உலகில் பல அமைப்புகள் உலக அளவில் பல்கலைக்கழகங்களை மதிப்பீடு செய்கின்றன. அவற்றின் மதிப்பீட்டு முறைமைகள் ஒன்றில் இருந்து மற்றையது வேறுபடும். Times Higher Education தயாரித்த 2020 ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டில் University of Oxford உலக அளவில் முதலாம் இடத்தில் உள்ளது. இதில் 41% மாணவர்கள் வெளிநாட்டவர். California Institute of Technology இரண்டாம் இடத்திலும் (30% மாணவர் வெளிநாட்டவர்), University of Cambridge மூன்றாம் இடத்திலும் (37% மாணவர் வெளிநாட்டவர்) உள்ளன. . Stanford, […]
கரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு நடவடிக்கைகளில் 5 நிறுவனங்கள் முன்னிற்கின்றன. இந்த ஐந்து நிறுவனங்களில் 3 சீன நிறுவனங்கள், 1 பிரித்தானிய நிறுவனம், மற்றையது அமெரிக்க நிறுவனம். மேற்படி 5 நிறுவனங்களும் விரைவில் மூன்றாம் கட்ட (phase 3) பரிசோதனையை ஆரம்பிக்க உள்ளன. . சீனாவின் Sinopharm Group என்ற அமைப்பின் கீழ் Wuhan Institute of Biologigal Products என்ற ஆய்வு நிலையமும், Beijing Institute of Biological Products என்ற ஆய்வு நிலையமும் இருவேறு […]
ரஷ்ய அண்மையில் செய்துகொண்ட விண்வெளி நடவடிககைகள் பிரித்தானியாவையும், அமெரிக்காவையும் விசனம் கொள்ள வைத்துள்ளன. . கடந்த நவம்பர் மாதம் ரஷ்யா Cosmos 2542 என்ற செய்மதியை ஏவி இருந்தது. இந்த செய்மதிக்குள் இன்னோர் சேய் செய்மதி மறைந்து இருந்துள்ளது. Cosmos 2443 என்ற இந்த சேய் செய்மதி விண்ணில் நகரும் வல்லமை கொண்டது. அந்த வல்லமை மாற்றான் செய்மதிகளுக்கு அருகில் சென்று வேவு பார்க்கவும், தேவைப்பட்டால் தாக்கி அழிக்கும் வல்லமையும் கொண்டது. . ஜூலை 15 ஆம் […]
செங்டு (ChengDu) என்ற சீன நகரில் உள்ள அமெரிக்க முகவரகத்தை மூடுமாறு வெள்ளிக்கிழமை அமெரிக்காவுக்கு சீனா உத்தரவிட்டு உள்ளது. இது அண்மையில் அமெரிக்கா சீனாவின் Houston முகவரகத்தை மூடுமாறு உத்தரவிட்டதற்கு பதிலடியாக. Chengdu சீனாவின் Sichuan மாநிலத்தில் தலைநகர் ஆகும். இந்த முகவரகமே திபெத் பகுதிக்கும் பொறுப்பு. . பொதுவாக இரு நாடுகளுக்கு இடையில் யுத்தம் அல்லது யுத்தத்துக்கு நிகரான நிலையிலேயே மற்றைய நாட்டி தூதுவரகத்தை அல்லது முகவரத்தை மூட கட்டளையிடும். ஆனால் ரம்ப் அரசு அரசியல் […]
அமெரிக்காவின் Texas மாநிலத்தின் ஹியூஸ்ரன் (Houston) நகரில் அமைத்துள்ள சீன முகவரகத்தை (Consulate General) மூடுமாறு சீனாவுக்கு அமெரிக்க வெளியறவு திணைக்களம் இன்று புதன்கிழமை உத்தரவு இட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் முரண்பாடுகளின் உச்சத்தை இந்த உத்தரவு காட்டுகிறது. . ஜூலை 24 ஆம் திகதிக்கு முன் அனைத்து பணியாளர்களும் மேற்படி நிலையத்தில் இருந்து அகற்றப்படவேண்டும் என்றும் மேற்படி உத்தரவு கூறியுள்ளது. . இதனால் விசனம் கொண்டுள்ள சீனா, மேற்படி உத்தரவு நீக்கப்படாவிடின் சீனா பதில் […]
அமெரிக்கா மீண்டும் சந்திரனுக்கு விஞ்ஞானிகளை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு Artemis என்று பெயர் இடப்பட்டு உள்ளது. . இந்த திட்டத்தில் இணைய கனடா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஜப்பான், இஸ்ரேல், இந்தியா, அஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. . அத்துடன் அமெரிக்கா ரஷ்யாவையும் இந்த திட்டத்தில் இணைக்க விரும்புகிறது. அதற்கான அழைப்பை NASA விடுத்து இருந்தாலும், ரஷ்யா இணையமறுத்துள்ளது. சீனாவுக்கு எதிரான அரசியல் அணி சேர்ப்பு இது என்கிறது ரஷ்யா. […]
ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் லிபியா (Libya) சண்டையில் ஈடுபட்டுள்ள வெளிநாடுகளுக்கு சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளன. அந்த எச்சரிக்கை லிபியா சண்டைக்கு உதவுவோர் மீது பொருளாதார தடைகள் விதிக்க உள்ளதாகவும் கூறி உள்ளது. . இங்கே நகைப்புக்குரிய விசயம் என்னவென்றால் லிபியா சண்டைக்கு உதவும் பின்னணி நாடுகளில் பிரான்சும் ஒன்று. மேற்படி நாடுகள் விடுத்த அறிக்கையில் வெளிநாடுகளின் பங்கை குறிப்பிட்டு, அவற்றை சாடி இருந்தாலும், அவ்வாறு லிபியாவில் தலையிடும் நாடுகள் எவை என்பதை குறிப்பிடவில்லை. அவர்களுக்கே […]
நியோவைஸ் (Neowise, C/2020 F3) என்ற வால்வெள்ளியை (comet) வரும் சில நாட்களில் இலகுவாக காணக்கூடியதாக இருக்கும். பூமியின் மத்திய கோட்டுக்கு வடக்கே உள்ள நாடுகள் மட்டுமே இதை காணக்கூடியதாக இருக்கும். மத்திய கோட்டுக்கு தெற்கே உள்ள அஸ்ரேலியா போன்ற நாடுகள் காண முடியாது. . இந்த வால்வெள்ளி வரும் 23 ஆம் திகதி (ஜூலை 23) பூமிக்கு அண்மையில் செல்லும். அப்பொழுது இது பூமியில் இருந்து சுமார் 103 மில்லியன் km தொலைவில் இருக்கும். இதன் […]
Pathao மற்றும் Gokada ஆகிய தொழில்நுட்ப சேவை நிறுவனங்களின் CEO பதிவில் இருந்த Fahim Saleh (வயது 33) என்பவரை அவரின் நியூ யார்க் அடுக்குமாடியில் கொலை செய்த கொலையாளி உடலை துண்டாடியும் உள்ளார். மரணித்த Saleh பங்களாதேசத்தில் இருந்து அமெரிக்கா சென்றவர். இக்கொலை தொடர்பாக 21 வயதுடைய Tyrese Haspil என்ற மரணித்தவரின் உதவியாளர் (executive assistant) கைது செய்யப்பட்டு உள்ளார். Haspil ஒரு கருப்பு இனத்தவர். . Saleh பங்களாதேசம், நேபாள், ஆகிய நாடுகளில் […]
இன்று வெள்ளிக்கிழமை இந்தியாவின் அடையாளம் காணப்பட்ட கரோனா நோயாளிகள் தொகை 1 மில்லியன் (1,000,000) ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35,000 புதிய கரோனா தொற்றியோர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். உலக அளவில் 3ஆவது அதிகூடிய கரோனா தொற்றியோர் தொகையை இந்தியா கொண்டுள்ளது. அத்துடன் 25,000 பேருக்கும் மேலான தொகையினர் இந்தியாவில் கரோனாவுக்கு பலியாகியும் உள்ளனர். . மார்ச் மாதம் இந்தியா மக்கள் நடமாட்டத்தை கடுமையாக முடக்கி இருந்தாலும், ஜூன் மாதம் […]