தெரேசா இல்லத்தில் குழந்தைகள் விற்பனை?

இந்தியாவின் Jharkland மாநிலத்தில் Mother Teresa பெயரில் இயங்கும் Missionaries of Charity என்ற பொதுநல சேவை அமைப்பு குழந்தைகளை விற்பனை செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையம் 1950 ஆம் ஆண்டு Mother Theresa அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையம் திருமணமாகாத தாய்மாரை பாதுகாக்கும் ஒரு நிலையமாகும். . இங்கு குறைந்தது 5 அல்லது 6 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்று கூறுகிறார் Aman Kumar என்ற அப்பகுதி போலீஸ் அதிகாரி. . போலீசார் தற்போது […]

New York Times நிருபர்களுக்கு மிரட்டல்

அமெரிக்காவின் New York Times பத்திரிகை இலங்கையின் முன்னாள் ராஜபக்ச அரசுக்கும், சீனாவுக்கும் இடையில் இருந்த உறவு தொடர்பாக கட்டுரை ஒன்றை ஜூன் 26 ஆம் திகதி வெளியிட்டு இருந்தது. அந்த கட்டுரையால் விசனம் கொண்ட முன்னாள் ஜனாதிபதி தரப்பு இலங்கையில் நிலைகொண்டுள்ள New York Times நிருபர்கள் மீது வசைபாட ஆரம்பித்துள்ளது என்கிறது New York Times. . மேற்படி பத்திரிகையாளர் உட்பட அனைத்து பத்திரிகையாளர்களையும் பாதுகாப்பது இலங்கை அரசின் கடமை என்றுள்ளார் New York […]

குகைக்குள் தொலைந்த 13 பேரும் உயிருடன்

ஜூன் மாதம் 23 ஆம் திகதி, 9 நாட்களுக்கு முன்னர், தாய்லாந்தில் உள்ள Tham Luang Nang Non என்ற நிலக்கீழ் குகை ஒன்றை பார்வையிட சென்ற கால்பந்தாட்ட குழு ஒன்றின் அங்கத்துவ இளைஞர்களும் (11 வயது முதல் 16 வயது வரை), அவர்களின் பயிற்சியாளரும் (25 வயது) இதுவரை தொலைந்து இருந்தனர். அவர்களின் இருப்பிடம் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் உயிருடனேயே உள்ளார். . இவர்கள் 10 km நீளம் கொண்ட இந்த குகைக்குள் […]

இந்திய-அமெரிக்க பேச்சு மீண்டும் பின்போடல்

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் இடம்பெறவிருந்த உயர்மட்ட பேச்சு மீண்டும் அமெரிக்காவால் பின்போடப்பட்டுள்ளது. பின்போடலுக்கான காரணத்தை அமெரிக்கா வெளியிடவில்லை. நேற்று புதன் இரவு அமெரிக்கா இந்த அறிவிப்பை செய்துள்ளது. இம்முறையுடன் இந்த பேச்சு இரண்டாவது தடவையாக பின்போடப்படுள்ளது. . வளர்ந்து வரும் சீனாவுக்கு எதிராக இந்தியாவை இராணுவ மட்டத்தில் அமெரிக்கா வளர்க்க விரும்பினாலும், பொருளாதாரம் உட்பட மற்றைய பல விடயங்களில் அமெரிக்காவும், இந்தியாவும் முரணாக உள்ளன. . அமெரிக்கா அண்மையில் இந்தியா, கனடா, ஐரோப்பிய நாடுகள், சீனா ஆகிய […]

முன்னாள் மலேசிய பிரதமரிடம் $273 மில்லியன் பொருட்கள்

முன்னாள் மலேசிய பிரதமர் Najib Razak வீட்டில் இருந்து சுமார் $273 மில்லியன் வெகுமதியாக பொருட்களை மலேசிய போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த விபரங்களை மலேசிய போலீசார் இன்று புதன் தெரிவித்து உள்ளனர். பணம், நகைகள், விலை உயர்ந்த கைப்பைகள், விலை உயர்ந்த மணிக்கூடுகள் என்பன கைப்பற்றப்பட்ட பொருட்களுள் அடங்கும். . மலேசிய போலீஸ் அதிகாரியான Amar Singh கூற்றுப்படி, கடந்த மாத நடுப்பகுதியில் முன்னாள் பிரதமரின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை விலைமதிப்பிடும் பணியில் சுமார் […]

Eknaligoda பாதுபாப்பை வேண்டுகிறது Amnesty

ஞானசார தேரருக்கு சிறை தண்டனை கிடைக்க வைத்த Sandhya Eknaligoவின் பாதுகாப்பை இலங்கை அரசாங்கம் உறுதி செய்யவேண்டும் என்று கேட்டுக்கெண்டுள்ளது Amnesty International அமைப்பு. இன்று செவ்வாய் Amnesty வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச மனித உரிமை சட்டங்களின்படி அரசுகள் தமது நாடுகளுள் மிரட்டலுக்கு உள்ளானோரை பாதுகாப்பது கடமை என்றுள்ளது. . ஞானசார தேரருக்கு சிறை தண்டனை கிடைத்தபின் எக்னாலிகொடவுக்கு பெரும் அளவில் மிரட்டல்கள் விடப்பட்டுள்ளதாக கூறுகிறது Amnesty. இந்த அமைப்பின் கருத்துப்படி, எக்னாலிகொட மீதான மிரட்டல்கள் நன்கு […]

துருக்கியில் Erdogan மீண்டும் வெற்றி

துருக்கியில் இன்று ஞாயிரு இடம்பெற்ற தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி எர்டோகன் (Recep Tayyip Erdogan) மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அவரின் கட்சியின் தலைமையில் போட்டியிட்ட கூட்டணியும் பாராளுமன்ற தேர்தலில் அறுதி பெரும்பான்மை ஆட்சியை கைப்பற்றி உள்ளது. . ஜனாதிபதி தேர்தலின் எர்டோகன் சுமார் 53% வாக்குகள் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. அத்துடன் மொத்தம் 600 ஆசனங்கள் கொண்ட பாரளுமன்றில் எர்டோகன் தலைமயிலான கூட்டணி சுமார் 343 ஆசனங்களை பெறும் என்றும் கூறப்படுகிறது. . 2017 […]

கனடாவில் மீண்டும் தமிழ் கொலை

அண்மையில் கனடாவின் Porter விமான சேவையின் பிரசுரம் ஒன்று கொண்டிருந்த ஒரேயொரு சொல்லான ‘வணக்கம்’, குற்றுள்ள ‘ம்’ என்ற மெய் எழுத்துக்கு பதிலாக குற்றற்ற ‘ம’ என்ற உயிர்மெய் எழுத்தில் முடிந்திருந்தது. ஆனால் அதையும் விட மிகையான தமிழ் பிழைகளுடன் கடனாவின் டொரோண்டோ மாநகரின் பொது போக்குவரத்து சேவையான TTC (Toronto Transit Commission) தற்போது பிரசுரம் ஒன்றை பிரசுரித்துள்ளது. TTC சேவையின் POP (Proof-of-Payment) தொடர்பான பிரசுராமே மேலே உள்ளது – முடிந்தால் அதில் உள்ள […]

காஸ்மீர் மாநில ஆட்சி கவிழ்ந்தது

பாரதீய ஜனதா கட்சியின் (BJP) உதவியுடன் காஸ்மீர் மாநில கட்சியான People’s Democratic Party (PDP) தலைமையில் இருந்த ஆட்சி, BJP கூட்டு ஆட்சியில் இருந்து விலகியதால், கவிழ்ந்துள்ளது. இந்தியாவில் இஸ்லாமியர் பெரும்பான்மையாக உள்ள ஒரே மாநிலமான ஜம்மு-காஸ்மீரில் 2015 ஆம் ஆண்டுமுதல் இந்த கூட்டு ஆட்சியில் இருந்துள்ளது. . தற்போது PDP கட்சியிடம் 28 ஆசனங்களும், BJP கட்சியிடம் 25 ஆசனங்களும் உள்ளன. அந்த மாநிலத்தில் பெரும்பான்மை ஆட்சி செய்ய குறைந்தது 45 ஆசனங்கள் தேவை. […]

இன்று செவ்வாய் மீண்டும் சீனா சென்றார் கிம்

வடகொரியாவின் தலைவர் கிம் (Kim Jong-un) மீண்டும் இன்று செவ்வாய் சீனாவின் தலைநகர் பெய்ஜிங் சென்றுள்ளார். சீனாவின் அரச செய்தி நிறுவனம் கிம் பெய்ஜிங்குக்கு இரண்டு நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளது. . இம்முறை கிம் தனது பழைய, Ilyushin-62 என்ற ரஷ்ய தயாரிப்பு விமானமானத்திலேயே பெய்ஜிங் பறந்துள்ளார். . முன் எப்போதும் இல்லாதவாறு கிம் கடந்த 3 மாதங்களில் சீனாவுக்கு மேற்கொள்ளும் 3வது பயணம் இதுவாகும். . இந்த பயணத்தின் விபரங்களோ, அல்லது முன்னைய […]