சீன ஜனாதிபதி Xi JinPing இலங்கை ஜனாதிபதியின் திட்டங்களுக்கு மேலும் $295 மில்லியன் உதவி வழங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பொலநறுவையில் சீனாவின் உதிவியுடன் நிறுவப்படும் வைத்தியசாலை ஒன்றின் அடிக்கல் நடும் வைபவம் ஒன்றிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியுள்ளார். . “சீனாவின் தூதுவர் இ சியன் லிஅங் (Yi XianLiang) இந்த அடிக்கல் நடும் தினத்தை குறிப்பிட என் வீட்டுக்கு வந்தபொழுதே சீனாவின் ஜனாதிபதி மேலும் ஒரு அன்பளிப்பை செய்யவுள்ளதை கூறினார்” என்றுள்ளார் சிறிசேன. . ஜனாதிபதி […]
தற்போது உலகின் எந்த பகுதியிலும் இருக்கக்கூடிய அதிவேக cell phone இணைப்பு 4G தொழில்நுட்பத்தை கொண்டது. ஆனால் அடுத்து வரவுள்ள 5G cell phone தொழில்நுட்பம் 4G வேகத்துடன் ஒப்பிடுகையில் பலமடங்கு வேகமானதாக இருக்கும். இந்த தொழில்நுட்பம் HD தரம் கொண்ட திரைப்படத்தை சில நிமிடங்களில் download செய்ய வழிசெய்யும். அத்துடன் சாரதியில்லாத வாகனங்கள் போன்றவற்றை இயக்கவும் இது நன்கு பயன்படும். . இதுவரைகாலமும் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளே தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தின. தற்போதுள்ள 4G […]
சிங்கப்பூரில் 1.5 மில்லியன் நோயாளர்களின் பெயர், தேசிய அடையாள இலக்கம், முகவரி, பிறந்த திகதி போன்ற தகவல்கள் திருடப்பட்டு உள்ளாதாக வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் அதிகாரிகள் கூறியுள்ளனர். அத்துடன் 160,000 நோயாளர் உட்கொள்ளும் மருந்து விபரங்களும் கூடவே திருடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. . சிங்கப்பூர் பிரதமரின் விபரங்களும் இந்த திருட்டுள் அடங்கும். . SingHealth என்ற சிங்கப்பூரின் மிகப்பெரிய வைத்தியசேவை அமைப்பின் கணனிகளை ஊடுருவியே இந்த தகவல்கள் களவாடப்பட்டு உள்ளன. . சிங்கப்பூர் அதிகாரிகள் இந்த cyber attack […]
இஸ்ரேல் பாராளுமன்றம் (Knesset) நேற்று வியாழன் ‘தனி சிங்கள சட்டம்’ போன்ற ஒரு யூதர் சார்பு சட்டத்தை உருவாக்கி உள்ளது. அந்த சட்டப்படி இஸ்ரேல் ஒரு “யூதர் நாடு” (nation of the Jewish people). இஸ்ரேலில் யூதர் பெரும்பான்மையாக இருப்பினும் அந்நாட்டின் 21% சனத்தொகை அரபு மக்களை கொண்டது. இந்த சட்டத்தை பலரும் ஒரு இனவாத சட்டம் என்று வர்ணித்துள்ளனர். . மொத்தம் 120 உறுப்பினரை கொண்ட இஸ்ரேலிய பாராளுமன்றின் 62 பேர் இந்த புதிய […]
Google நிறுவனம் மீது ஐரோப்பிய ஒன்றியம் (EU) சுமார் $5 பில்லியன் (4.3 பில்லியன் யூரோ) தண்டம் விதித்துள்ளது. கடந்த 3 வருடங்களாக செய்துவந்த விசாரணைகளின் பின்னரே இந்த தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் Google தனது பலத்தால் மற்றைய நிறுவனங்களை அழிக்கும் செயல்பாடுகளை வரும் 90 நாட்களுள் நிறுத்தவேண்டும் என்றும், மறுப்பின் மேலும் தண்டனைகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. . கூகிளின் அன்ட்ரொய்ட் (Android) operating system (OS) பெருமளவு smart phone சந்தையை கொண்டுள்ளது. Samsung, […]
பின்லாந்தின் (Finland) தலைநகரான கெல்சிங்கியில் (Helsinki) ரஷ்யாவின் ஜனாதிபதி புட்டினை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி ரம்ப், 2016 ஆண்டின் ஊடுருவல் தொடர்பான தனது நாட்டு புலனாய்வு அமைப்பான FBIயின் விசாரணை முடிவுகளை நம்பாது, புட்டினின் கூற்றை நம்புவதாக கூறியிருந்தார். அதனால் பலத்த எதிர்ப்புகளை அமெரிக்காவில் எதிர்கொண்ட ரம்ப், நேற்று தனது கூற்றில் ‘not’ தவறிவிட்டது என்றுள்ளார். . 2016 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்ற காலத்தில், அந்த தேர்தல் முடிவுகளை மாற்றும் நோக்கில், ரஷ்ய […]
ஐரோப்பிய ஒன்றியமும் (EU), ஜப்பானும் நேற்று மிகப்பெரிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றுக்கு இணங்கி உள்ளன. இதை விரும்பாத அமெரிக்காவின் ஜனாதிபதி ரம்ப், ஜப்பானை பொருளாதரம் மூலம் தண்டிக்க முனையலாம் என்றும் நம்பப்படுகிறது. . இந்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஐரோப்பிய ஒன்றியம் செய்து கொண்ட மிக பெரிய வர்த்தக உடன்படிக்கையாகும். இந்த உடன்படிக்கைக்குள் சுமார் 600 மில்லியன் மக்கள் அடங்குவர். அத்துடன் இந்த உடன்படிக்கை சுமார் $150 பில்லியன் வர்த்தகத்தையும் உள்ளடக்கும். . இந்த உடன்படிக்கை […]
இன்று பின்லாந்து நாட்டின் (Finland) தலைநகரான கெல்சிங்கி (Helsinki) என்ற நகரில் அமெரிக்காவின் ஜனாதிபதி ரம்பும், ரஷ்யாவின் ஜனாதிபதி புட்டினும் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது ரம்ப் அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான FBI யை புறக்கணித்த ரம்ப், ரஷ்யாவின் ஜனாதிபதி புட்டின் கூற்றையே நம்புவதாக கூறியுள்ளார். . அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான FBI தனது விசாரணைகளின் பின் 2016 ஆண்டின் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது அமெரிக்காவின் கணனிகளை உளவு பார்த்தது ரஷ்யாவே என்று அறிக்கையை வெளியிட்டுருந்தது. அதையிட்டு நீங்கள் […]
பிரான்ஸ் (France) மற்றும் குரோசியா (Croatia) ஆகிய நாடுகளுக்கு இடையே இன்று ஞாயிரு இடம்பெற்ற 2018 FIFA உதைபந்தாட்ட இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வென்றுள்ளது (பிரான்ஸ்: 4, குரோசியா: 2). . பிரான்ஸ் 1998 ஆம் ஆண்டிலும் FIFA கிண்ணத்தை வென்றிருந்தது. அத்துடன் 2006 ஆம் ஆண்டில் இரண்டாம் இடத்தையும், 1958 ஆம் மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் 3ஆம் இடத்தையும் பிரான்ஸ் வென்றிருந்தது. அதேவேளை 2010 ஆம் ஆண்டில் பிரான்ஸ் 29 ஆம் இடத்தில் இருந்துள்ளது. […]
இந்தியாவின் ஒடிசா மாநிலத்து (Odisha) பூரி (Puri) என்ற நகரில் உள்ள 12ஆம் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஜகன்னாத் ஆலய (Jagannath Temple) சொத்துக்களை வைத்திருக்கும் சுரங்க வாசல் கதவின் திறப்பு தொலைந்து உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் ஆலய சொத்துக்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்வி அரசையும், மக்களையும் உலுக்கி உள்ளது. . இறுதியாக இந்த கோவிலின் தங்க சுரங்கம் 1985 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அப்போது இடம்பெற்ற கோவில் திருத்த வேலை செலவுகளுக்கு […]