உப்பு இல்லாமல் இவர்கள் தமிழ் சமையல் […]
July 13, 2017, Alagan Elavalagan Even asking this question may give a strong heartache to some, though it may be a politically motivated one. So, it is better that we clarify the matter first. The question here has nothing to do with the Dalai Lama’s personal life; that has been a beautiful one. The question […]