நேற்று புதன்கிழமை The New York Times பத்திரிகை ரம்ப் தொடர்பாக கட்டுரை (Op-Ed) ஒன்றை, அதை எழுதியவரின் பெயரை குறிப்பிடாது, வெளியிட்டு இருந்தது. இந்த கட்டுரையை எழுதியவர் தன்னை ஒரு ரம்ப் அவையின் பிரதான உறுப்பினர் என்றே கூறியுள்ளார். தானும், தன்னைப்போல் அமெரிக்காவின் நலன் விரும்பிகள் சிலரும் ரம்ப் செயல்பாடுகளில் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற முடிந்ததை செய்வதாக கூறியுள்ளார். இதனால் ரம்ப் விசனம் கொண்டுள்ளார். இந்த கட்டுரையை எழுதியவர் வீரம் இல்லாதவர் என்றும், நேர்மை இல்லாதவர் […]
சிரியாவின் Idlib பகுதியில் ரஷ்யா, 22 நாட்களின் ஓய்வின் பின்னர், மீண்டும் விமான தாக்குதல்களை இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவின் கடுமையான எதிர்ப்பின் மத்தியிலேயே ரஷ்யா இந்த தாக்குதலை மீண்டும் ஆரம்பித்துள்ளது. இந்த பகுதியிலேயே தப்பியுள்ள அரச எதிர்ப்பு குழுக்கள் நிலை கொண்டுள்ளன. இதுவே அவர்களின் இறுதி தளம். . எதிர்ப்பு குழுக்களின் தகவல்படி இன்று 16 இடங்களில், குறைந்தது 30 குண்டுகளை ரஷ்ய யுத்த விமானங்கள் வீசியுள்ளன. . சிரியாவின் அரச படைகள் Idlib மீது […]
உலகமெல்லாம் Made in China என்று பதியப்பட்டு சீனாவின் smartphone வகை தொலைபேசிகள் விற்பனை செய்யப்பட்டாலும், அவற்றுள் இருக்கும் processor (chip) போன்ற சில முக்கிய பாகங்களின் (parts) உரிமையை Qulacomm, Intel போன்ற அமெரிக்காவின் நிறுவனங்களே தற்போது கொண்டுள்ளன. அண்மையில் அமெரிக்காவின் ஜனாதிபதி ரம்ப், சீனாவை தண்டிக்கும் நோக்கில், அமெரிக்காவின் Qualicomm நிறுவனம் சீனாவின் ZTE என்ற smartphone தயாரிக்கும் நிறுவனத்துக்கு semiconductor விற்பனை செய்யக்கூடாது என்று தடை விதித்தார். அதனால் ZTE நிறுவனம் தனது […]
மத்திய கிழக்கின் சிறியதோர் நாடான கட்டார் (Qadar) சவுதி அரேபியாவுடன் மட்டுமே சிறிய நிலப்பரப்பால் இணைந்துள்ளது. அந்த கட்டார்-சவுதி எல்லையோரம் கால்வாய் ஒன்றை தோண்டி, கட்டாரை ஒரு தீவாக்கி பிரிக்க முனைகிறது சவுதி அரசு. கட்டார் மீது சவுதி இந்த காழ்ப்பை கொள்ள காரணம், கட்டார் சவுதியின் எதிரியான ஈரானுடன் நலமான உறவுகளை கொண்டிருப்பதே. . Saud al-Qahtani என்ற சவுதியின் ஆலோசகர் ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்த கருத்து ஒன்றே இந்த திட்ட உண்மையை உறுதியாகி உள்ளது. […]
இந்தையாவின் பிரதமர் மோதி அந்நாட்டில் உள்ள கருப்பு பணத்தை வெளியெடுக்கும் நோக்கில், இரண்டு வருடங்களின் முன், திடீரென பழைய நாணய தாள்களை தடை செய்து, புதிய தாள்களை வெளியிட்டார். நேற்று புதன் இந்திய மத்திய வங்கி (Reserve Bank of India) விடுத்துள்ள அறிவிப்பின்படி பாவைனையில் இருந்த 99.3% (சுமார் 15.3 டிரில்லியன் ரூபாய்) பழைய நாணயங்கள் மீண்டும் தம்மிடம் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் கருப்பு பணம் எதுவும் இதுவரை அரசின் கையில் சிக்கவில்லை. . நல்நோக்கம் […]
இந்த கிழமையின் ஆரம்பத்தில் ஈரானும், சிரியாவும் இராணுவ ஒத்துழைப்பு உடன்படிக்கை ஒன்றில் இணங்கி இருந்தன. அதனால் குமுறுகின்றன இஸ்ரேலும், அமெரிக்காவும். . லிபியாவின் கடாபியையே அழித்ததுபோல் சிரியாவின் அசாத்தையும் அழிக்க உள்நாட்டு யுத்தம் ஒன்றை அமெரிக்கா தலைமையில் மேற்கு நாடுகள் உருவாக்கி இருந்தன. ஆனால் ஈரானும், தென் லெபனானில் உள்ள பலமான இயக்கமான ஈரான் சார்பு ஹெஸ்புல்லாவும் அசாத்தின் உதவிக்கு வந்தன. யுத்தம் இழுப்பாட்டில் உள்ளபோது ரஷ்யாவும் அசாத்தின் உதவிக்கு வந்தது. இந்நிலையில் அசாத் சிரியாவின் தலைமயிலான […]
2022 ஆம் ஆண்டில் தாம் இந்தியரை விண்வெளிக்கு அனுப்ப உள்ளதாக இந்தியா இன்று செவ்வாய் கூறியுள்ளது. அத்துடன் இந்த முயற்சிக்கு $1.43 பில்லியன் மட்டுமே செலவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்தொகை ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் செலவழித்த தொகையிலும் குறைவானதாகும். . இதுவரை ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு தம் நாட்டவரை அனுப்பி உள்ளன. இந்தியா வெற்றிகரமாக இந்தியரை விண்வெளிக்கு அனுப்பின், இந்தியா விண்வெளி சென்ற நாலாவது நாடாகும். . 2014 […]
அமெரிக்காவின் அரிசோனா (Arizona) மாநிலத்து செனட்டர் John MaCain கடந்த சனிக்கிழமை, தனது 82 ஆவது வயதில், காலமாகியிருந்தார். அமெரிக்காவின் கடற்படையில் பணியாற்றிய இவரின் யுத்த விமானம் 1967 ஆண்டு எதிரிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. எதிரிகளிடம் அகப்பட்ட இவர் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். . அமெரிக்காவில் பல அரசியல் பதவிகளை வகித்த இவர் 1987 ஆம் ஆண்டு முதல் அரிசோனா மாநிலத்து செனட்டர் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். . இவர் ரம்புக்கு ஆதரவு வழங்காமையால் இவரை ஒரு […]
Homi Kharas என்ற Brookings Institution ஆய்வாளர் பொருளாதாரத்தில் உலகின் மத்திய வகுப்பு தொடர்பாக ஆய்வு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவரின் ஆய்வின்படி 2020 ஆம் ஆண்டளவில் உலகின் அரைப்பங்கு சனத்தொகை மத்திய வகுப்பில் (middle class) அடங்கும் என்றுள்ளார். . தற்போது உலகின் 48% சனத்தொகையினர் மத்திய வகுப்பில் அடங்குகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் 2.5% சனத்தொகையினர் பணக்கார வகுப்பில் உள்ளனர். . இவரின் ஆய்வில் பொருளாதார மத்திய வகுப்பு என்பது உணவு, உடை, உறையுள் […]
ரஷ்யா அண்மையில் ஏவிய செய்மதியான Kosmos 2521 மீது அமெரிக்கா சந்தேகம் கொண்டுள்ளது. அமெரிக்க State Department assistant secretary Yleem Poblete இது தொடர்பாக கருது தெரிவிக்கையில் “இது என்ன என்பதை எம்மால் உறுதியாக கூறமுடியாது” என்றுள்ளார். . Kosmos 2521 செய்மதியின் நகர்வுகள் வழமைக்கு மாறாக உள்ளன என்று கூறும் அமெரிக்கா, இந்த செய்மதி எதிரி செய்மதிகளை தாக்கும் செய்மதியாக இருக்கலாம் என்று நம்புகிறது. . ஆனால் ரஷ்யா அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்து உள்ளது. […]