எகிப்தின் சைனாய் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் இடம்பெற்ற குண்டு, மற்றும் துப்பாக்கி தாக்குதல்களுக்கு குறைந்தது 235 பேர் பலியாகியும், மேலும் 100 வரை காயப்பட்டும் உள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை மசூதியில் வழிபாடுகள் இடம்பெற்ற வேளையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. . எகிப்தின் சைனாய் பகுதியில் உள்ள El Arish என்ற நகருக்கு அண்மையில் உள்ள Bir al-Abed என்ற சிறுநகரில் உள்ள Al Rawdah என்ற மசூதி மீதே இந்த தாக்குதல் இடம்பெற்று உள்ளது. முதலில் […]
கடந்த புதன்கிழமை, நவம்பர் 15 ஆம் திகதி, தென் அமெரிக்க நாடான ஆர்ஜென்டீனாவின் (Argentina) நீர்மூழ்கிகளில் ஒன்று இயந்திர கோளாறுகளுக்கு உட்பட்டதாக நீர்மூழ்கி குழு அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பின்படி கோளாறு பாரதூரமானது என்று தெரிவித்து இருக்கவில்லை. ஆனால் அந்த நீர்மூழ்கி குழு மறுநாள் வியாழன் மேலதிக தொடர்புகள் எதையும் ஏற்படுத்தாத போது, அவர்களை தேடும் பணி ஆரம்பித்தது. இன்றுவரை அந்த நீர்மூழ்கியின் இடம் அறியப்படவில்லை. அந்த நீர்மூழ்கியில் இருந்த சுவாசத்துக்கு தேவையான வளி (oxygen) நேற்று 22 […]
தன் மனைவியை ஜனாதிபதியாக்கும் நோக்கில், தனது உப-ஜனாதிபதியை (Emmerson Mnangagwa) பதவியில் இருந்து விரட்டிய சிம்பாப்வே ஜனாதிபதி Robert Mugabe இறுதியில் தனது பதவியை துறந்துள்ளார். அந்நிலையில் நாட்டை விட்டோடிய முன்னாள் உப-ஜனாதிபதி Emmerson Mnangagwa மீண்டும் சிம்பாப்வே திரும்பியுள்ளார். அவர் அந்நாட்டின் ஜனாதிபதியாக வெள்ளி பதவி பிரமாணம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. . ஆரம்பத்தில் சிம்பாப்வே மக்களின் நலத்துக்கென போராட புறப்பட்ட முகாபே பதவிக்கு வந்தபின் தம் நலத்துக்காகவே செயல்பட்டிருந்தார். நாடு பஞ்சத்தில் மூழ்கியது. ஆனால் […]
இந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜேர்மனியில் இடம்பெற்ற பொதுதேர்தலில் தற்போதைய அதிபர் அங்கெலா மேர்க்கெல் (Angela Merkel) தலைமயிலான Christian Democratic (CDU) கட்சியும் அதன் சகோதர கட்சியும் (CSU) அதிக ஆசனங்களை பெற்றிருந்தாலும் அவ்வணி வென்ற ஆசனங்களின் தொகை பெரும்பான்மை அரசை அமைக்க போதியதாக இருந்திருக்கவில்லை. அதனால் CDU அணி மற்றைய சில கட்சிகளுடன் கூட்டு ஆட்சி அமைக்க முனைந்தது. ஆனால் அந்த முயற்சியும் தற்போது தோல்வியில் உள்ளது. அதனால் அங்கு மீண்டும் ஒரு தேர்தல் […]
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்து பெங்களூர் மாநகரத்தில் வேகமாக அமைக்கப்பட்டு வருகின்றன இந்திரா உணவக (Indira Canteen) நிலையங்கள். இந்த உணவகங்களில் காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளிலும் தயாரிக்கப்பட்ட உணவு மிக மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு காலையில் இட்டலி 5 ரூபா மட்டுமே. தமிழ்நாட்டில் ஜெயலலிதா நடாத்திய அம்மா உணவகம் (Amma Canteen) வழங்கிய அரசியல் இலாபங்களை கண்காணித்த இந்திரா காங்கிரஸ் வாக்கு சேர்க்கும் நோக்கில் கர்நாடகாவில் ஆரம்பித்த உணவகமே Indira Canteen. […]
இலங்கை குடும்பத்தை வெளியேற்றுமா நியூசீலாந்து? இலங்கை குடும்பம் ஒன்றை நியூசீலாந்தில் இருந்து வரும் 21 ஆம் திகதிக்கு முன் வெளியேற்ற முனைகிறது அந்நாட்டு குடிவரவு திணைக்களம். அதேவேளை அந்த குடும்பத்துக்கு உதவ முனைகின்றனர் உள்ளூர் மக்களும், அப்பகுதி அரசியல்வாதிகளும். . Dinesha Amarasinghe 2010 ஆம் ஆண்டில் hospitality துறையில் படிக்க முறைப்படி விசா பெற்று நியூசீலாந்து சென்றவர். அவரின் விசா முதன்மை விசாவாக இருக்க, அவரின் கணவர் Sam Amarasinghe, அவர்களின் 3 மகன்கள் உட்பட […]
சிலகாலத்தின் முன் ரொடீசியா என்று அழைக்கப்பட்ட ஆபிரிக்கா நாடான சிம்பாப்வேயில் இராணுவ ஆட்சி ஒன்று தோன்றும் சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளன. தற்போது 93 வயதை அடையும் அந்நாட்டு ஜனாதிபதி ரொபேர்ட் முகாபேயின் (Robert Mugabe) மரணத்தின் பின்னர் ஆட்சியை கைக்கொள்ளும் நோக்கம் கொண்டவர்களே இந்த முரண்பாடுகளில் ஈடுபடுகின்றனர். . அங்கிருந்து வரும் செய்திகளின்படி இன்று புதன்கிழமை குறைந்தது 3 குண்டு வெடிப்புகள் தலைநகரில் இடம்பெறுள்ளன. இராணுவமும் அதிகளவில் நடமாடுகின்றன. முகாபேயின் கட்டுப்பாட்டில் இருந்த ஒளிபரப்பு நிலையத்தையும் இராணுவம் சுற்றிவளைத்துள்ளது. […]
கடந்த சனிக்கிழமை மும்பாயில் உள்ள Bank of Baroda வங்கி கிளை ஒன்றில் சுமார் 100 அடி நீள சுரங்கம் அமைத்து கொள்ளையடிக்கப்படுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு நடாத்தப்பட்ட இந்த கொள்ளை விபரம் திங்கள் காலையே வங்கிக்கு தெரிய வந்துள்ளது. . வங்கிக்கு அருகில் உள்ள பலசரக்கு கடை ஒன்றை வாடகைக்கு எடுத்த திருடர், கடந்த நாலு மாதங்களாக சுரங்கம் அமைக்கும் பணியிலும் ஈடுபட்டு உள்ளனர். கடையின் முகப்பு Shree Balaji General Store என்று விளம்பர […]
2018 ஆண்டு இடம்பெறவுள்ள FIFA World Cup போட்டியின் இறுதி ஆட்டங்களுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது இத்தாலி. இதற்கு முன் 1958 ஆம் ஆண்டிலும் இத்தாலி FIFA World Cup இறுதி ஆட்டங்களுக்கு செல்லும் வாய்ப்பை இழந்திருந்திருந்தது. இத்தாலி முன்னர் 4 தடவைகள் FIFA World Cup வெற்றியை பெற்றிருந்த முக்கியதோர் உதைபந்தாட்ட நாடு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. . சுவீடன் (Sweden) அணியும் இத்தாலி (Italy) அணியும் ஆடிய ஆட்டம் வெற்றி-தோல்வி இன்றி (0-0) முடிவடைந்ததால் […]
ஈரான்-ஈராக் எல்லையோரம், உள்ளூர் நேரப்படி ஞாயிரு இரவு 9:18 மணியளவில், இடம்பெற்ற நிலநடுக்கத்துக்கு சுமார் 140 பேர் பலியாகியும், 1,500 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். பலியானோர் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. . எல்லையோரத்தில் உள்ள Sarpol-e Zahab என்ற சிறு கிராமத்தில் மட்டும் சுமார் 60 பேர் பலியாகி உள்ளனர். இப்பகுதிகள் மலைகள் நிறைந்த இடமாகையால் உதவிகள் பாதிக்கப்பட்டோரை அடைவதற்கும் இடராக உள்ளது. . அமெரிக்காவின் Geological Survey என்ற அமைப்பின் கணிப்புப்படி […]