பொய்யை மறைக்க பொய்த்த அமெரிக்க தூதுவர்

ஒருகணம் தான் கூறியதையே மறுகணம் தான் அப்படி கூறவில்லை என்று மறுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ரம்பின் சீடர்களுள் சிலரும் தம் பொய்யை மறுத்து பொய்க்கும் வீரர் என்பதை நிரூபிக்கின்றனர். நெதர்லாந்துக்கான ரம்பின் அமெரிக்க தூதுவர் Pete Hoekstra அண்மையில் இந்த சாதனையை செய்துள்ளார். . நெதர்லாந்து நிருபராக Wouter Zwart அந்நாட்டுக்கான அமெரிக்க தூதுவரை (Pete Hoekstra) ஒரு நேர்முகம் செய்துள்ளார். நேர்முகத்தின் ஆரம்பத்தில் தூதுவரிடம் நீங்கள் நெதர்லாந்தில் இஸ்லாமியர் நெதர்லாந்து அரசியவாதிகளை உயிருடன் ஏரிப்பதாகவும், அப்பகுதிகள் […]

ரம்ப் திட்டத்தை ஐ.நா. 128 வாக்குகளால் நிராகரிப்பு

அமெரிக்காவின் ரம்ப் அரசின் இஸ்ரவேலுக்கான தூதுவராலயத்தை ஜெருசலேமுக்கு நகர்த்தும் தீர்மானத்தை கண்டித்து இன்று ஐ.நா.வின் பொது அமர்வில் (General Assembly) இடம்பெற்ற வாக்கெடுப்பில் 128 வாக்குக்குள் அமெரிக்காவின் திட்டத்துக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ளன. ஐ.நா. தீர்மானம் இவ்வாறு அமெரிக்க திட்டத்தை கண்டிப்பதை எதிர்த்து அமெரிக்கா, இஸ்ரேல், Guatemala, Honduras, Marshall Islands, Micronesia, Nauru, Palau, Togo ஆகிய 9 நாடுகள் எதிர்த்து வாக்களித்து உள்ளன. . மொத்தம் 35 நாடுகள் வாக்களிப்பை தவிர்த்துள்ளன. அவுஸ்திரேலியா, கனடா, மெக்ஸிகோ, […]

ரம்ப் பிச்சை எடுக்கும் நாடுகளுக்கு எச்சரிக்கை

ரம்ப் அரசு இஸ்ரவேலுக்கான அமெரிக்காவின் தூதுவரலாயத்தை ஜெருசலேமுக்கு நகர்த்த எடுத்த தீர்மானத்தை ஐ.நா. கண்டித்து நடவடிக்கைகள் எடுத்திருந்தது. கடந்த திங்கள்கிழமை ஐ.நா.வின் 5 veto வாக்குரிமை கொண்ட நாடுகளையும், 10 சாதாரண நாடுகளையும் கொண்ட பாதுகாப்பு அமர்வு (Security Council) ரம்ப் அரசின் தீர்மானத்தை எதிர்த்து முன்வைத்த தீர்மானத்தை பிரித்தானியா, சீனா, பிரான்ஸ், ஜப்பான், இத்தாலி உட்பட 14 நாடுகள் ஆதரித்து இருக்க, அமெரிக்கா மட்டும் veto வாக்கை பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்து இருந்தது. . ஐ.நா.வின் […]

ரம்ப் வரி திட்டத்துக்கு ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் நடைமுறை செய்யவுள்ள புதிய வரி திட்டத்துக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன. ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளின் நிதி அமைச்சர்கள் கூட்டாக அமெரிக்காவின் Treasury Secretary Stephen Munchin என்பவருக்கும், அமெரிக்காவின் Republican கட்சி உயர் உறுப்பினர்களுக்கும் இந்த கடிதத்தை அனுப்பி உள்ளனர். . இந்த கடிதத்தில் அமெரிக்க கூட்டுத்தாபனங்களுக்கான அமெரிக்காவின் புதிய வரிகள் WTO முறைமைகளுக்கு முரணானது என்று கூறப்பட்டுள்ளது. . ஐரோப்பிய நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள […]

குஜராத்தில் பா.ஜ.க 99 ஆசனங்களுடன் பெரும்பான்மை

குஜராத் மாநிலத்தில் அண்மையில் இடம்பெற்ற தேர்தலின் வாக்கு கணக்கெடுப்பு இன்று நிகழ்ந்துள்ளது. இறுதியான கணக்கெடுப்புகளின்படி இந்திய பிரதமர் மோதி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி 99 ஆசனங்களை பெற்று பெரும்பான்மை அரசை அமைக்கவுள்ளது. இந்திரா காங்கிரஸ் 80 ஆசனங்களை பெற்றுள்ளது. குஜராத் மாநிலத்தின் மொத்த ஆசனங்கள் 182. . இம்முறை பா.ஜ.க. 99 ஆசனங்களை பெற்றிருந்தாலும் இத்தொகை முன்னைய தொகையிலும் 16 ஆசனங்கள் குறைவானதே. கடந்த தேர்தலில் பா.ஜ.க. இங்கு 115 ஆசனங்களை வென்றிருந்தது. . ஹிமாச்சல் […]

50 சீன தம்பதிகள் இலங்கையில் திருமணம்

மொத்தம் 50 சீன தம்பதிகள் இன்று ஞாயிரு இலங்கையில் திருமணம் செய்துள்ளனர். குழுவாக செய்யப்பட்ட இந்த திருமண (mass wedding) வைபவம் இன்று ஞாயிரு கொழும்பில் இடம்பெற்றுள்ளது. சில தம்பதிகள் கண்டி சிங்கள ஆடைகளையும், சிலர் சீன ஆடைகளையும், சிலர் மேற்கு நாட்டு ஆடைகளையும் அணிந்திருந்தனர். இந்த 50 தம்பதிகளில் சிலர் ஏற்கனவே திருமணமானவர். . தற்காலங்களில் சுமார் 2 மில்லியன் உல்லாச பயணிகள் வருடம் ஒன்றில் இலங்கை வருவதாகவும் அதில் 13% மானோர் சீனர்கள் என்றும் […]

பிராஸில் சவுதி இளவரசரின் $300 மில்லியன் மாளிகை

சில கிழமைகளில் முன் சவுதி அரேபியாவில் billionaire Price Alwaleed bin Tatal உட்பட பல பெரும் பணக்கார இளவரசர்கள் கைது செய்யப்பட்டு இருந்தனர். சவுதி அரசர் King Salman தனது விருப்பத்துக்குரிய, 32 வயதுடைய, மகன் Crown Price Mohammed bin Salman என்பவரை சவுதியின் அடுத்த அரசர் ஆக்கும் நோக்கில் அதிகாரங்கைளை வழங்கி இருந்தார். அந்த அதிகாரங்களை பயன்படுத்தியே இளவரசர் சல்மான் (Salman) தனக்கு போட்டியாக இருக்கக்கூடிய இளவரசர் Tatal போன்றோரை கைது செய்திருந்தார். […]

மத்தியகிழக்கு, இந்தியா வருமான பரம்பலில் பின்னிலையில்

World Inequality Report வெளியிட்ட அறிக்கையின்படி மத்தியகிழக்கு நாடுகளிலும், இந்தியாவிலும் வருமான பரம்பல் பின்னிலையில் உள்ளது. மத்தியகிழக்கு நாடுகளில் மொத்த வருமானத்தின் 61% அந்த நாடுகளின் முதல் 10% செல்வந்தர்களை அடைகிறது. மிஞ்சிய 39% வருமானமே 90% மக்களை அடைகிறது. இந்தியாவில் 55% வருமானம் முதல் 10% செல்வந்தர்களை அடைகிறது. . அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாடுகளிலும் 47% வருமானம் முதல் 10% செல்வந்தர்களை அடைகிறது. சீனாவில் 41% வருமானம் முதல் 10% செல்வந்தர்களை அடைகிறது. […]

கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீனர் தலைநகர், OIC அறிவிப்பு

அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் முழு ஜெருசலேம் நகரும் இஸ்ரவேலின் தலைநகர் என்று அறிவித்ததுடன், அங்கு அமெரிக்காவின் தூதுவராலயத்தை நகர்த்த அறிவிப்பு விடுத்ததை தொடர்ந்து இஸ்லாமிய நாடுகள் இன்று கிழக்கு ஜெருசலேமை (East Jerusalem) பாலத்தீனியர் தலைநகர் என்று அறிவித்துள்ளன. . துருக்கியில் கூடிய Organization of Islamic Cooperation (OIC) என்ற 57 இஸ்லாமிய நாடுகளை அங்கத்துவம் கொண்ட அமைப்பு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. அதேவேளை ரம்பின் தீர்மானத்தை அமெரிக்காவும், இஸ்ரவேலும் மட்டுமே இன்றுவரை ஆதரித்து […]

வடகொரியாவுடன் நிபந்தனை இன்றி பேச அமெரிக்கா தயார்

வடகொரியாவுடன் முன் நிபந்தனைகள் எதுவுமின்றி தாம் பேச்சுவார்த்தைகள் நடாத்த தயாராக உள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் ரில்லெர்சன் (Secretary of State Rex Tillerson) இன்று செய்வாய் கூறியுள்ளார். வடகொரியா அணு ஆயுதங்களை கைவிடாதவரை தாம் வடகொரியாவுடன் நேரடி பேச்சுவார்த்தை செய்யப்போவது இல்லை என்று இதுவரை கூறிய அமெரிக்காவின் இந்த அறிவிப்பு பெரியதோர் திருப்பமாக உள்ளது. . வடகொரியா பெருமளவில் அணுவாயுதத்துள் முதலீடு செய்துள்ளதாகவும் (“they have too much invested in it”), அவ்வகை முதலீட்டை […]