சீனாவில் கொரோனாவின் தாக்கம் குறைவடைந்து வந்தாலும், இத்தாலியில் கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகின்றது. இத்தாலியில் இதுவரை 366 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இன்று மட்டும் 133 பேர் பலியாகி உள்ளனர். . கொரோனா வைரஸ் நோய்க்கு உட்பட்டோர் தொகையும் இத்தாலியில் 5,883 இல் இருந்து 7.375 ஆக அதிகரித்து உள்ளது. . கொரோனா காரணமாக மிலான் (Milan), வெனிஸ் (Venice) போன்ற பெரும் நகரங்களில் உள்ள சுமார் 16 மில்லியன் இத்தாலியர் தம்மிடங்களில் முடக்கப்பட்டு […]
கடந்த வெள்ளிக்கிழமை எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டு அமைப்பான OPEC விடுத்த வேண்டுகோளுக்கு ரஷ்யா இணங்க மறுக்க, சவுதி அரேபியா தனது உற்பத்தியை அதிகரித்து, அதேவேளை தனது எண்ணெய் விலையை குறைத்தும் உள்ளது. அதனால் தற்போது எண்ணெய் விலை பரல் ஒன்றுக்கு $6 முதல் $8 வரையால் குறைந்து உள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் எண்ணெய் விலை சுமார் 10% ஆல் குறைத்து உள்ளது. இந்த வருடத்தில் விலை சுமார் 30% ஆல் குறைந்து உள்ளது. […]
அந்நிய நாடுகளிடம் இருந்து பெற்ற கடன்களையோ, அல்லது வட்டிகளையோ மீள செலுத்த முடியாத நிலையில் உள்ளது லெபனான் (Lebanon). வரும் திங்கள் கிழமை $1.2 பில்லியன் பெறுமதியான bond ஒன்றை லெபனான் அடைக்க வேண்டும். ஆனால் தம்மிடம் அந்தளவு பணம் இல்லை என்று கூறியுள்ளார் லெபனான் பிரதமர் Hassan Diab. . லெபனான் இவ்வாறு தனது கடனை அடைக்க முடியாமல் இருப்பது இதுவே முதல் தடவை. அமெரிக்க நாணயத்துடன் ஒப்பிடுகையில் லெபனானின் நாணயத்தின் பெறுமதி பாரிய வீழ்ச்சி […]
கொழும்பில் விற்பனை செய்யப்படும் ஆடம்பர அடுக்குமாடிகளின் (luxury condo) விலை வீழ்ச்சி அடைவதாக தரவுகள் கூறுகின்றன. தேவைக்கு மிகையாக ஆடம்பர அடுக்குமாடிகளை கட்டுவதே விலை வீழ்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது. . புதிய வீடுகளின் விலைகள் குறைவதால் ஆடம்பர அடுக்குமாடிகளின் வாடகையும் குறைந்து வருகிறது. ஆடம்பர அடுக்குமாடிகளின் வாடகை சமீபத்தில் 30% ஆல் குறைந்து உள்ளது. . 2014 முதல் 2017 வரையான காலத்தில் 52% ஆல் அதிகரித்திருந்த மாடிகளில் விலை, 2017 முதல் 2019 வரையான […]
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற யுத்த குற்றங்களை விசாரணை செய்ய சர்வதேச நீதிமன்றம் (ICC) தீர்மானித்து உள்ளது. இந்த விசாரணை அமெரிக்க படைகள், ஆப்கானிஸ்தான் படைகள், தலிபான் ஆகிய மூன்று தரப்புகளையும் உள்ளடக்கும். அதனால் விசனம் கொண்டுள்ளது அமெரிக்கா. . இதற்கு முன் இந்த வழக்கை தொடரலாமா என்பதை ஆராய்ந்த ICC நீதிபதி வழக்கு நடைமுறை சாத்தியம் அற்றது என்று கூறி விசாரணையை நிராகரித்து இருந்தார். ஆனால் அதை மீள பரிசீலனை செய்த நீதிபதி Piotr Hofmanski வழக்கை தொடர […]
பன்முனை அரசியலால் சிதைந்து போயுள்ள இஸ்ரேலில் விரைவில் 4 ஆம் தேர்தல் இடம்பெறுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. சில தினங்களுக்கு முன் அங்கு இடம்பெற்ற பொது தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையை அடையாமையே இந்நிலைக்கு காரணம். . கடந்த ஒரு வருடத்துள் அங்கு மூன்று தேர்தல்கள் இடம்பெற்றன. ஆனால் அனைத்து தேர்தல்களும் திடமான அரசை வழங்கவில்லை. திடமான ஆளும் கூட்டணியை உருவாக்க முடியாத நிலையில், பெரும் செலவில், மீண்டும் தேர்தல்கள் இடம்பெற்றன. . அண்மையில் இடம்பெற்ற […]
கொரோனாவுக்கு அமெரிக்காவில் இன்று செவ்வாய் வரை 9 பேர் பலியாகி உள்ளனர். Seattle நகரை கொண்ட வாஷிங்டன் மாநிலமே அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இங்கு மட்டும் 27 பேர் கொரோனா வைரஸின் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மொத்தமாக 108 பேர் அமெரிக்காவில் நோய்வாய்ப்பட்டு உள்ளனர். . இதுவரை 1,981 பேர் சீனாவிலும், 77 பேர் ஈரானிலும், 52 பேர் இத்தாலியிலும், 32 பேர் தென்கொரியாவிலும், 6 பேர் ஜப்பானிலும், 4 பேர் பிரான்சிலும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். . […]
ரம்பின் அகதிகள் மீதான எதிர்ப்பு கொள்கையுள் இலங்கை தமிழ் அகதி ஒருவரும் அகப்பட்டுள்ளார். வியாகுமார் துரைசிங்கம் (Vijayakumar Thuraissigiam) என்ற இலங்கை அகதி அமெரிக்காவுக்கு தெற்கே உள்ள மெக்ஸிகோ மூலம் அமெரிக்காவுள் நுழைந்தவர். . 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவுள் Tijiuana நகர் பகுதியில் நுழைந்த இவரை அமெரிக்கா அதிகாரிகள் சுமார் 20 மீட்டர் தூரம் நுழைந்த பின்னரேயே கைது செய்தனர். அதாவது அவர் அமெரிக்காவின் உள்ளேயே கைது செய்யப்பட்டார், எல்லையில் அல்ல. அமெரிக்காவின் பழைய சட்டப்படி […]
கடந்த சில நாட்களாக சிரியாவுக்கு, துருக்கிக்கும் இடையிலான யுத்தம் மீண்டும் உக்கிரம் அடைந்துள்ளது. சிரியாவின் வான்படை துருக்கி எல்லையோரம் உள்ள சிரியாவின் பகுதிகளில் துருக்கி ஆராவுடன் நிலைகொண்டுள்ள எதிரணிகள் மீது தாக்குதல் செய்தபோது அங்கிருந்த 33 துருக்கி படையினர் பலியாகி இருந்தனர். அதை தொடர்ந்தே அங்கு யுத்தம் மீண்டும் முறுகல் நிலையை அடைந்துள்ளது. . பதிலுக்கு துருக்கியும் சிரியாவின் படைகள் மீதான தாக்குதலை அதிகரித்து உள்ளது. மேற்படி முறுகல் நிலை தொடர்பாக கலந்துரையாட NATO கூடி இருந்தாலும், […]
அமெரிக்காவும், ஆப்கானிஸ்தானின் தலிபானும் நிரந்தர யுத்தநிறுத்த ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பம் இட்டுள்ளனர். கட்டாரில் இடம்பெற்ற இந்த ஒப்பந்தம் இவர்களுக்கு இடையே 18 வருட காலமாக இடம்பெற்றுவந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும். . அமெரிக்கா தரப்பில் Zalmay Khalilzad என்பவரும், தலிபான் தரப்பில் Mullah Abdul Ghani Baradar என்பவரும் இன்று 29 ஆம் திகதி ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ளனர். . இந்த இணக்கம் அமெரிக்காவுக்கும், தலிபானுக்கும் இடையிலானது மட்டுமே. ஆப்கானிஸ்தான் அரசு இந்த இணக்கத்தில் அங்கம் […]