சனிக்கிழமை இஸ்ரவேல் வான்படைக்கு சொந்தமான நவீன வகை F-16 யுத்த விமானம் ஒன்று சிரியாவின் எல்லை பகுதில் விமான எதிர்ப்பு ஆயுதங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டு இருந்தது. பெரும்பாலும் இந்த தாக்குதல் ஈரானின் உதவியுடனேயே இடம்பெற்று இருக்கலாம் என்று கருதும் இஸ்ரவேல், ஈரான் மீது கண்டன கருத்துக்களை வெளியிட்டு உள்ளது. . கடந்த 36 வருடங்களின் பின் இவ்வாறு இஸ்ரவேலில் யுத்த விமானம் ஒன்று சுட்டு வீழத்தப்பட்டது இதுவே முதல் தடவை. இவ்விடயம் இதுவரை இருந்த இஸ்ரவேலின் வான்பரப்பு […]
இன்று ஞாயிரு ரஷ்யாவின் தலைநகர் மஸ்காவிலிருந்து (Moscow) கிழக்கே, Kazakhstan எல்லையில் உள்ள Orsk என்ற நகரம் சென்ற பயணிகள் விமானம் வானேறி சில நிமிடங்களுள் வீழ்ந்துள்ளது. இதில் பயணித்த 65 பயணிகளும், 6 பணியாளர்களும் பலியாகி உள்ளனர். . இன்று வீழ்ந்த Antonov148 வகை பயணிகள் விமானம் ரஷ்யாவின் Saratov விமானசேவைக்கு உரியது. . இந்த விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படாவிட்டாலும், இந்த விமானத்தின் விமானி விமானம் கோளாறில் உள்ளதை அறிவித்து, அவசரகால தரை இறங்களுக்கு […]
தென்கொரியாவின் ஜனாதிபதி Moon Jae-in னை வடகொரியாவுக்கு வருமாறு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் வடகொரியாவின் விசேட ஒலிம்பிக் உறுப்பினர்கள், தென்கொரிய ஜனாதிபதியுடன் சனிக்கிழமை கொண்டிருந்த மத்திய உணவு ஒன்றின் பின்னரேயே இந்த அறிவிப்பு விடப்பட்டுள்ளது. . மேற்கூறிய சந்திப்பின் போது Kim Yo Jong, வடகொரியாவின் தலைவரின் இளைய சகோதரி, வடகொரிய தலைவர் எழுதிய கடிதம் ஒன்றை தென்கொரிய ஜனாதிபதியிடம் (Moon) வழங்கியதாக கூறப்படுகிறது. . அத்துடன் Kim Yo Jong […]
தென்கொரியாவில் இன்று வெள்ளி இடம்பெற்ற ஒலிம்பிக் ஆரம்ப விழாவில் வடகொரியாவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ஆரம்ப விழாவின்போது வடகொரியாவுக்கு முக்கியத்துவம் வழங்குவதை தடுக்க அமெரிக்கா எடுத்த பெரும் முயற்சிகளையும் மீறி தென்கொரியா வடகொரியாவை உபசரித்து உள்ளது. . ஆரம்ப விழாவின் போது வடக்கு மற்றும் தெற்கு கொரியாக்கள் இணைந்து ஒரு கொடியின்கீழ் அணிவகித்து உள்ளனர். இந்த விசேட கொடி வெள்ளை பின்னணியில், நீல நிறத்தில் இணைந்த கொரிய வரைபடத்தை கொண்டிருந்தது. . வடகொரியாவின் தலைவர் Kim […]
ஜப்பானின் Tokyo நகரின் உள்ள Ginza பகுதி ஆரம்ப பாடசாலை (elementary school) ஒன்று அண்மையில் தமது பாடசாலை சிறுவர்களுக்கு புதிய சீருடை தயாரிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. சீருடை வடிவமைப்புக்கு பாடசாலை உலகின் luxury ஆடை தயாரிப்பு நிறுவனமான இத்தாலிய ஆர்மானி (Armani) நிறுவனத்தை நாடி இருந்தனர். . ஆர்மானி தயாரித்த சீருடை ஒன்றின் விலை சுமார் 80,000 ஜப்பானிய யென் ($730). இந்த அதீத விளையால் விசனம் கொண்டுள்ளனர் பெற்றார். . Taimei Elementary என்ற […]
முன்னாள் பங்களாதேச பிரதமர் Khaleda Zia என்பவருக்கு இன்று வியாழன் 5-வருட சிறை தண்டனை வழங்கப்டுள்ளது. தனது ஆட்சி காலத்தில் $252,200 பெறுமதியான பணத்தை Zia Orphanage Trust என்ற சேவையில் இருந்து தனது சொந்த வங்கி கணக்குக்கு மாற்றினார் என்று குற்றம் சாட்டப்பட்ட வழக்கின் தீர்ப்பிலேயே இவருக்கு 5-வருட சிறை கிடைத்துள்ளது. . சிறை தண்டனையை வழங்கிய நீதிபதி Mohammad Akhteruzzaman முன்னாள் பிரதமர் வயது முதிர்ந்தவர் என்றபடியாலும், ஒரு முன்னாள் பிரதமர் என்றபடியாலும், குறைந்த […]
மாலைதீவு அரசியல் மீண்டும் குழப்பத்தில் உள்ளது. குறிப்பாக கடந்த வெள்ளி முதல் குழப்பம் உக்கிரம் அடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலத்தீவு உயர் நீதிமன்றம் தற்போது கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் விடுதலை செய்யும்படி அரசிடம் கூறி இருந்தது. நீதிமன்ற தீர்ப்பை ஏற்க மறுத்த அரசு உடனடியாக உயர் நீதிமன்ற நீதிபதிகளை கைது செய்து, நாட்டில் 15-நாள் அவசரகால நிலையையும் நடைமுறை செய்துள்ளது. . மேற்கு நாடுகள் மாலைதீவு அரசின் செயலை கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டு […]
பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதுவரகம் முன்னாள் எதிர்ப்பு கூட்டம் கூடிய இலங்கையரை நோக்கி கழுத்தை அறுக்கும் சைகை (throat-slitting) செய்த இலங்கை தூதுவரக அலுவலகரான Brigadier Priyanka Fernando பதிவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு இன்று செவ்வாய் அறிவித்துள்ளது. . Brigadier Fernando இலங்கை இறுதி யுத்தத்தில் பங்கு கொண்டிருந்தவர். இவர் இப்போது இலங்கை தூதுவராக பாதுகாவல் அதிகாரியாக (defense attache) உள்ளார். இவரை நாடு கடத்தும்படி பிரித்தானியாவின் Labour கட்சி கேட்டுள்ளது. . […]
அமெரிக்காவின் Dow (Dow Jones Industrial average) பங்கு சந்தை இன்று திங்கள் மதியம் அளவில் சுமார் 1,500 புள்ளிகளால் வீந்திருந்தது. அந்த பாரிய வீழ்ச்சியின் சிறிதை மீண்ட Dow நாள் முடிவின்போது 1,175 புள்ளிகளால் வீழ்ந்துள்ளது. Dow வரலாற்றின் அதி கூடிய ஒருநாள் வீழ்ச்சி இதுவாகும். . கடந்த வெள்ளிக்கிழமை அடைந்த 665 புள்ளி வீழ்ச்சியுடன் இன்று மதிய வீழ்ச்சியுடன் மொத்தம் 2,100 புள்ளிகளால் சந்தை வீழ்ந்திருந்தது. மதிய வேளையின்போது சில நிமிடங்களில் மட்டும் 500 […]
முற்காலங்களில் அதி சிறந்து வளர்ந்திருந்த மக்களில் மாயன் (Mayan) மிக முக்கியமானவர்கள். மத்திய அமெரிக்காவின் பல பாகங்களில் மாயன் எச்சங்கள் பல இன்றும் உண்டு. மெக்ஸிக்கோ (Mexico) நாட்டு சிசென் இற்ச (Chichen Itza), ருழும் (Tulum), கோபா (Coba) ஆகிய இடங்கள் தற்போது உல்லாச பயணிகளின் முக்கிய தெரிவுகள். இதுவரை அறிந்த தரவுகளின் அடிப்படையில் சுமார் 2 மில்லியன் மாயன் அவர்களின் உச்ச காலத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்பட்டு இருந்தது. . ஆனால் அண்மையில் LIDAR […]