அஸ்ரேலியாவின் Liberal கட்சிக்குள் இடம்பெற்ற உட்கட்சி மோதலின் விளைவாக முன்னாள் பிரதமர் Malcolm Turnbull பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, Scott Morrison இன்று வெள்ளி பிரதமராகி உள்ளார். கடந்த 11 வருடங்களில், Scott Morrison அஸ்ரேலியாவின் 6 வது பிரதமர் ஆகிறார். . புதிய தலைமைத்துவத்துக்கான உட்கட்சி போட்டியின்போது Tresurer Scott Morrison 45 வாக்குகளையும், Malcolm Turnbull ஆதரவு வழங்கிய Home Affairs அமைச்சர் Peter Dutton 40 வாக்குகளையும் பெற்றிருந்தனர். . Energy அமைச்சராக […]
பிரித்தானியாவின் British Airways விமான சேவையும், பிரான்சின் Air France விமான சேவையும் ஈரானுக்காக சேவைகளை நிறுத்த முடிவு செய்துள்ளன. அமெரிக்காவின் பல நகரங்களுக்கு சேவை வழங்கும் இந்த விமான சேவைகள் அமெரிக்காவின் ஈரான் மீதான தடைகளில் இருந்து தப்பவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன. . British Airway சேவையின் இறுதி சேவை செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி ஈரானின் தலைநகர் தெஹ்ரான் சென்று மறுநாள் பிரித்தானியா திரும்பும். . Air France தெஹ்ரானுக்கான தனது […]
பாக்கிஸ்தானில் இம்ரான் கான் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முனைந்துள்ளன. . முதலில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான முரண்பாடுகளை பேசியே தீர்க்கவேண்டும் என்று பகிரங்கமாக கூறியிருந்தார். அது மட்டுமன்றி ஜூலை மாத இறுதியில் இம்ரான் கான் இந்திய பிரதமர் மோதியுடனும் தொலைபேசி மூலம் உரையாடி உள்ளார். . கடந்த சனிக்கிழமை இந்திய பிரதமர் மோதியும் இம்ரான் கானுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். மோதியின் அந்த […]
இலங்கையின் விமான சேவையான SriLankan மீண்டும் தனியார் முதலீட்டை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஒரு வருடத்துக்கு முன்னரும் சுமார் $1 பில்லியன் கடனில் உள்ள இந்த விமான சேவை முதலீடு பெற்று தனியார் வசமாக முனைந்திருந்தது. அப்போது சிறிது நாட்டம் கொண்டிருந்த TPG Capital (Texas Pacific Group Capital) என்ற அமெரிக்க முதிலீட்டு நிறுவனம் பின்னர் பின்வாங்கி இருந்தது. . SriLankan விமான சேவையின் கணக்கியல் புத்தகங்களை ஆராய்ந்த பின்னரே TPG முதலிட மறுத்து பின்வாங்கி […]
Total என்ற மிகப்பெரிய பிராஸ் நாட்டு எண்ணெய் அகழ்வு நிறுவனம் ஈரானில் தனது செயல்பாடுகளை நிறுத்தி, அங்கிருந்து வெளியேறுகிறது. இந்த செய்தியை ஈரானிய அரசு இன்று திங்கள் வெளியிட்டு உள்ளது. அமெரிக்காவின் ரம்ப் அரசு ஈரான் மீது தடை விதிக்கவுள்ள நேரத்தில், Total அமெரிக்காவில் உள்ள தனது எண்ணெய் அகழ்வு திட்டங்களை பாதுகாக்கும் நோக்கில் ஈரானில் இருந்து வெளியேறுகிறது. . 2015 ஆம் ஆண்டில் ஒபாமா அரசு, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகள் ஈரானுடன் […]
இந்தியாவின் தென் பகுதியில் கடந்த சில தினங்களாக பொழிந்து வரும் மழையினால் பெருக்கெடுத்த வெள்ளத்துக்கு வெள்ளிக்கிழமை வரை 1,019 பேர் பலியாகி உள்ளனர் என்று இந்திய உள்துறை அமைச்சு கூறியுள்ளது. அத்துடன் சுமார் 324,000 பேர் தமது வீடுகளில் இருந்து வெளியேற உதவிடப்பட்டு, வேறு இடங்களுக்கு நகர்த்தப்பட்டும் உள்ளனர். அங்கு மொத்தம் 33 மில்லியன் மக்கள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். . அதிகம் பாதிப்பை அடைந்த கேரளா மாநிலத்தில் மட்டும் சுமார் 300 பேர் இதுவரை […]
அமெரிக்காவை தாக்க சீன படைகளின் குண்டு வீச்சு விமானிகளுக்கு பயிற்சி வழங்கப்படுவதாக அமெரிக்காவின் பாதுகாப்பு செயலகமான பென்ரகன் (Pentagon) கூறியுள்ளது. . சீனாவின் படை நடவடிக்கைகளை அறிந்து, அறிக்கை தயாரிக்குமாறு அமெரிக்காவின் காங்கிரஸ் கூறியதன் காரணமாக பென்ரகன் நேற்று வியாழன் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. . கடந்த 3 வருடங்களாக சீனாவின் PLA (People’s Liberation Army) கடல்கள் மேலாக சென்றும் தாக்கும் பயிற்சியில் தரம் அடைந்து வருவதாக அந்த அறிக்கை கூறியுள்ளது. . உதாரணமாக […]
இன்று புதன்கிழமை நியூசிலாந்தில் நடைமுறை செய்யப்பட்ட சட்டம் ஒன்றிப்படி வெளிநாட்டார் நியூசிலாந்தில் ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளை கொள்வனவு செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஆஸ்ரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாட்டவர்களுக்கு இந்த தடை இல்லை. . சீனர் போன்ற செல்வம் மிக்க வெளிநாட்டவர் போட்டிக்கு அதிக பணம் செலுத்தி வீடுகளை கொள்வனவு செய்வதால் உள்ளூர் மக்கள் வீடுகளை கொள்வனவு செய்ய முடியாது உள்ளமையே இந்த புதிய சட்டத்துக்கு காரணம். . கடந்த 10 வருடத்துள் அந்நாட்டில் வீட்டு விலை சுமார் […]
ஐக்கிய நாடுகள் சபைக்கு (UN general budget) அதிக பண பங்களிப்பை செய்யும் இரண்டாவது நாடாக சீனா இடம்பெறவுள்ளது. 2019 ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையான ஐ. நா. செலவுகளின் 12.01% தொகையை சீனா வழங்கவுள்ளது. . இதுவரை இரண்டாம் இடத்தில் இருந்த ஜப்பான் 2019-2021 காலத்தில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்படும். 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையான காலத்தில் ஐ. நா. செலவுகளின் 9.68% தொகையை ஜப்பானும், 7.92% […]
இத்தாலியில் வாகனங்கள் ஓடும் மேம்பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் குறைந்தது 22 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியின் Genoa என்ற நகரில் உள்ள Morandi Bridge என்ற மேம்பாலமே இவ்வாறு உடைந்து வீழ்ந்துள்ளது. இன்று செவ்வாய் வீசிய கடும் புயலே இந்த உடைவுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. . சுமார் 80 மீட்டர் நீளமான உடைந்த மேம்பால துண்டு 50 மீட்டர் கீழே உள்ள புகையிரத பாதையில் வீழ்ந்தபோது அந்த பாலத்தில் பயணித்த வாகனங்களும் கூடவே வீழ்ந்துள்ளன. […]