2011 ஆம் ஆண்டில் சிரியாவின் தென் பகுதியான Deraa என்ற இடத்திலேயே அந்நாட்டு அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்தன. மேற்கு நாடுகளினதும், சில அரபு நாடுகளினதும் உதவியுடன் இந்த கிளர்ச்சி அசாத் அரசுக்கு எதிரான ஆயுத யுத்தமாக மாற்றப்பட்டது. நேற்று வியாழன் Deraa பகுதியை அசாத்தின் அரச படைகள் மீண்டும் கைப்பற்றின. . ஆரம்பித்தில் மேற்கு நாடுகளாலும், மேற்கு நட்பு அரபு நாடுகளாலும் உருவாக்கப்பட்ட Free Syrian Army என்ற ஆயுத குழு நாளடைவில் சிதைய ஆரம்பித்தன. […]
இதுவரை காலமும் வசைபாடாத பிரித்தானிய பிரதமர் தெரசா மேயையும் ரம்ப் இன்று அவமதித்து கருத்துக்கள் வெளியிட்டு உள்ளார். இந்த கருத்துக்களை ரம்ப் The Sun பத்திரிகைக்கு வழங்கி உள்ளார். . பிரித்தானியா எவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் தான் பிரித்தானிய பிரதமர் மேக்கு வழங்கிய அறிவுரைகளை பிரதமர் ஏற்கவில்லை என்றும், பதிலாக பிரதமர் தன்பாட்டில் நடந்து கொண்டுள்ளதாகவும், அதனால் அமெரிக்கா பிரித்தானியாவுடன் வர்த்தக உடன்படிக்கைகளை செய்ய முடியாது போகும் என்றும் கூறியுள்ளார். . பிரதமர் […]
பிரித்தானியாவுக்கும் குரேசியாவுக்கும் (Croatia) இடையில் இன்று இடம்பெற்ற FIFA கிண்ணத்துக்கான அரை-இறுதி (Semi-final) ஆட்டத்தில் குரேசியா வென்றுள்ளது (குரேசியா 2 : இங்கிலாந்து 1). அதனால் குரேசியா இறுதி போட்டிக்கு (Final) தெரிவாகி உள்ளது. . ஏற்கனேவே பெல்ஜியத்துடன் போட்டியிட்ட பிரான்ஸும் வெற்றி பெற்று (1:0) இறுதி போட்டிக்கு தெரிவாகி இருந்தது. அதன்படி பிரான்சும், குரேசியாவும் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களுக்கான போட்டியில் வரும் ஞாயிற்று கிழமை, 15ஆம் திகதி விளையாடும். . பிரான்சிடம் தோல்வி கண்ட […]
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மேலும் பல பொருட்களுக்கு அமெரிக்கா இறக்குமதி 10% வரி (tariff) அறவிட இன்று செய்வாய் தீர்மானித்துள்ளது. அந்த தீர்மானப்படி மேலும் $200 பில்லியன் பெறுமதியான சீன பொருட்களுக்கு அமெரிக்கா 10% புதிய இறக்குமதி வரியை அறவிடும். . இந்த $200 பில்லியன் இறக்குமதி வரிக்கு உள்ளாகும் 6,031 பொருட்களுள் உணவுகள், இரசாயணம், இலத்திரனியல் பொருட்கள், அலுவலக பொருட்கள் ஆகியனவும் அடங்கும். . இந்த புதிய 10% இறக்குமதி வரிகள் வரும் செப்டெம்பர் […]
World Health Organization (WHO) தாய் பாலூட்டலை ஊக்குவிக்கும் நோக்கில் நடைமுறை செய்யவிருந்த செயல்பாடுகளை அமெரிக்காவின் ரம்ப் அரசு தடுக்க முனைந்துள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் New York Times பத்திரிகை இந்த உண்மைகளை வெளியிட்டுள்ளது. இறுதியில் ரஷ்யாவின் உதவியுடனேயே WHO அமைப்பின் இந்த முயற்சிகள் நடைமுறை செய்யப்பட்டன. . அண்மையில் WHO தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உலக நாடுகளுக்கு உணர்த்த தீர்மானம் ஒன்றை செய்யவிருந்தது. அத்துடன் அரசுகள் குழந்தை உணவுகளை தயாரிக்கும் நிறுவனங்கள் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்ளவதையும் […]
ஜப்பானை நோக்கி பயங்கரமான சூறாவளி மரியா செல்கிறது. அண்மையில் ஜப்பானில் ஏற்பட்ட பெருமழைக்கும், மண்சரிவுகளுக்கும் சுமார் 110 பேர் பலியாகியும், 2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தும் இருந்தனர். ஆனால் சூறாவளி மரியா (Typhoon Maria) மேலும் பாதிப்பை உருவாக்கலாம் என்று கருதப்படுகிறது. . இன்று திங்கள் சூறாவளி மரியா ஜப்பானின் ஒக்கினாவா பகுதிக்கு கிழக்கே 480 km தூரத்தில் நிலைகொண்டுள்ளது. தற்போது அதன் காற்றின் வேகம் சுமார் 230 km/h அளவில் உள்ளது. தற்போது Category 4 […]
சிங்கப்பூர் ஊடாக பிரித்தானிய செல்லவிருந்த இரண்டு இலங்கை தமிழர் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டு, சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூரின் Changi விமான நிலையத்தில் 46 மற்றும் 27 வயதுடைய இந்த இரண்டு இலங்கை தமிழரும் ஜூன் 19ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 8 மாத சிறை தண்டனை வழங்கப்படுள்ளது. . சிங்கப்பூர் அதிகாரிகளின் அறிக்கைப்படி, இந்த இருவரும் கொழும்பில் இருந்து சிங்கப்பூருக்கு இலங்கை கடவு சீட்டில் ஜூன் 18 ஆம் திகதி பயணித்து உள்ளனர். மறுநாள் […]
தாய்லாந்து குகை ஒன்றுள் அகப்பட்டு இருந்த 12 இளைஞர்களையும் அவர்களின் உதைபந்தாட்ட ஆசிரியரையும் மீட்கும் பணி தற்போது 4 இளைஞர்களை மீட்டுள்ளது. ஏனையோரை மீட்கும் பணிகள் தொடர்கின்றன. . இவர்கள் அனைவரும் கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் அந்த குகைக்குள் அகப்பட்டுள்ளார். இவர்கள் குகைக்குள் பல கிலோமீட்டர் தூரம் சென்றபின், கடும் மழை காரணமாக, இவர்கள் உள்ள இடத்துக்கும், குகையின் வாசலுக்கும் இடையில் பல இடங்கள் வெள்ளத்தால் நிரம்பி உள்ளது. பள்ளமான குகை பகுதிகள் […]
2011 ஆண்டுக்கான இந்தியாவின் புள்ளிவிபரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிபரத்தின்படி தமிழ் போன்ற திராவிட மொழியை முதல் மொழியாக பேசுவோர் வீதம் இந்தியாவில் குறைந்து வருகிறது. அதேவேளை ஹிந்தியை முதல் மொழியாக பேசுவோர் வீதம் அதிகரித்து வந்துள்ளது. . 2011 ஆம் ஆண்டுக்கான தரவுகளின்படி இந்தியாவில் 43.63% மக்கள் (மக்கள் தொகை: 528,347,193) ஹிந்தியை முதல் மொழியாக பேசியுள்ளார். . அதேவேளை Bengali பேசுவோர் 8.03% (97,237,669) ஆகவும், Marathi பேசுவோர் 6.86% (83,026,680) ஆகவும், Telugu […]