பிபிசி (BBC) வழிகாட்டலில், இந்தியாவின் Vineet Khare என்ற இந்தி மொழி சேவை நிருபரும், இலங்கையில் சேவை செய்திருந்த IPKF இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் Sheonan Singhகும் அண்மையில் யாழ்ப்பாணம் சென்றுள்ளார்கள். அந்த பயணத்தின்போது அப்பாவிகள் யாழ்ப்பாண வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக எதுவும் தெரியாது என்றுள்ளார் அந்த முன்னாள் இராணுவ அதிகாரி. . 1987 ஆம் ஆண்டு, 30 வருடங்களுக்கு முன், இலங்கையில் அமைதியை நிலைநாட்ட வந்த IPKF படைக்கும் புலிகளுக்கும் இடையில் போர் […]
அமெரிக்காவின் விஸ்கான்சின் (Wisconsin) மாநிலத்தில் Ceylon Lagoon என்ற ஒரு சிறிய நீர் பரப்பு உண்டு. இந்து சமுத்திரத்தில் உள்ள இலங்கையின் பெயரில் வடஅமெரிக்காவில், அமெரிக்க-கனேடிய எல்லையோரமாக உள்ள இந்த குடா தனக்குள்ளே ஒரு பெரும் கதையையே கொண்டுள்ளது. . Geneva Lake என்ற வாவி Wisconsin மாநிலத்தவர்களுக்கும் அதை அண்டிய மாநிலத்தவர்களுக்கும் ஒரு கோடைகால சுவர்க்கம். சுமார் 12 km நீளத்தையும், 22 சதுர km பரப்பளவையும் கொண்ட இந்த வாவி அருகே, கிழக்கு பக்கமாக, […]
இன்று திங்கள் ஈராக் இராணுவம் மீண்டும் கேர்குக் (Kirkuk) பகுதிக்குள் நுழைந்துள்ளது. அங்கு நுழைந்த ஈராக் படையினர் முக்கிய அரச கட்டிடங்களை கைக்கொண்டு, ஈராக் தேசிய கொடியையும் ஏற்றி உள்ளனர். எண்ணெய்வளம் நிறைந்த இந்த பகுதி இன்றுவரை Kurdish பிரிவினைவாதிகளின் கையில் இருந்தது. . நீண்ட காலமாக Kirkuk ஈராக்கின் ஒரு பாகமாகவே இருந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்னர் IS தீவிரவாதிகள் இந்த இடத்தை தமது கட்டுப்பாட்டுள் எடுத்திருந்தனர். அந்த IS தீவிரவாதிகளை பல நாடுகள் கூட்டாக […]
சனிக்கிழமை சோமாலியாவில் வெடிக்க வைக்கப்பட்ட இரண்டு truck குண்டுகளுக்கு குறைந்தது 276 பேர் பலியாகியும், 300 பேருக்கும் மேலானோர் காயப்பட்டும் உள்ளார். இரண்டு truck குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டாலும், முதலாவது குண்டுக்கே பலரும் பலியாகி உள்ளனர். . Mogadishu என்ற சோமாலியாவின் தலைநகரில் இடம்பெற்ற இந்த இரட்டை குண்டு தாக்குதல் Safari என்ற விடுதிக்கு அருகாமையிலேயே இடம்பெற்றுள்ளது. சோமாலியாவின் ஜனாதிபதி Mohamed Abdullahi Mohamed இந்த குண்டுகளுக்கு al-Shabab என்ற அல்கைடா ஆதரவு குழுவே காரணம் என்றுள்ளார். […]
அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா, சீனா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் 2015 ஆம் ஆண்டில் செய்துகொண்ட Joint Comprehensive Plan of Action (JCPOA) என்ற உடன்படிக்கையில் இருந்து ரம்ப் வெளியேறுவதை ஐரோப்பிய நாடுகள் கூட்டாக கண்டித்து உள்ளன. . ஜேர்மனியின் அதிபர் Angela Merkel, பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron, பிரித்தானிய பிரதமர் Theresa மே ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்கா JCPOA உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதால் உருவாகப்போகும் பாதிப்புகளை கவனிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. . […]
2015 ஆம் ஆண்டு, ஒபாமா ஆட்சி காலத்தில், அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா , சீனா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் ஈரானுடன் அணு ஆய்வுகள் தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றை செய்திருந்தன. அந்த ஒப்பந்தம் ஈரானின் அணு ஆய்வுகளை மட்டுப்படுத்தவும், பதிலா உலக நாடுகள் ஈரான் மீதான தடைகளை நீக்கவும் வழி செய்தது. . மேற்படி ஒப்பந்தத்துக்கு இணங்க சர்வதேச குழு ஒன்று அவ்வப்போது ஈரானின் செயல்பாடுகளை கண்காணித்து, ஈரான் இணங்கியபடி அணு ஆய்வுகளை தொடர்ந்தும் […]
2018 ஆம் ஆண்டு இறுதியிலிருந்து (December 31, 2018) தாம் UNESCOவிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா இன்று வியாழன் அறிவித்து உள்ளது. UNESCO இஸ்ரேலுக்கு எதிரான கருத்துக்களை கொண்டுள்ளது என்று குற்றம் கூறியே டிரம்ப் அரசு UNESCO அமைப்பில் இருந்து வெளியேறுகிறது. . குறிப்பாக UNESCO கிழக்கு ஜெருசலேமை (East Jerusalem) “Occupied Palestine என்றே அழைக்கிறது. அவ்வாறு அழைப்பதை இஸ்ரேல் விருப்பவில்லை. அத்துடன் 2011 ஆம் ஆண்டில் UNESCO Palestinian Authorityயை ஒரு UNESCO உறுப்பினராக இணைத்து […]
அமெரிக்காவை வருடாந்தம் சுற்றவாளிகள் ஒருபுறம் பாதிக்க, காட்டுத்தீ (wildfire) மறுபுறம் பாதிப்பது வளமை. தற்போது கலிபோர்னியாவில் இடம்பெறும் காட்டுத்தீக்கு குறைந்தது 21 பேர் இன்று புதன்கிழமை வரை பலியாகி உள்ளனர். அத்துடன் சுமார் 3,500 வீடுகளும், கட்டிடங்களும் எரிந்து சாம்பலானதோடு, சுமார் 170,000 ஏக்கர் நிலப்பரப்பு முற்றாக எரிந்துள்ளது. மேலும் அப்பகுதியில் வாழும் குறைந்தது 560 பேர் தேடப்படுவோர் பட்டியலில் உள்ளனர். . கலிபோர்னியா மாநிலத்தில், San Francisco நகருக்கு வடக்கே உள்ள Sonoma மற்றும் Napa […]
இந்தியாவின் தலைநகர் டில்லியில் பட்டாசுக்கு தடை விதித்துள்ளது இந்திய உயர் நீதிமன்றம். கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் தடவையாக பட்டாசுகளுக்கு அங்கு தடை விதிக்கப்பட்டு இருந்திருந்தாலும், தீபாவளியை கருத்தில் கொண்டு கடந்த மாதம் இந்த தடை விலக்கப்பட்டு இருந்தது. ஆனால் மீண்டும் இந்த வழக்கு நீதிமன்றம் சென்று தடையும் திங்கள் முதல் மீள்நடைமுறை செய்யப்பட்டு உள்ளது. . முற்காலங்களில் சீனாவின் நகரங்கள் சுவாசிக்க முடியாத அளவு மாசுபட்ட வளியை கொண்டிருந்தாலும், தற்போது டில்லியே அதி கூடிய […]
இந்தியா செல்லும் வெளிநாட்டு உல்லாச பயணிகளின் முதல் விருப்பத்தில் உள்ளது தாஜ்மஹால். இந்தியாவுக்கும், தாஜ்மஹால் உள்ள பகுதிக்கும் அதிக அளவு வருமானத்தை வழங்கும் இந்த வரலாற்று சின்னத்தை மறைக்க முனைகிறது உத்தர பிரதேச மாநில பாரதீய ஜனதா அரசு. அண்மையில் இந்த மாநில அரசு வெளியிட்ட உல்லாச பயணிகளுக்கான 32 பங்கங்களை கொண்ட புத்தகம் ஒன்றில் தாஜ்மஹால் முற்றாக இருட்டடிப்பு செய்யப்பட்டு உள்ளது. . உலகத்தின் ஏழு அதிசயங்களுள் ஒன்றான, 1631 ஆம் ஆண்டில் கடப்பட்ட தாஜ்மஹால் […]