மலேசிய பாடசாலை தீ தொடர்பாக 7 மாணவர் கைது

கடந்த வியாழன் அன்று மலேசிய இஸ்லாமிய பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீ தொடர்பாக 7 மாணர்வர்களை கைது செய்துள்ளதாக மலேசிய போலீசார் கூறியுள்ளனர். இந்த மாணவர்கள் 11 முதல் 18 வயதுடையவர் ஆவர். . இந்த தீக்கு 21 மாணவரும், 2 ஊழியர்களும் பலியாகி இருந்தனர் (முதலில் 23 மாணவர் பலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது).. . ஆரம்பத்தில் போலீசார் இந்த தீயை மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்ட விபத்து என்றே கருதினர். ஆனால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் […]

3ம்-4ம் நூற்றாண்டு இந்திய சுவடியில் பூச்சியம்

தற்கால கணிதத்தில் மிகமுக்கிய பாகம் தான குறிப்பீடு (place value) ஆகும். அந்த தானத்தை மெருகூட்ட தோன்றியது பூச்சிய குறியீடு. இந்த இரண்டையும் கொண்டதாலேயே இன்று நடைமுறையில் இருக்கும் கணித முறைமை உலகத்தில் இருந்த மற்றைய எல்லா கணித முறைமைகளையும் பின்தள்ளி முன்வந்தது. . இந்த தான குறிப்பீடும், பூச்சிய குறியீடும் எந்த கலாச்சாரத்தில் இருந்து தோன்றியது என்பதை நிரூபிக்க விஞ்ஞானம் தன்னால் முடிந்ததை செய்கிறது. . இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி இந்தியாவில் 1881 ஆம் ஆண்டில் […]

வடகொரியா ஏவியது மீண்டுமொரு ஏவுகணை

வடகொரியா மீண்டும் ஒரு ஏவுகணையை இன்று ஏவியுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளி காலை 6:57 மணியளவில், வடகொரியாவின் தலைநகருக்கு அண்மையில் உள்ள Sunan என்ற இடத்தில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டு உள்ளது. . தென்கொரியா மற்றும் ஜப்பான் கணிப்புகளின்படி இந்த ஏவுகணை 770 km உயரம் சென்று, 3,700 km தூரம் கிழக்கே பாய்ந்து பசுபிக் கடலுள் வீழ்ந்துள்ளது. முன்னரைப்போல் இம்முறையும் வடகொரியாவின் ஏவுகணை ஜப்பான் மேலாக சென்றுள்ளது. அமெரிக்காவின் படைகள் நிறைந்த குஆம் (Guam) […]

முதலை பலியெடுத்த பிரித்தானிய பத்திரிகையாளர்

பிரித்தானியாவின் Financial Times என்ற பத்திரிகையின் பத்திரிகையாளராக பணிபுரியும் பிரித்தானியர் ஒருவர் அறுகம் குடா பகுதியில் முதலை ஒன்றால் இழுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. Oxford பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற, 25 வயதுடைய, Paul McClean என்பவரே இவ்வாறு பலியானதாக கூறப்படுகிறது. இவரின் உடல் இதுவரை காணப்படவில்லை. . Paul McClean நண்பர்களுடன் இலங்கைக்கு உல்லாச பயணம் வந்துள்ளனர். சம்பவ தினத்தன்று இவரும் இவரின் நண்பர்களும் கடலில் surfing விளையாட சென்றுள்ளார். அப்போது இவர் நண்பர்களை விட்டு விலகி […]

மலேசிய பாடசாலை தீக்கு 25 பேர் பலி

மலேசியாவில் இயங்கும் Darul Quran Ittifaqiyah என்ற இஸ்லாமிய பாடசாலையில் இடம்பெற்ற தீக்கு குறைந்தது 23 மாணவர்களும், இரண்டு ஊழியர்களும் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அனர்த்தம் உள்ளூர் நேரப்படி இன்று வியாழன் அதிகாலை 5:40 மணிக்கு இடம்பெற்று உள்ளது. . இந்த தீயால் பாதிக்கப்பட்ட மேலும் ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன் 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டும் உள்ளனர். . மாணவர்கள் தங்கி இருந்து கல்வி பயிலும் இந்த பாடசாலை அந்நாட்டு கல்வி […]

ஐ.நா. செல்வதை தவிர்க்கும் அங் சன் சூ கி

பர்மா அரசின் தலைமை அதிகாரத்துடன் செய்யல்படும் அங் சன் சூ கி (Aung San Suu Kyi) தனது ஐ. நா. பயணத்தை இன்று புதன் இரத்து செய்துள்ளார். கடந்த காலங்களில் இவர் ஐ.நாவின் மதிப்புக்கு உரியவராக இருந்தவர். . பர்மாவில் இடம்பெறும் ‘பயங்கவாத’ நடவடிக்கைகளும் ‘வன்முறைகளுமே’ அங் சன் சூ கி ஐ.நா. செல்லாமைக்கு காரணம் என்றுள்ளார் அரச பேச்சாளர் ஒருவர். ஆனால் உண்மையான காரணம் இஸ்லாமியரான பர்மாவின் Rakhine மக்கள் மீது புத்த சமயத்தவரான […]

NATO நாடான துருக்கி ரஷ்ய ஏவுகணையை கொள்வனவு

துருக்கி (Turkey) ஒரு NATO நாடு. ஆனால் தாம் ரஷ்யாவின் S-400 வகை நிலத்தில் இருந்து வானத்துக்கான ஏவுகணைகளை (surface-to-air) கொள்வனவு செய்யவுள்ளதாக இன்று செவ்வாய் அறிவித்து உள்ளது துருக்கி. இந்த கொள்வனவு துருக்கிக்கும் ஏனைய NATO நாடுகளுக்கும் இடையில் வளரும் முரண்பாட்டை தெளிவாக காட்டியுள்ளது. . Cold War காலத்தில் சோவியத் யூனியனுக்கு எதிராகவும், பின்னர் ரஷ்யாவுக்கு எதிராகவும் செயல்படும் நோக்கத்தை முதன்மையாக கொண்டு உருவாக்கப்பட்ட அணியே NATO. அந்த அணியில் அங்கமான துருக்கி இன்று […]

Ian Paisley இலங்கைக்கு இலஞ்ச உல்லாச பயணம்?

வட அயர்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் இயன் (Ian Paisley) சுமார் 100,000 பிரித்தானிய பௌண்ட்ஸ் பெறுமதியான உல்லாச பயணத்தை இலஞ்சமாக பெற்றுள்ளார் என்று கூறுகிறது பிரித்தானிய Telegraph பத்திரிகை. அதை மறுக்கிறார் Ian Paisley. . இயன் வட அயர்லாந்தின் Democratic Unionist Party (DUP) என்ற கட்சியை சார்ந்தவர். இயனின் தந்தையார் DUP கட்சியை ஆரம்பித்தவர்களுள் ஒருவர். தந்தையார் வென்றுவந்த தொகுதியில் இயன் 2010 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். தற்போது பிரித்தானியாவில் […]

சூறாவளி அன்ரூவை பின் தள்ளலாம் ஏர்மா

அமெரிக்காவின் பிளோரிடா (Florida) மாநிலத்தை ஞாயிறு தாக்கவுள்ள சூறாவளி ஏர்மா (Hurricane Irma), பிளோரிடாவை 1992 ஆம் ஆண்டு தாக்கிய சூறாவளி அன்ரூ (Hurricane Andrew) ஏற்படுத்திய அழிவுகளுக்கும் அதிகமான அழிவுகளை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. . 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 270 km/h காற்றுடன் தாக்கிய சூறாவளி அன்ரூ 65 பேரை பலியாக்கி, சுமார் 63,500 வீடுகளை முற்றாக அழித்து சென்றது. மேலும் 124,000 வீடுகளை சேதப்படுத்தியும் சென்றது. அந்த சூறாவளியின் மொத்த […]

வடகொரியா மீது முழுத்தடையை விரும்பும் அமெரிக்கா

வடகொரியா மீது முழுமையான தடையை விதிக்க விரும்புகிறது அமெரிக்கா. வடகொரியாவுக்கு எரிபொருள் (பெட்ரோல்) விற்பனை செய்தல், எரிவாயு விற்பனை செய்தல், வடகொரியாவிடம் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தல், வடகொரியார் (சீனா, ரஷ்யா ஆகிய) வெளிநாடுகளில் தொழில் செய்ய வாய்ப்பு வழங்கல் ஆகியவற்றை தடை செய்ய அமெரிக்கா ஒரு திட்டத்தை ஐ.நா. முன் வைக்கிறது. அண்மையில் வடகொரியா செயல்படுத்திய H-Bomb காரணமாகவே அமெரிக்கா இந்த தடைகளை விதிக்க முனைகிறது. . ஆனால் இந்த தடைக்கு ரஷ்யா மற்றும் சீனா […]