S-400 கொள்வனவுக்கு மோதி, பூட்டின் ஒப்பம்

ரஷ்ய ஜனாதிபதி பூட்டினும், இந்திய பிரதமர் மோதியும் இன்று வெள்ளி ரஷ்யாவிடமிருந்து இந்தியாவுக்கான S-400 ஏவுகணை கொள்வனவில் ஒப்பம் இட்டுள்ளனர். இந்த ஏவுகணை கொள்வனவின் பெறுமதி சுமார் $5 பில்லியன் ஆகும். . பூட்டின் வியாழன் இந்தியா பயணித்திருந்தார். அக்காலத்திலேயே இந்த நிலத்தில் இருந்து வானத்துக்கான S-400 ஏவுகணை கொள்வனவு ஒப்பமிடப்பட்டு இருந்தது. இந்த ஏவுகணை எதிரியின் யுத்த விமானங்களை மட்டுமன்றி cruise, ballistic ஏவுகணை போன்ற மற்றைய பல ஏவுகணைகளையும் தங்கி அழிக்கக்கூடியது. இந்த ஏவுகணை […]

இந்திய ICICI வங்கி CEOவின் பதவி பறிப்பு

இந்தியாவின் பிரபல தனியார் வங்கியான ICICI Bank (Industrial Credit and Investment Corporation of India) CEO பதிவியில் இருந்த Chanda Kochchar என்பவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இவர் மீது அண்மையில் இடம்பெற்ற ஊழல் விசாரணை ஒன்றின் பின்னரே பதவி பறிக்கப்பட்டுள்ளது. . மேற்படி பெண் ICICI வங்கியின் CEO மற்றும் Managing Director ஆக பதவி வகித்த காலத்தில் அந்த வாங்கி Videocon Group என்ற நிறுவனத்துக்கு வழங்கிய கடன் தொடர்பாக ஊழல் விசாரணை […]

சீன பல்கலைக்கழகத்தில் தமிழ் துறை

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள Beijing Foreign Studies Universityயில் இந்த தவணை முதல் தமிழ் மொழிக்கான 4-வருட பட்டதாரி (Bachelor’s) படிப்பு நடைமுறை செய்யப்பட்டுள்ளது. இம்முறை 10 சீன மாணவர்கள் இந்த பட்டதாரி படிப்பை தொடர்கின்றனர். . இங்கு ஏற்கனவே இந்தி (Hindi) மற்றும் வங்காள (Bengali) மொழிகளுக்கான பட்டதாரி படிப்புகள் இடம்பெறுகின்றன. . தமிழ் துறைக்கு பொறுப்பாக உள்ள ஈஸ்வரி என்ற புனைபெயரை கொண்ட Zhou Xin தான் தமிழை 15 வருடங்களுக்கு முன்னர் […]

அங் சன் சு கியின் கனடிய குடியுரிமை பறிப்பு

பர்மா நாட்டு அங் சன் சு கியுக்கு (Aung San Suu Kyi) வழங்கப்பட்டு இருந்த கனடிய கௌரவ குடியுரிமையை இன்று செவ்வாய் கனடா பறித்துள்ளது. பர்மாவின் ரோஹிங்யா (Rohingya) மக்கள் மீது அந்நாட்டு அரசு செய்து வரும் தாக்குதல்களை சு கி நிறுத்தாமையாலேயே அவரின் கௌரவ குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது. . கனடிய கௌரவ குடியுரிமை இழப்பால் சு கி பெரும் பாதிப்பு எதையும் அடையாவிடாலும், இது அவருக்கு ஒரு அவப்பேர் ஆகும். . கனடாவின் மனித […]

முன்னர் NAFTA, இப்போ USMCA

கனடா, அமெரிக்கா, மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்கு இடையில் நடைமுறையில் இருந்த NAFTA (North American Free Trade Agreement) என்ற வர்த்தக உடன்படிக்கை USMCA (United States, Mexico and Canada Agreement) என மாறுகிறது. . 1994 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட NAFTA என்ற வர்த்தக உடன்படிக்கையை ரம்ப் குறை கூறி வந்திருந்தார். தான் ஜனாதிபதியா ஆகின NAFTAவை மாற்றி அமைக்கப்போவதாக கூறியும் வந்திருந்தார். அவர் ஆட்சிக்கு வந்தபின் NAFTA உடன்படிக்கையை மாற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டார். சுமார் 14 […]

மண்டேலா கட்சி இப்போ மாபியா கட்சி

அமெரிக்காவின் The New York Times தென்னாபிரிக்காவின் ANC கட்சி தொடர்பாக இன்று கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நெல்சன் மண்டேலா உருவாக்கிய ANC (African National Congress) கட்சி உறுப்பினர் தற்போது ஊழல் நோக்கில் ஒருவரை ஒருவர் படுகொலை செய்வதாக கூறப்படுள்ளது. . 2016 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை சுமார் 90 பேர் ANC உட்கட்சி போட்டிக்கு பலியாகி உள்ளனர் என்று கணித்துள்ளனர் University of Cape Town மற்றும் Global Initiative Against […]

தப்புக்கணக்கு போட்டு தற்பெருமையில் மோதி

2014 ஆம் ஆண்டு ஆரம்பித்த தனது ஆட்சி காலத்தில் 35 புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டதாக கூறி இந்திய பிரதமர் மோதி அண்மையில் புகழ்ச்சி அடைந்துள்ளார். ஆனால் தரவுகள் அவரின் கூற்றில் உண்மை இல்லை என்று நிரூபிக்கின்றன. . அவர் தனது கூற்று ஒன்றில் “2014 ஆம் ஆண்டுவரை, சுதந்திரம் அடைந்து 67 ஆண்டு காலத்தில், 65 விமான நிலையங்களே இருந்தன.” என்றும் தற்போது 100 விமான நிலையங்கள் உள்ளதாகவும் கூறியுள்ளார். அதாவது தனது காலத்தில் 35 […]

இந்தோனேசியாவின் சுனாமிக்கு 384 பேர் பலி

நேற்று வெள்ளி (September 28) மாலை இந்தோனேசியாவை தாக்கிய 7.5 அளவிலான நில நடுக்கம் சுனாமியையும் தோற்றுவித்தது. தற்போது வெளிவரும் செய்திகளின்படி இந்த சுனாமிக்கு குறைந்தது 384 பேர் பலியாகி உள்ளனர். இத்தொகை மேலும் அதிகரிக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. . இந்தோனேசியாவின் Sulawesi தீவை தாக்கிய இந்த சுனாமி சுமார் 380,000 குடியிருப்பாளரை கொண்ட Palu என்ற நகரையே கடுமையாக தாக்கி உள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட 384 பேரும் Palu நகரிலேயே பலியாகி உள்ளனர். அதேவேளை Donggala நகரும் […]

Elon Musk மீது பங்குச்சந்தை ஊழல் குற்றச்சாட்டு

இலான் மஸ்க் (Elon Musk) என்ற பிரபல தொழில்நுட்ப துறை வர்த்தகர் மீது அமெரிக்காவின் SEC (Securities and Exchange Commission) பங்குச்சந்தை ஊழல் குற்றச்சாட்டை பதிந்துள்ளது. . 1971 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவில் பிறந்த இவர் தனது 17ஆவது வயதில் கனடாவுக்கு இடம்பெயர்ந்து இருந்தார். கனடாவின் Queen’s Universityயில் பயில ஆரம்பித்த இவர் இரண்டு வருடங்களின் பின்னர் அமெரிக்கா சென்று தனது உயர் படிப்பை தொடர்ந்தார். . முதலில் Zip2 என்ற தொழில்நுட்ப நிறுவனத்தை […]

அங்கோலாவில் முன்னாள் ஆட்சி மகன் கைது

ஆபிரிக்க நாடான அங்கோலாவின் (Angola) முன்னாள் ஜனாதிபதி Jose Eduardo dos Santos என்பவரின் மகனான Zenu என்று அழைக்கப்படும் Jose Filomeno dos Santos அந்நாட்டு புதிய அரசால் ஊழல் குற்றசாட்டுகள் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார். . Zenuவின் தந்தை அங்கோலாவை 1979 ஆம் ஆண்டு முதல் 2017 ஆண்டுவரை ஆட்சி செய்தவர். ஜனாதிபதியான தந்தை 2013 ஆம் ஆண்டில் 35 வயதான மகனை அங்கோலாவின் sovereign wealth fund குக்கு chairman ஆக நியமித்தார். […]