சிரியாவின் ஒருமைக்கு ரஷ்யா, ஈரான், துருக்கி ஆதரவு

சிரியாவின் ஒருமைபாடு சிதைந்து, அந்நாடு பல துண்டங்களாக உடையாமல் இருப்பதை உறுதி செய்ய தாம் ஆவண செய்யவுள்ளதாக ரஷ்யா, ஈரான், துருக்கி ஆகிய மூன்று நாடுகளும் இன்று கூறி உள்ளன. துருக்கியின் அன்கரா (Ankara) நகரில், அந்நாடு ஜனாதிபதி Erdogan மற்றும் அங்கு பயணத்தை மேற்கொண்டிருந்த ரஷ்ய ஜனாதிபதி Putin, ஈரானிய ஜனாதிபதி Rouhani ஆகியோர் இந்த இணக்கத்தை அறிவித்து உள்ளனர். . ரஷ்யாவும், ஈரானும் இதுவரைக்காலம் சிரியாவின் ஜனாதிபதி al-Assad க்கு ஆதரவு வழங்கி வந்திருந்தாலும், […]

GSAT-6A செய்மதி தொடர்பை இழந்தது இந்தியா

இந்தியா ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி GSAT-6A என்ற நவீன செய்மதியை ஏவி இருந்தது. ஆனால் அந்த செய்மதியுடனான தொடர்புகளை மறுநாள் 30 ஆம் திகதி முதல் முற்றாக இழந்துள்ளது இந்திய ISRO. (Indian Space Research Organization). இந்த செய்தியை ISRO தற்போது உறுதி செய்துள்ளது. . இந்த செய்மதியை மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ISRO தன்னால் முடிந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதுவற்றை அம்முயற்சிகள் எந்த பலனையும் வழங்கவில்லை. . […]

எகிப்தின் சர்வாதிகாரி சிசிக்கு ரம்ப் வாழ்த்து

கடந்த கிழமை எகிப்தில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது. அந்த தேர்தல் போட்டியிட்டோரில் ஒருவர் தற்போதை ஜனாதிபதி சிசி (Sissi). சிசி ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மோர்சியை (Morsi) இராணுவ கவிழ்ப்பு மூலம் சிறையில் அடைத்து பதவிக்கு வந்தவர். . இம்முறை தேர்தலிலும் தனக்கு போட்டியாக இருக்கக்கூடிய லெப். ஜெனரல் Sami Anan, கேணல் AhmedKonsowa ஆகிய வேட்பாளர்களை கைதுசெய்து சிறையில் அடைத்துவிட்டு, தனது ஆதரவாளர் ஒருவரை மட்டும் தன்னுடன் போட்டியிட நிறுத்தியிருந்தார். . […]

அமெரிக்க விசாவுக்கு Facebook, Twitter விபரம்

அமெரிக்கா செல்ல விசாவுக்கு விண்ணப்பம் செய்யும் அந்நிய நாட்டவரிடம் அவர்களின் விண்ணப்பத்தில் Facebook, Twitter போன்ற 20 social media விபரங்களையும் (username) கேட்க முனைகிறது ரம்ப் அரசு. கடந்த 5 வருட இவ்வகை social media விபரங்களை (username) குறிப்பிடுமாறு கேட்கப்படலாம். . இந்த புதிய கட்டுப்பாடு நடைமுறைக்கு வரின், தற்கால தரவுகளின்படி, சுமார் 710,000 குடிவரவு விசா (immigrant visa) விண்ணப்பங்களும், சுமார் 14 மில்லியன் உல்லாச பயணிகளின் விண்ணப்பங்களும் social median விபரங்களை […]

இந்தியாவில் 90,000 வெற்றிடத்துக்கு 28 மில்லியன் விண்ணப்பம்

அண்மையில் இந்திய புகையிரத திணைக்களம் 90,000 வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கேட்டிருந்தது. அந்த கேள்விக்கு சுமார் 28 மில்லியன் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. . இந்திய புகையிரத சேவை சுமார் $130 பில்லியன் செலவில் தற்போது நவீனமயம் ஆக்கப்படுகிறது. அதன் ஒருபடியாக 26,502 புகையிரத சாரதிகள், 62,907 பராமரிப்பு ஊழியர் ஆகியோரை நியமிக்க புகையிரத சேவை முன்வந்திருந்தது. அந்த வெற்றிடங்களுக்கே சுமார் 28 மில்லியன் பேர் விண்ணப்பித்து உள்ளனர். . பல பல்கலைக்கழ பட்டதாரிகளும் மேற்படி வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் […]

அமெரிக்காவில் UFO?

இந்த வருடம் பெப்ருவரி மாதம் 24 ஆம் திகதி அமெரிக்காவின் Arizona மாநில வானத்தில் பறந்துகொண்டிருந்த இரண்டு விமானங்களின் விமானிகள் அப்பகுதியில் பறந்த UFO ஒன்றை கண்டார்களா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. . பெப்ருவரி மாதம் 24 ஆம் திகதி Phoenix Air விமான சேவைக்கு சொந்தமான நடுத்தர அளவிலான Learjet விமானம் ஒன்று அரிசோனா (Arizona) மாநில வானத்தில், சுமார் 30,000 அடி உயரத்தில், உள்ளூர் நேரப்படி பிற்பகல் சுமார் 3:30 மணியளவில் பறந்து […]

பெய்ஜிங் சென்றார் கிம் ஜோங் உன்

இந்த மாதம் 25 ஆம் திகதி பலத்த பாதுகாப்புடனான புகையிரதம் ஒன்று வடகொரியாவில் இருந்து சீனாவின் தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்றதாக செய்திகள் வெளிவந்திருந்த. அத்துடன் அந்த புகையிரதம் 24 மணி நேரத்துக்குள் திரும்பி வடகொரியா சென்றது. . இந்த புகையிரதத்தில் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் பயணித்து இருக்கலாம் என்று கருதப்பட்டது. . இன்று சீனாவின் அரசு சார்பு பத்திரிகைகள் வடகொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன் சீனாவின் தலைநகர் பெய்ஜிங் சென்று, சீனாவின் ஜனாதிபதி சீ […]

24 நாடுகள் 140 ரஷ்ய ஊழியர்களை வெளியேற்றம்

பின்னாளில் பிரித்தானியாவின் உளவாளியாக மாறிய முன்னாள் ரஷ்ய உளவாளி Sergei Skripal (double-agent) என்பவரை இரசாயன ஆயுதம் கொண்ட தாக்கியதற்கு பதிலடியாக அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஜேர்மனி உட்பட 24 நாடுகள் தம் நாட்டில் நிலைகொண்டிருந்த 140 ரஷ்ய தூதுவராலய ஊழியர்களை தமது நாடுகளில் இருந்து வெளியேற்றி உள்ளன. . பிரித்தானியாவே முதலில், மார்ச் மாதம் 4ஆம் திகதி, அங்கிருந்து பல ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்றி இருந்தது. பல நாடுகள் நேற்று திங்கள் இந்த வெளியேற்ற நடவடிக்கைகளை […]

சீனாவின் விண்ஆய்வுகூடம் சிலநாளில் விழும்

Tiangong-1 என்ற சீனாவின் விண் ஆய்வுகூடம் இந்த மாதம் 29 ஆம் திகதி முதல் ஏப்ரல் 4 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் வாணில் இருந்து விழும் என்று கூறப்படுகிறது. இந்த விண் ஆய்வுக்கூடம் வளிமண்டலத்தில் நுழைந்த பின்பே விழும் நேரத்தையும், இடத்தையும் குறிப்பாக கூற முடியும் என்றும் கூறப்படுகிறது. . ரஷ்யா உட்பட பல நாடுகள் இணைந்து உருவாக்கிய சர்வதே விண் ஆய்வு நிலைய அமைப்பில் (International Space Station) சீனா இணைவதை அமெரிக்கா தடுத்தபோது, […]

ரஷ்ய Shopping Mall தீக்கு 37 பேர் பலி

ரஷ்யாவின் சைபீரிய பகுதியில் உள்ள Kemerovo என்ற நகரில் உள்ள shopping mall  ஒன்றில் ஏற்பட்ட தீக்கு குறைந்தது 37 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காணாமலும் உள்ளனர். இந்த நகரம் ரஷ்ய தலைநகர் மஸ்கோவுக்கு கிழக்கே சுமார் 3,600 km தொலைவில் உள்ளது. . மேற்படி தீ ஞாயிறு மாலை 5:00 மணியளவில் ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. இறந்தவர்களில் 11 பேர் சிறுவர்கள் என்றும் கூறப்படுகிறது. . 2013 ஆம் ஆண்டில் சேவைக்கு வந்திருந்த இந்த […]