சீனாவின் உதவியை நாடுகிறது அமெரிக்க நாசா

அமெரிக்காவின் NASA முதல் முறையாக சீனாவின் தொழில்நுட்ப உதவியை நாடுகிறது. இந்த மாதம் 3 ஆம் திகதி (2019-01-03) சீனா Chang’e 4 என்ற தனது விண்கலத்தை சந்திரனின் மறுபக்கத்தில் தரையிறக்கி இருந்தது. அமெரிக்காவோ அல்லது ரஷ்யாவோ இந்த சாதனையை இதுவரை செய்திருக்கவில்லை. . ஆனால் சந்திரனின் மறுபக்கத்தில் தரை இறங்கும் விடயத்தில் அமெரிக்கா தற்போது சீனாவின் உதவியை நாடியுள்ளது. குறிப்பாக சீனாவின் தரவுகளை பயன்படுத்தி அமெரிக்கா தனது தரையிறங்கலை திட்டமிடவுள்ளது நாசா (NASA). இவ்வாறு சீனாவின் […]

இரண்டாம் ரம்ப்-கிம் சந்திப்பு அடுத்த மாதம்

அமெரிக்க ஜனாதிபதி ரம்பும் (Trump), வடகொரிய தலைவர் கிம்மும் (Kim) பெப்ருவரி மாத இறுதி காலத்தில் மீண்டும் சந்திக்கவுள்ளனர் என்று கூறியுள்ளது வெள்ளைமாளிகை. இது இவர்களின் இரண்டாம் சந்திப்பாக இருக்கும். கடந்த வருடம் ஜூன் மாதம் சிங்கப்பூரில் இடம்பெற்ற இவர்களின் முதலாம் சந்திப்பு இதுவரை எதையும் சாதித்து இருக்கவில்லை. . நேற்று வெள்ளிக்கிழமை கிம்மின் முக்கிய பிரமுகர் Kim Yong Chol அமெரிக்க ஜனாதிபதி ரம்பை வெள்ளைமாளிகையில் சந்தித்து 90 நிமிடங்கள் உரையாடிய பின்னரே இரண்டாம் ரம்ப் […]

சந்திரனில் கருகிய பருத்தி தளிர்

அண்மையில் சீனாவின் Chang’e என்ற விண்கலம் சந்திரனின் மறுபக்கத்தில், பூமிக்கு தெரியா பக்கத்தில், தரையிறங்கி இருந்தது. இக்கலத்தில் ஆய்வு நோக்கில் சில பொருட்களும் எடுத்து செல்லப்பட்டது. அப்பொருட்களில் தளிர்க்கவிருந்த பருத்தி தாவரமும் ஒன்று. அந்த விண்கலத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை ஒன்றில் இருந்த இந்த பருத்தி எதிர்பார்த்தபடியே சந்திரனில் தரைதட்டிய பின் தளிர் விட்டு இருந்தது. ஆனால் அந்த தளிர் மின் துண்டிப்பு காரணமாக தற்போது கருகிவிட்டது. . இந்த பருத்தி தளிர் இரண்டு நாட்களுக்கு நலமாக […]

வளர்த்த முதலைக்கு பலியான ஆராச்சியாளர்

தான் சட்டவிரோதமாக வளர்த்த முதலைக்கு பலியாகி உள்ளார் இந்தோனேசிய ஆராச்சியாளர். இந்தோனேசியாவின் Sulawesi என்ற இடத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. . Deasy Tuwo என்ற 44 வயதுடைய பெண் ஆராச்சியாளர் சுமார் 4.4 மீட்டர் (14.4 அடி) நீளம் கொண்ட இந்த முதலையை சட்டவிரோதமாக வளர்த்து வந்துள்ளார். அந்த முதலைக்கு இவர் தற்போது பலியாகி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இவர் முதலையின் இருப்பிடத்துள் தவறி வீழ்ந்து இருக்கலாம் என்று […]

மேயின் Brexit திட்டம் தோல்வி

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே (Theresa May) ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற முன்வைத்த திட்டம் இன்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் தோல்வி அடைந்துள்ளது. இன்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற வாக்கெடுப்பில் இந்த திட்டத்துக்கு ஆதரவாக 202 வாக்குகளும், எதிராக 432 வாக்குகளும் கிடைத்துள்ளன. இதனால் மேயின் அரசியல் தலைமையும் ஆபத்து நிலையில் உள்ளது. . மேயின் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தோருள் மே அணியை சார்ந்த 118 பேரும் அடங்குவர். . இந்த வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் […]

Zoellick: சீனாவை கட்டுப்படுத்த முடியாது

அமெரிக்கா எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அது சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது என்று கூறியுள்ளார் முன்னாள் World Bank தலைவரும், அமெரிக்காவின் வர்த்தக பேச்சுகளுக்கான முன்னாள் பிரதிநிதியுமான Robert Zoellick. . சீனா தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்வதை தடுக்க அமெரிக்கா பல முனைகளிலும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்துடன் ஐரோப்பிய மற்றும் நடப்பு நாடுகளை சீனாவின் 5G நவீன தொழில்நுட்பங்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுள்ளது அமெரிக்கா. . அத்துடன் அமெரிக்காவின் வர்த்தக பேச்சுகளுக்கான தற்போதை […]

​ரம்ப் மீது FBI விசாரணை?

அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் மீது அமெரிக்காவின் மத்திய புலனாய்வு பிரிவான FBI விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக சில அமெரிக்க பத்திரிகைகள் கூறுகின்றன. அமெரிக்காவின் நலனுக்கு எதிராகவும், எதிரி நாடான ரஷ்யாவின் நலனுக்கு ஆதரவாகவும் ரம்ப் செயல்பட்டுள்ளார் என்று கூறியே இந்த விசாரணை ஆராம்பிக்கப்பட்டுள்ளது. . கடந்த வெள்ளிக்கிழமை ​The New York Times பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டு இருந்தது. பின்னர் Washington Post பத்திரிகையும் இவ்வாறு ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தது. . இது தொடர்பாக […]

அமெரிக்காவில் அதி நீண்ட அரச சேவை முடக்கம்

அமெரிக்காவில் தற்போது மத்திய அரச சேவைகளின் ஒரு பகுதி முடக்கத்தில் உள்ளது. ரம்ப் தனது விருப்பப்படி மெக்ஸிகோ எல்லையோரம் வேலி அமைக்க அமெரிக்க காங்கிரஸிடம் பணம் கேட்டிருந்தார். காங்கிரஸ் தேவையான பணத்தை வழங்க மறுத்ததன் காரணமாக ரம்ப் வரவுசெலவு திட்டங்களில் கையொப்பமிட மறுத்ததனாலேயே இந்த பகுதி முடக்கம் இடம்பெறுகிறது. . ஜனாதிபதி தேர்தலின் போது தான் மெக்ஸிகோ எல்லையோரம் வேலி போடுவேன் என்றும், அதற்கு மெக்ஸிகோவே பணம் செலுத்தும் என்று ரம்ப் கூறியிருந்தார். ஆனால் மெக்ஸிகோ வேலிக்கு […]

உலகின் முதலாவது பணக்காரனின் விவாகரத்து

Amazon என்ற Internet மூலமான விற்பனை நிறுவனத்தை ஆரம்பித்த Jeff Bezos என்பவரின் திருமணமும் விவாகரத்தில் முடிகிறது. இவரே தற்போது உலகின் முதலாவது பணக்காரர் ஆவார். இவரின் மொத்த சொத்துக்களின் பெறுமதி சுமார் $137 பில்லியன் ($137,000,000,000) என்று கணிப்பிடப்பட்டு உள்ளது. . தற்போது 54 வயதான இவர் 25 வருடங்களுக்கு முன் MacKenzie Tuttle என்பவரை திருமணம் செய்திருந்தார். 1994 ஆம் ஆண்டில் இவர் ஆரம்பித்த Amazon நிறுவனத்தில் இவரின் மனைவி முதலில் கணக்காளர் ஆக […]