அமெரிக்காவின் ரம்ப் ஆட்சிக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் தொடர்ந்தும் உக்கிரம் அடைந்து வருகின்றது. . முன்னர் ரம்ப் தான் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் $300 பில்லியன் பெறுமதியான பொருட்களுக்கு அறவிடப்படும் மேலதிக இறக்குமதி வரியை (tariffs) மேலும் அதிகரிக்கவுள்ளதா கூறியிருந்தார். அதற்கு பதிலாக சீனாவும் அமெரிக்காவில் இருந்து இறைக்குமதி செய்யப்படும் $75 பில்லியன் பெறுமதியான பொருட்களுக்கு மேலதிக இறக்குமதி வரியை செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் அறவிட உள்ளதாக இன்று வெள்ளி கூறியுள்ளது. […]
இந்தியாவின் அரச விமான சேவையான Air India விமான சேவைக்கு தேவையான எரிபொருளை வழங்கும் அரச எரிபொருள் நிறுவனம் (OMC) இன்று 6 விமான நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கலை இடைநிறுத்தம் செய்துள்ளது. ஏற்கனவே செய்துகொண்ட கொள்வனவுகளுக்கு பணம் செலுத்தாமையே காரணம் என்று கூறப்படுகிறது. . Kochi, Pune, Patna, Ranchi, Vizag, Mohali ஆகிய விமான நிலையங்களுக்கே எரிபொருள் வழங்கல் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. இந்த இடைநிறுத்தம் Air India விமான சேவையையே பாதிக்கும். ஏனைய சேவைகள் தொடர்ந்தும் […]
தனக்கு ‘ஆமா’ போடாதவர்கள் எல்லோரையும் வசைபாடும் இயல்பு கொண்ட ரம்ப் தற்போது டென்மார்க்கையும் (Denmark), அதன் பிரதமர் Mette Frederiksen ஐயும் வசைபாட ஆரம்பித்து உள்ளார். டென்மார்க்கின் ஒரு அங்கமான கிறீன்லாண்டை (Greenland) அமெரிக்கா கொள்வனவு செய்யலாம் என்ற ரம்பின் அண்மைய கருத்தை டென்மார்க் உதாசீனம் செய்ததே ரம்பின் கொதிப்புக்கு காரணம். . டென்மார்க்கின் பிரதமர் ரம்பின் கருத்தை ‘absurd’ என்று கூறி நிராகரித்தார். கொதித்துப்போன ரம்ப் பிரதமரை ‘nasty’ என்று வர்ணித்தார். பிரதமர் மட்டுமன்றி, அந்நாட்டின் […]
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் காஸ்மீர் பகுதியில் இன்று செவ்வாய் மோதல்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இந்த மோதல்களுக்கு பலர் பலியாகி உள்ளனர். ஆனால் மோதல்கள் தொடர்பாக இரு தரப்பும் முரண்பட்ட தரவுகளை வெளியிட்டு உள்ளன. . இந்தியா நடாத்திய தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் பக்கத்தில் 3 பொதுசனம் பலியானதாக பாகிஸ்தான் கூறி உள்ளது. அத்துடன் தாம் 6 இந்திய படையினரை சுட்டு கொன்றதாகவும் பாகிஸ்தான் கூறி உள்ளது. இந்தியா இதை ஒரு பொய் செய்தி என்று கூறியுள்ளது. . காஸ்மீருக்கு நடைமுறையில் […]
தாம் புதிய வகை ஏவுகணை ஒன்றை ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்ததாக இன்று திங்கள் அமெரிக்காவின் பென்ரகன் அறிவித்து உள்ளது. கலிபோர்னியாவின் San Nicolas தீவில் இருந்து ஏவப்பட்ட இந்த சோதனை ஏவுகணை 500 km சென்று சோதனை குறியை தாக்கியதாக கூறப்படுகிறது. . 1987 ஆம் ஆண்டு றேகனும், கொர்பசோவும் செய்துகொண்ட INF என்ற இணக்கப்படி 500 km முதல் 5,500 km தூரம்வரை பாயும் ஏவுகணைகளை சோதனை செய்வது தடை செய்யப்பட்டு இருந்தது. ஆனால் ரஷ்யா, […]
சிரியாவின் பகுதியான இட்லிப் (Idlib) நோக்கி சென்ற துருக்கி படைகள் மீது இன்று திங்கள் சிரியாவின் விமான படைகள் தாக்கியதில் 3 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. . சிரியாவின் இட்லிப் பகுதியில் மட்டுமே தற்போது துருக்கியின் ஆதரவு கொண்ட ஆயுத குழுக்கள் இயங்கி வருகின்றன. ஆனால் அந்த பகுதியையும் சிரியா தன்வசம் எடுக்க தாக்குதல்களை செய்து வருகிறது. அந்த தாக்குதல்களில் இருந்து தான் வளர்த்த ஆயுத குழுக்களை காப்பாற்றும் நோக்கிலேயே துருக்கி தனது படைகளை இட்லிப் […]
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று சனிக்கிழமை, உள்ளூர் நேரப்படி இரவு 10:40 மணிக்கு, திருமண வீடு ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்கு 63 பேர் பலியாகியும், 180 பேர் வரை காயமடைந்து உள்ளனர். . தாக்குதலுக்கு உள்ளன குடும்பம் சியா (Shia Hazara) இனத்தை சார்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. சியா இஸ்லாமியர் மீது சுனி இஸ்லாமிய குழுக்கள் தாக்குதல் நடாத்துவதுண்டு. தலபான், ISIS ஆகியன சுனி குழுக்களே. ஆனால் தலபான் தாம் இந்த தாக்குதலை செய்யவில்லை என்று கூறியுள்ளது. […]
ஐரோப்பிய ஒன்றியம் சிரியாவுக்கு எதிராக விடுத்த பொருளாதார தடைகளை மீறி, சிரியாவுக்கு ஈரானின் கப்பலான Grace 1 ஈரானின் எண்ணெய்யை எடுத்து சென்றது என்று கூறி பிரித்தானியா அக்கப்பலை கைப்பற்றி இருந்ததது. உடனே ஈரானும் பிரித்தானியாவின் கப்பல்கள் இரண்டை பாரசீக வளைகுடாவில் கைப்பற்றி இருந்தது. . நேற்று பிரித்தானியா தான் கைப்பற்றிய ஈரானி கப்பலான Grace 1 ஐ விடுவித்து இருந்தது. ஆனால் அந்த கப்பல் தற்போதும் Gibraltar அருகே நிலைகொண்டுள்ளது. . இன்று வெள்ளி அதே […]
அமெரிக்காவின் Democratic கட்சியை சார்ந்த Rashida Tlaib என்ற பலஸ்தீனர் வழிவந்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினருக்கும், அதே கட்சியை சார்ந்த Illhan Omar என்ற சோமாலியர் வழிவந்த காங்கிரஸ் உறுப்பினருக்கும் விசா வழங்க இஸ்ரேல் மறுத்துள்ளது. அமெரிக்காவின் Republican கட்சியை சார்ந்த ஜனாதிபதி ரம்பும் இஸ்ரேலின் தடையை பாராட்டி உள்ளார். . மேற்படி இரண்டு பெண்களும் பாலஸ்தீனருக்கு ஆதரவாக குரல்கொடுத்து வந்ததே இஸ்ரேலின் சினத்துக்கு காரணம். . அமெரிக்காவில் முழுமையாக தங்கியிருக்கும், அமெரிக்காவின் முதல் நட்பு நாடான […]
இலங்கை ரெயில் சேவை அபிவிருத்திக்கு $160 மில்லியன் கடன் வழங்க ADB (Asian Development Bank) இணங்கி உள்ளது. அதேவேளை இலங்கை அரசு $32 மில்லியன் முதலீட்டை செய்யும். . இப்பணம் புதிய காகித, smart-phone, மற்றும் smart-card ticket முறையை நடைமுறை செய்யவும், ரெயில் சாரதிகளுக்கு நவீன தொலைத்தொடர்புகளை வழங்கவும், உபகாரங்களை புதுப்பிக்கவும் பயன்படும் என்று கூறப்பட்டுள்ளது. . இலங்கையில் தற்போது இயங்கும் உபகரணங்களின் அரை பங்கு சுமார் 30 வருட பழமையானவை என்று கூறப்படுகிறது. […]