டெல்லி ஆட்சியை மீண்டும் AAP கட்சி வெல்லும்

இந்தியாவின் தலைநகர் பகுதிக்கான சட்டசபையை கைப்பற்ற பா.ஜ. கட்சி பெரும் முயற்சிகள் செய்திருந்தாலும் அங்கு ஆட்சியில் உள்ள AAP (Aam Aadmi Party) கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற உள்ளது என்று முந்திய கணிப்புக்கள் கூறுகின்றன. இன்று சனிக்கிழமை இடம்பெறும் தேர்தலின் உத்தியோகபூர்வ கணக்கெடுப்புகள் வரும் செவ்வாய்க்கிழமையே வெளிவரும். . தற்போதைய கணிப்புகளின்படி மொத்தம் 70 ஆசனங்களை கொண்ட சபையில் சுமார் 52 ஆசனங்களை AAP பெரும். இரண்டாம் இடத்தில் பா. ஜ. கட்சி உள்ளது. மூன்றாம் […]

பலியான தத்து பிள்ளையின் பெற்றார் நாடு கடத்தப்படார்

தமக்கு பிள்ளை இல்லாத பிரித்தானியாவின் Hanwell நகர வாசிகளான Arti Dhir, Kaval Raijada ஆகிய இருவரும் இந்தியா சென்று குயாராத் பகுதியில் வாழ்ந்த Gobal Sejani என்ற பையனை 2015 ஆம் ஆண்டில் தத்து எடுத்து இருந்தனர். . பையன் விசாவுக்கு காத்திருக்கும் காலத்தில் தத்தெடுத்த பெற்றார் மீண்டும் பிரித்தானியா சென்றிருந்தனர். அத்துடன் பையன் பெயரில் 150,000 பௌண்ட்ஸ் பெறுமதியான காப்புறுதியும் பெற்றிருந்தனர். . அந்நிலையில், 2017 ஆம் ஆண்டில், Gobal இனம் தெரியாதோர் இருவரால் […]

பிரித்தானிய யுத்த விமானிகளை IPKF இலங்கையில் பயன்படுத்தியது?

1987 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் ராஜீவும், இலங்கை சனாதிபதி ஜே. ஆரும் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை செய்தபின் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு இலங்கையின் யுத்த விமானங்களை செலுத்திய பிரித்தானிய (mercenary) யுத்த விமானிகள் IPKF படைகளுக்கு உதவியதாக புதிய வெளியீடு ஒன்று கூறுகிறது. இந்தியா பகிரங்கத்தில் இவ்வாறு பிரித்தானியர்களை பயன்படுவதை மறுத்து இருந்தாலும், களத்தில் இரகசியமாக பிரித்தானிய யுத்த விமானிகளை IPKF பயன்படுத்தி உள்ளது. . பிரித்தானியாவை தளமாக கொண்ட Phil Miller என்ற விசாரணை பத்திரிகையாளரே […]

ரம்பின் காங்கிரஸ் உரையை கிழித்தார் பிலோசி

அமெரிக்க அரசியல் முறைப்படி அந்நாட்டு சனாதிபதி  அமெரிக்காவின் நிலைப்பாடுகள் தொடர்பாக அவ்வப்போது காங்கிரஸுக்கு தெரிவிக்க வேண்டும். அதன் ஒரு அங்கமாக பதவியில் உள்ள சனாதிபதி வருட ஆரம்பத்தில் காங்கிரஸ் சென்று உரையாற்றுவது வளமை. அதை State of the Union என்பர். அவ்வாறு நேற்று செவ்வாய் Republican கட்சியை சார்ந்த ரம்ப் காங்கிரஸுக்கு சென்று ஆற்றிய உரையின் பிரதியை பேச்சின் முடிவில் கிழித்தார் Democratic கட்சியை சார்ந்த அவை பேச்சாளர் (House Speaker) நான்சி பிலோசி (Nancy […]

அமெரிக்காவை மீறி ஐரோப்பாவில் காலூன்றும் Huawei

அமெரிக்காவின் ரம்ப் அரசு விதித்த கடும் தடைகளையும் மீறி ஐரோப்பாவில் காலூன்றுகிறது சீனாவின் Huawei என்ற தொழிநுட்ப நிறுவனம். அந்த வளர்ச்சியின் ஒரு படியாக ஐரோப்பாவில் தொழில்நுட்ப பொருள் தயாரிப்பு நிலையம் ஒன்றை நிறுவி, “Made in Europe” தரத்திலான தயாரிப்புகளை செய்யவுள்ளதாக இன்று செவ்வாய் கூறியுள்ளது Huawei. . அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என்று கூறி அமெரிக்காவில் Huawei பொருட்களை தடை செய்த சனாதிபதி ரம்பின் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளையும் அவ்வாறு தடை செய்யும்படி கேட்டிருந்தது. […]

SriLankan விமான கொள்வனவு ஊழல் விசாரணையில்

2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலத்தில் SriLankan என்ற இலங்கை விமான சேவை ஐரோப்பாவின் Airbus விமான தயாரிப்பு நிறுவனத்தின் விமானங்கள் சிலவற்றை கொள்வனவு செய்திருந்தது. அந்த கொள்வனவை உறுதிப்படுத்த Airbus சட்டவிரோதமாக இலஞ்சம் வழங்கி உள்ளது என்கின்றன அமெரிக்க, ஐரோப்பிய விசாரணைகள். அதனால் அந்த விசயத்தை விசாரணை செய்யவேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டு உள்ளது. . இந்த இலஞ்சம் தொடர்பான அமெரிக்காவினதும், ஐரோப்பாவினதும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்ட Airbus விமான தயாரிப்பு […]

சோமாலியா, பாகிஸ்தான் வெட்டுக்கிளி முற்றுகையில்

ஆபிரிக்க நாடான சோமாலியாவும், பாகிஸ்தானும் வெட்டுக்கிளி (locust, ஒரு வகை grasshopper) பாதிப்பால் அவசரகால நிலையை அறிவித்து உள்ளன. . சோமாலியாவில் படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள் அங்கு ஏற்கனவே அருகி உள்ள பயிரினங்களை அழித்து வருகின்றன. கடந்த 25 வருட காலத்தில் கண்டிராத அளவு வெட்டுக்கிளிகள் அங்கு படையெடுத்து உள்ளன. . சனிக்கிழமை பாகிஸ்தானும் வெட்டுக்கிளி அவசரகால நிலையை அறிவித்து உள்ளது. பாகிஸ்தானில் உள்ள வெட்டுக்கிளிகள் ஈரானில் இருந்து பரம்பியவை. பாகிஸ்தானில் இவை பருத்தி, தானியம், சோளம் போன்ற […]

கொரோனா வைரஸுக்கு 304 பலி, இன்று மட்டும் 45

சீனாவின் வூகான் நகரில் இருந்து உலகம் எங்கும் பரவி வரும் கொரோனா வைரஸுக்கு (coronavirus) இதுவரை 304 பேர் பலியாகி உள்ளனர். இன்று சனிக்கிழமை மட்டும் 45 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் மட்டும் மேலும் 14,551 பேர் இந்த வைரஸின் பாதிப்புக்கு உள்ளாகினர். . மரணங்கள் அனைத்தும் வூகான் நகரை கொண்ட ஹூபெய் (HuBei) மாநிலத்திலேயே இடம்பெற்றுள்ளன. இந்த மாநிலத்திலேயே 9,074 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். அவர்களிலும் சுமார் 444 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் […]

IBM அதிபர் பதவிக்கு அரவிந் கிருஷ்ணா

இந்தியாவில் பிறந்த அரவிந் கிருஷ்ணா (Arvind Krishna) அமெரிக்காவின் மிக பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான IBM நிறுவனத்தின் CEO பதவியை ஏப்ரல் 6 ஆம் திகதி முதல் அடையவுள்ளார். 1990 ஆம் ஆண்டு IBM நிறுவனத்தில் இணைந்த இவர் படிப்படியாக வளர்ந்து தற்போது CEO பதவிக்கு வந்துள்ளார். . IMB நிறுவனம் அமெரிக்காவின் RedHat என்ற நிறுவனத்தை $34 பில்லியனுக்கு கொள்வனவு செய்தமைக்கு கிருஷ்ணாவின் பங்களிப்பு முக்கியமானது என்று கூறப்படுகிறது. . தமிழ்நாட்டு கூனூரில் (Coonoor) […]

இலங்கை தொழிலாளிகள் மீது ரூமேனியாவில் கிளர்ச்சி

இலங்கையில் இருந்து வேலைவாய்ப்பு முகவர் ஒன்றின் மூலம் ரூமேனியா (Romania) சென்ற இரண்டு வெதுப்பக (bread factory) ஊழியர்கள் மீது அந்த நகரின் மக்கள் கிளர்ந்துள்ளனர். இவர்களின் வருகை தமது நகருக்கு மேலதிக அந்நியர்களை வரவழைக்கும் என்று கிளர்ச்சியாளர் கூறுகின்றனர். . அந்நாட்டின் மத்திய பகுதியில் உள்ள Ditrau என்ற நகரிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவர்களை வரவழைத்த தொழிசாலை உரிமையாளர் உள்ளூரில் தேவையான ஊழியர் இல்லாததாலேயே வெளிநாட்டு ஊழியரை அமர்த்தி உள்ளதாக கூறியுள்ளார். நம் நாட்டவர் […]