ஜனாதிபதி ரம்பை உளவுபார்த்தது இஸ்ரேல்?

அமெரிக்க ஜனாதிபதி ரம்பை அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேல் ஒட்டு கேட்கும் கருவிகள் மூலம் உளவு பார்க்க முனைந்துள்ளது என்கிறது அமெரிக்காவின் Polico என்ற செய்தி நிறுவனம். அதை மறுக்கிறது இஸ்ரேல். . வெள்ளைமாளிகையிலும் அண்மைய பகுதிகளிலும் இஸ்ரேல் StingRays என்ற IMSI ( International mobile subscriber identit) அறியும் தொழில்நுட்ப கருவிகளை வைத்து ரம்பை உளவு பார்க்க முனைந்துள்ளது கூறப்படுகிறது. IMSI இலக்கம் smart phone களில் உள்ள SIM card உடன் இணைந்த […]

பஹாமஸ் சூறாவளிக்கு 2,500 பேர் பலி?

அண்மையில் பஹாமஸ் தீவுகளை (Bahamas) தாக்கிய Dorian என்ற சூறாவளிக்கு இதுவரை 50 பேர் மட்டுமே பலியானதாக பட்டியலிடப்பட்டாலும், தற்போது சுமார் 2,500 பேர் காணப்படாதோர் பட்டியலில் உள்ளனர். சிறிய ஒரு தீவில் இவர்கள் தவறி தற்போது ஒரு கிழமைக்கு மேலாகிறது. . செப்டம்பர் 1ஆம்  திகதி Abacos தீவின் கிழக்கே நுழைந்த Dorian செப்டம்பர் 3ஆம் திகதி தீவின் வடக்கே வெளியேறி இருந்தது. . இந்த சூறாவளி Abacos தீவை தாக்கியபோது காற்று வீச்சு 295 […]

ரம்பின் கடைசி விரட்டல் John Bolton

ரம்பின் ஆட்சியில் இருந்து அவரது பாதுகாப்பு ஆலோசகர் John Bolton இன்று விரட்டப்பட்டு உள்ளார். ரம்பின் குறுகிய ஆட்சி காலத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்த மூன்றாவது நபர் Bolton. இவருக்கு முன் Michael Flynn, HR McMasterஆகியோர் இந்த பதவியை கொண்டிருந்தவர்கள். . ரம்புக்கும், Boltonனுக்கும் இடையில் பலத்த கொள்கை வேறுபாடுகள் நிலவியதாக கூறப்படுகிறது. இறுதியான வேறுபாடு அண்மையில் முறிந்துபோன தலபானுடனான இரகசிய பேச்சு. ரம்ப் இந்த இரகசிய பேச்சை விரும்பினார், ஆனால் Bolton நிராகரித்தார். […]

பிரித்தானிய பாராளுமன்றம் இடைநிறுத்தம்

பிரித்தானிய பாராளுமன்றத்தை இன்று திங்கள் முதல் இடைநிறுத்தம் செய்துள்ளார் புதிய பிரதமர் Boris johnson. பாராளுமன்றை தனது கட்டுப்பாடில் வைக்க முடியாத நிலையிலேயே பிரதமர் இவ்வாறு நடந்துகொண்டுள்ளார். . இன்று திங்கள் அமர்வின் பின்னரே இந்த இடைநிறுத்தம் (suspension) இடம்பெறுகிறது. . கடந்த கிழமை பாராளுமன்றில் தோல்வி அடைந்த பிரதமர் அக்டோபர் 31 ஆம் திகதி ஒரு பொதுத்தேர்தலை நடத்தும் உரிமையை வழங்குமாறு இன்று திங்கள் கேட்டிருந்தார். அந்த உரிமையையும் பெற முடியாத நிலையிலேயே பிரதமர் பாராளுமன்றை […]

கப்பலோட்டிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட அமெரிக்கா

Adrian Darya என்ற பெயர்கொண்ட (முன்னர் Grace 1) ஈரானிய எண்ணெய் கப்பலின் தலைமை கப்பலோட்டிக்கு (captain) பல மில்லியன் அமெரிக்க டாலர்களை இலஞ்சமாக வழங்க அமெரிக்கா முன்வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் 43 வயதுடைய அகிலேஷ் குமார் (Akhilesh Kumar) என்ற அந்த இந்திய பிரசையான கப்பலோட்டி இலஞ்சத்தை பெற்று அமெரிக்காவுக்கு உதவ மறுத்துள்ளார். . இந்த கப்பல் ஈரானின் எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு சிரியா நோக்கி சென்றது. அதை தடுக்கும் நோக்கில் அமெரிக்கா அந்த கப்பலை கைப்பற்றும்படி […]

ரம்ப்-தலபான் இரகசிய பேச்சுவார்த்தை முறிந்தது

நாளை ஞாயிறு அமெரிக்காவில் இடம்பெறவிருந்த ரம்ப்-தலபான் சந்திப்பை இன்று முறித்துக்கொண்டார் அமெரிக்க ஜனாதிபதி ரம்ப். . அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் ஆப்கானிஸ்தானின் தலபான் இயக்கத்துடன் சில காலமாக இரகசிய பேச்சுவார்த்தை நடாத்தி வருகிறார். அங்கு அமெரிக்க படைகள் நடாத்திவரும் 18 வருடகால யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதே ரம்பின் நோக்கம். . ஆனால் ரம்புடன் பேச்சுவார்த்தை நிகழ்த்திவரும் தலபான் தனது தாக்குதல்களையும் தொடர்ந்து வந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றுக்கு ஒரு […]

சந்திர கலத்துடனான தொடர்பை இழந்தது இந்தியா

சந்திரனில் மெதுவாக தரையிறங்கும் நோக்கில் ஏவிய Chandrayaan-2 என்ற தனது சந்திர கலத்துடனான தொடர்புகளை இந்தியா இழந்துவிட்டது என்று இந்தியாவின் விண்ணாய்வு நிலையம் ISRO அறிவித்துள்ளது. அந்த கலத்துடனான தொடர்பை இழந்தது நிரந்தரமானதா அல்லது மீட்கப்படக்கூடியதா என்று இந்திய இதுவரை அறிவிக்கவில்லை. . சந்திரனின் மேற்பரப்பில் இருந்து 2.1 km உயரத்தில் கலம் உள்ளபோதே தொடர்புகள் அற்று போயின. அதுவரை கலத்துடனான தொடர்புகள் நலமாக இருந்துள்ளன. . சந்திரனில் மோதாது, மெதுவாக தரையிறங்கும் (soft landing) இந்தியாவின் […]

சிம்பாப்வே முகாபே மரணம்

சிம்பாப் நாட்டின் (Zimbabwe) முன்னாள் ஜனாதிபதி முகாபே (Robert Mugabe) இன்று தனது 95 ஆவது வயதில் காலமானார். சுதந்திர போராளியாக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து, பின் சிம்பாப்வேயின் சர்வாதிகாரியாக மாறிய இவர் 2017 ஆம் ஆண்டில், 37 வருட சர்வாதிகார ஆட்சியின் பின், இராணுவ புரட்சி மூலம் பதவி இறக்கம் செய்யப்பட்டு இருந்தார். . கடந்த ஏப்ரல் மாதம் முதல் இவர் சிங்கப்பூரில் வைத்தியம் பெற்று வந்திருந்தார். . பிரித்தானியர் ஆட்சி காலத்தில் அப்போது […]

பிரித்தானிய பிரதமரின் தம்பி பதவி விலகினார்

தற்போதைய பிரித்தானிய பிரதமர் Boris Johnsonனின் தம்பியார் Jo Johnson இன்று தனது வர்த்தக அமைச்சர் பதவியையும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்துள்ளார். பிரதமரும், அண்ணனுமான Boris உடன் கொண்ட Brexit தொடர்பான முரண்பாடே தம்பியின் பதவி துறப்புக்கு காரணம். . Brexit தொடர்பாக இடம்பெற்ற பாராளுமன்ற வாக்கெடுப்பில் தனது விருப்பத்துக்கு ஏற்ப வாக்களிக்காத தம்பி உட்பட 21 Tory (அல்லது Conservative) கட்சி உறுப்பினர்களை கட்சியில் இருந்து விளக்கினார் பிரதமர் ஜான்சன். அதனால் உட்கட்சி முரண்பாடு, […]

மகேந்திரன் இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம்?

இலங்கை மத்திய வங்கியின் தலைவரை இலங்கைக்கு நாடு கடத்துமாறு இலங்கை சிங்கப்பூரை கேட்கவுள்ளது. தற்போது சிங்கப்பூரில் வாழும் சிங்கப்பூர் வாசியான இவர் மீது $74 மில்லியன் ஊழல் (insider trading) குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. . 2015 ஆம் ஆண்டில் இவர் சில வர்த்தக உண்மைகளை தனது மருமகனுக்கு வழங்கி இலாபம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவரது மருமகன் அப்போது மகேந்திரனின் முதலீடுகளை மேற்பார்வை செய்தவர். . மகேந்திரன் இலங்கை அரசுக்கு $11 மில்லியன் நட்டம் ஏற்படவும் காரணமாக […]