பாரிய வீழ்ச்சியில் பங்கு சந்தைகள்

கொரோனா வைரஸ் உட்பட பல்வேறு காரணங்களால் உலகின் பல்வேறு பங்கு சந்தைகள் பாரிய வீழ்ச்சியை இந்த கிழமை அடைந்துள்ளன. முக்கியமாக அமெரிக்க பங்கு சந்தைகளான DOW (Dow Jones Industrial Average), NASDAQ, S&P 500 என்பன என்றுமில்லாத அளவுக்கு வீழ்ச்சியை அடைந்துள்ளன. வியாழக்கிழமை DOW அடைந்த வீழ்ச்சி அதன் வரலாற்றில் இடம்பெற்ற அதி கூடிய ஒருநாள் வீழ்ச்சி ஆகும். . DOW பங்கு சந்தையின் இந்த கிழமை வீழ்ச்சி வருமாறு:  கிழமை  DOW வீழ்ச்சி  வீழ்ச்சி […]

இந்திய ஆர்பாட்டக்காரர் இலங்கை பொய் பிரசாரத்தில்

Internet இல் உண்மை செய்திகளுடன் ஒப்பிடுகையில் பொய் செய்திகளே அதிகம். பல சந்தர்ப்பங்களில் களவாடப்பட்ட படங்கள், வீடியோக்கள் இவ்வகை பொய் செய்திகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. அதற்கான தொழிநுட்பமும் இலகுவாக கிடைக்கிறது. . இந்தியாவில் பா.ஜ. கட்சி அண்மையில் அறிமுகப்படுத்திய Citizenship Amendment Act என்ற சட்டத்தை எதிர்த்து போராடும் இந்திய இஸ்லாமிய பெண் ஒருவரின் படம் ஒன்று இலங்கையில் சில சிங்களவாதிகளினால் முன்வைக்கப்பட்ட burqa தடைக்கு சாதகமாக மாற்றி அமைக்கப்பட்டு பயப்படுத்தப்பட்டுள்ளது. . கீழே உள்ள படங்களில் முதலாவது […]

டெல்ஹியில் தொடரும் கலவரம், 32 பேர் பலி

கடந்த 4 நாட்களாக தொடரும் கலவரங்களுக்கு இதுவரை குறைந்தது 32 பேர் பலியாகியும், 200 பேர்வரை காயமடைந்தும் உள்ளனர். இஸ்லாமியருக்கு எதிராக வரையப்பட்ட புதிய Citizenship Amendment Act என்ற சட்டத்தை எதிர்த்தே இந்த ஆர்பாட்டங்கள் நிகழ்கின்றன. . அத்துடன் சிறிய Farukhiya Mosque உட்பட குறைந்தது 3 பள்ளிவாசல்களும் தீ மூட்டப்பட்டு உள்ளன. பொதுவாக கலவரங்கள் நகரின் வடகிழக்கு பகுதிகளிலேயே இடம்பெறுகின்றன. போலீசார் கலவரங்களை கண்டும் காணாமல் இருக்கின்றனர் அல்லது கலவரத்தில் ஈடுபடும் பா.ஜ. சார்பாக […]

கொரோனாவால் Tokyo 2020 ஒலிம்பிக்கும் நிறுத்தப்படலாம்

  உலகம் எங்கும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக Tokyo நகரில் இடம்பெறவுள்ள இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளும் நிறுத்தப்படலாம் என்று ஒலிம்பிக் அதிகாரி Dick Pound கூறியுள்ளார். . Tokyo 2020 ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 24 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளன. இதில் சுமார் 11,000 போட்டியாளர் பங்கு கொள்வர். . ஆனால் இந்த போட்டிகள் பெரும் திரளான பார்வையாளர் பங்கு கொள்ளும் இடம் ஆகையால், கொரோனா வைரஸின் பாதிப்பு தொடருமானால், போட்டிகளை […]

ரம்ப் இந்தியாவில், டெல்கியில் நால்வர் பலி

அமெரிக்க சனாதிபதி ரம்ப் டெல்கி செல்லமுன், அங்கு இடம்பெற்ற ஆர்பாட்டங்களுக்கு இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர். பலியானோருள் ஒருவர் போலீசார், மற்றைய மூவரும் ஆர்பாட்டக்காரர்கள். . மரணித்த பொலிஸாரின் பெயர் Ratan Lal என்று கூறப்படுகிறது. கல்லெறிக்கு ஆளாகியே இந்த போலீசார் மரணித்து உள்ளார். . மேற்படி ஆர்ப்பாட்டம் சர்சைக்குரிய CAA (Citizenship Amendment Act) சட்டத்தை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்டதே. . ஆர்பாட்ட இடங்களில் கடைகள், வாகனங்கள் ஆகிய பல உடமைகளும் தீக்கு இரையாகி உள்ளன. […]

இத்தாலி, தென்கொரியா, ஈரான் எங்கும் கொரோனா

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல பாகங்களிலும் வேகமாக பரவி உள்ளது. சீனாவுள் பரவல் சற்று குறைத்தாலும், சீனாவுக்கு வெளியே வழமைக்கு மாறாக பரவல் அதிகரித்து உள்ளது. . இத்தாலியில் தற்போது 3 பேர் கொரோனா வைரஸுக்கு பலியாகியும், சுமார் 150 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். அதனால் இத்தாலியில் Milan Fashion Week, Venice Carnival உட்பட பல பொது நிகழ்வுகள் நிறுத்தப்பட்டு உள்ளன. . தென் கொரியாவில் கொரோன வைரஸின் பாதிப்புக்கு உள்ளானோர் […]

கொழும்பு-சிங்கப்பூர் விமான சேவையில் JetStar

மலிவு விலை விமான சேவையான JetStar Asia (low-cost carrier) வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் சிங்கப்பூருக்கு, கொழும்புக்கும் இடையில் விமான சேவையை ஆரம்பிக்க உள்ளது. இதன் சேவை கிழமைக்கு 4 நாட்கள் இடம்பெறும். . ஆரம்ப மலிவு விலை பயண சீட்டுக்கள் இந்த மாதம் 24 ஆம் திகதி முதல் இலங்கை விமான சேவை முகவர்களிடம் இருந்தும், மார்ச் மாதம் 5 ஆம் திகதி முதல் jetstart.com மூலம் விற்பனை செய்யப்படும் என்று […]

திருமங்கை ஆழ்வார் சிலையை மீட்க முயற்சி

தற்போது பிரித்தானியாவின் Oxford பல்கலைக்கழக ஆஸ்மோலென் தொல்பொருள் காட்சியகத்தில் (Ashmolean Museum) உள்ள 15 ஆம் நூற்றாண்டு திருமங்கை ஆழ்வார் சிலையை இந்தியா மீட்க முயற்சிக்கிறது. அதற்கேற்ப சட்டப்படியான வேண்டுகோளை இந்தியா விடுத்துள்ளது. . அண்மையில் வெளிவந்த 1957 ஆம் ஆண்டு புகைப்படம் ஒன்று மேற்படி சிலை தமிழ்நாட்டு ஸ்ரீ சௌந்தராஜப்பெருமாள் கோவிலில் இருந்ததை உறுதிப்படுத்தியதே சிலை மீடுப்பு முயற்சிகள் ஆரம்பிக்க காரணம். அங்கிருந்த சிலை களவாடப்பட்டு, பதிலுக்கு ஒரு பொய் பிரதியை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. . […]

ரம்ப் வருகைக்கு தயாராகிறது இந்தியா

அமெரிக்க சனாதிபதி ரம்பின் அடுத்த கிழமை வருகைக்கு பல முனைகளில் தயாராகிறது இந்தியா. ரம்ப் வரும் திங்கள் கிழமை இந்தியா செல்வார். குஜராத் நகரான அகமடாபாத் (Ahmeddabad) சென்று அங்கு உலகிலேயே பெரிய கிரிக்கெட் மைதானத்தை திறப்பார் ரம்ப். . ரம்ப் தாஜ்மகாலுக்கும் செல்லவுள்ளார். ரம்பை அங்குள்ள குரங்குகளிடம் இருந்து பாதுகாக்க போலீசார் catapult உடன் தயாராக உள்ளனர். . அசுத்த மணமுடைய கழிவுகளால் நிரம்பிய ஆறுகளுக்கு மில்லியன் கலன் கணக்கிலான தூய்மையான நீர் பாச்சி மெருகூட்டப்படுகிறது. […]

ஜெர்மனியில் துப்பாக்கி சூடுகளுக்கு 8 பேர் பலி

ஜெர்மனியில், Frankfurt நகருக்கு 25 km கிழக்கே உள்ள Hanau என்ற நகரில் இன்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கி சூட்டு சம்பவங்களுக்கு குறைந்தது 8 பேர் பலியாகி உள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான நிலையங்கள் மத்திய கிழக்கு அல்லது தென் ஆசிய வகையிலான shisha bar என்று கூறப்படுகிறது. . ஆயுததாரர் முதலாவது shisha நிலையத்தை தாக்கியதில் 3 பேரும், இரண்டாம் நிலையத்தை தாக்கியதில் 5 பேரும் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இரண்டாவது தாக்குதல் […]