சீன விண்கலத்தில் எல்லா நாடுகளுக்கும் அனுமதி

சீனா தான் ஏவப்போகும் விண்வெளி ஆய்வுகூட பணிகளில் பங்கெடுக்க அனைத்து ஐ.நா. நாடுகளுக்கும் அனுமதி வழங்கவுள்ளது. இந்த செய்தியை சீனாவுக்கான ஐ.நா. தூதுவர் Shi Zhongjun திங்கள்கிழமை தெரிவித்து உள்ளார். தற்போது அமெரிக்காவின் தலைமையில் செயல்படும் ISS (International Space Station) அதன் அங்கத்துவ நாடுகளுக்கு மட்டுமே இணைந்து செயல்பட அனுமதி வழங்குகிறது. . Tianhe (ரிஅன்-ஹே அல்லது Harmony of the Heavens) என்று நாமம் கொண்ட China Space Station (CSS) 2019 ஆண்டில் […]

இலங்கையில் Cricket match-fixers, Al Jazeera விபரிப்பு

இலங்கையில் இடம்பெறும் cricket விளையாட்டு போட்டி முடிபுகளை தமது விருப்பத்துக்கு ஏற்றவாறு அமைத்து பெரும் பணத்தை சட்டவிரோத குழுக்கள் பெறுவதாக Al Jazeera என்ற கட்டார் நாட்டு தொலைக்காட்சி நிறுவனம் கூறுகிறது. இந்த தொலைக்காட்சி நிறுவனம் இரகசியமாக பதிவு செய்த video படங்கள் விரைவில் ஒளிபரப்பப்படவுள்ளன. . 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற இலங்கை-இந்தியா போட்டியும், அதே வருடம் ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற இலங்கை-அஸ்ரேலியா போட்டியும் இவ்வாறு ‘fix’ செய்யப்பட்ட போட்டிகள் என்று கூறுகிறது […]

வட, தென் கொரியா தலைவர்கள் திடீர் சந்திப்பு

இன்று சனிக்கிழமை, உள்ளூர் நேரப்படி மாலை 3:00 மணிக்கு, தென்கொரியாவின் ஜனாதிபதி Moon Jae-in வடகொரியாவின் தலைவர் Kim Jong Unயுடன் சந்தித்து உரையாடியுள்ளார். இந்த சந்திப்பு முன்னர் திட்டமிடப்படாத, அவசர சந்திப்பாகும். அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் சிங்கப்பூரில் இடம்பெறவிருந்த ரம்ப்-கிம் சந்திப்பில் இருந்து பின்வாங்கியதனாலேயே இன்றைய மூன்-கிம் சந்திப்பு நிகழ்துள்ளது. . இன்றைய சந்திப்பில் இரண்டு தலைவர்களும் சிங்கப்பூரில் இடம்பெறவிருந்த ரம்ப்-கிம் சந்திப்பு தொடர்பாகவே உரையாடி உள்ளனர். இந்த உரையாடல் சுமார் 2 மணித்தியாலங்கள் இடம்பெற்றுள்ளது. […]

கடனை அடைக்க $1 பில்லியன் கடன்

இந்த வருடம் செலுத்த வேண்டிய கடன்களை அடைக்கும் நோக்கில் இலங்கை மேலும் $1 பில்லியன் கடனை China Development Bank என்ற வங்கி மூலம் பெறுகிறது. இந்த புதிய கடனுக்கு இலங்கை சராசரியா 5.3% வட்டியை செலுத்தும் என்றும் கூறப்படுகிறது. . இந்த கடன் வரும் 8 வருடங்களுள் அடைக்கப்படல் வேண்டும். நாலாம் வருடம் முதல் எட்டாம் வருடம் வரையான 5 வருட காலத்தில் 6 மாதங்களுக்கு $100 மில்லியன் என்ற வேகத்தில் இக்கடன் அடைக்கப்படும். . […]

ரம்ப்-கிம் சிங்கப்பூர் சந்திப்பு இடைநிறுத்தம்

இன்று வியாழன் அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் ஜூன் மாதம் சிங்கப்பூரில் இடம்பெறவிருந்த சந்திப்பில் இருந்து பின்வாங்கியதால் அந்த சந்திப்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. . அண்மையில் அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் Bolton, அமெரிக்க உதவி ஜனாதிபதி Mike Pence ஆகியோர் வடகொரியா தொடர்பாக கூறிய கருத்துக்களுக்கு பதிலாக வடகொரியா காரமான கருத்துக்களை தெரிவித்து இருந்தது. அதன் பின்னரே ரம்ப்-கிம் சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது. . Pence அண்மையில் தனது கூற்று ஒன்றில் வடகொரியாவின் கிம் அமெரிக்காவின் வேண்டுகோள்களுக்கு இணங்காவிடின், […]

இலங்கை ஆவணங்களை அழித்தது பிரித்தானியா

1978 ஆம் ஆண்டுமுதல் 1980 ஆம் ஆண்டு வரையான காலத்தில் பிரித்தானியாவின் MI5 (Military Intelligence 5) மற்றும் SAS (Special Air Service) அமைப்புகள் இலங்கை தொடர்பாக கொண்டிருந்த 195 ஆவணங்களை பிரித்தானியா இரகசியமாக அழித்துள்ளது என்று பிரித்தானியாவின் The Guardian பத்திரிகை கூறியுள்ளது. இந்த ஆவணங்கள் எப்போது, எங்கே அழிக்கப்பட்டன என்ற விபரங்கள் தற்போதும் மறைக்கப்பட்டுள்ளன. அக்கால பிரித்தானியாவின் இலங்கை தொடர்பான செயல்பாடுகளை மறைக்கவே இவ்வாறு ஆவண அழிப்பு செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. . திட்டமிட்ட […]

ரம்புக்கு கிம்மின் சிங்கப்பூர் சந்திப்பில் சந்தேகம்

அமெரிக்கா ஜனாதிபதி ரம்பும் வடகொரியாவின் தலைவர் கிம்மும் அடுத்த மாதம் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் சந்தித்து வடகொரியாவின் அணுவாயுத நடவடிக்கைகளை நிறுத்த பேச்சுவார்த்தைகள் செய்யவிருந்தனர். இந்த சந்திப்பு உறுதி செய்யப்பட்ட பின்னர் ரம்பும் கிம்மை புகழ்ந்து அறிக்கைகள் வெளியிட்டு இருந்தார். தனக்கு சமாதத்துக்கான நோபேல் பரிசு கிடைப்பதிலும் தவறில்லை என்று கூறியிருந்தார். . ஆனால் தற்போது அந்த சந்திப்பு இடம்பெறுமா, இடம்பெற்றாலும் அந்த சந்திப்பு பலன் எதையும் அளிக்குமா என்ற சந்தேகங்கள் ரம்புக்கு தற்போது தோன்றியுள்ளன. […]

சீனா மீதான வர்த்தக யுத்தம் இடைநிறுத்தல்

ரம்ப் அரசு சீனா மீது நடைமுறை செய்யவிருந்த புதிய வரிகளை தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளது. இந்த செய்தியை Steven Mnuchin என்ற அமெரிக்காவின் Treasury Secretary தெரிவித்து உள்ளார். இவர் அண்மையில் சீனா சென்று திரும்பியவர். இது ரம்ப் தரப்பின் பின்வாங்கலாகவே கருதப்படுகிறது. . சீனா அமெரிக்காவில் இருந்து செய்யும் கொள்வனவுகளை மேலும் அதிகரிக்க இணங்கி உள்ளதாக Mnuchin கூறி உள்ளார். ஆனால் திடமாக எந்தவொரு திட்டத்தையும் கூறவில்லை. . இந்த விடயம் தொடர்பாக சீனாவின் பத்திரிகையான […]

ரம்பின் தடைக்கு எதிராக ஐரோப்பா சட்டம்

ஒபாமா காலத்தில் ஈரானுடன் செய்து கொண்ட அணு ஆயுத தவிர்ப்பு உடன்படிக்கையில் இருந்து விலகிய ரம்ப், பதிலுக்கு ஈரான் மீது மீண்டும் தடைகளை விதித்தார். அத்துடன் ஈரானுடன் இணைந்து செயல்படும் மற்றைய நாடுகளின் நிறுவனங்களையும் தண்டிக்கவுள்ளதாக கூறி இருந்தார். அதன்படி ஈரானில் முதலிடும் ஐரோப்பிய நிறுவனங்களையும் அமெரிக்கா தண்டிக்கும். . அமெரிக்காவின் மேற்படி தண்டனைகளில் இருந்து ஐரோப்பிய நிறுவனங்களை பாதுகாக்க ஐரோப்பிய ஒன்றியம் blocking statute என்ற சட்டத்தை நடைமுறை செய்யவுள்ளது. இந்த சட்டப்படி ஐரோப்பிய நிறுவங்கள் […]

ஈரானை கைவிடலாம் பிரான்ஸின் Total

ஒபாமா காலத்தில் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் செய்துகொண்ட உடன்படிக்கையின் பின் ஈரான் மீதான பொருளாதாரா தடைகள் நீக்கப்பட்டு இருந்தன. அதற்கமைய பிரான்ஸின் Total என்ற எண்ணெய் அகழ்வு நிறுவனம் 2017 ஆம் ஆண்டில் ஈரானில் $2 பில்லியன் முதலீட்டை செய்ய முன்வந்திருந்தது. ஏற்கனவே சுமார் $48 மில்லியன் தொகையை செலவிட்டும் உள்ளது. . ஆனால் தற்போது ரம்ப் ஈரான் உடன்படிக்கையில் இருந்து வெளியேறி உள்ள நிலையில், அமெரிக்கா ஈரானுடன் இணைந்து […]