1953 ஆம் ஆண்டு இருந்து சுமார் 6,500 தடவைகள் மனிதர் இமயமலையின் உச்சியை அடைந்து உள்ளனர். சிலர் பல தடவைகள் சென்றுள்ளனர். அவர்களில் சுமார் 300 பேர் அங்கு மரணித்தும் உள்ளனர். போதிய வளி (oxyzen) இன்மை, கடும் குளிர், மலையேறும் களைப்பு, போதிய நீர் மற்றும் உணவு இன்மை போன்ற பல காரணிகள் மரணங்களுக்கு காரணம். மரணித்தோரின் உடல்களில் சுமார் 150 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன. மிகுதி 150 உடல்கள் தற்போதும் அங்கேயே கைவிடப்பட்டு உள்ளன. […]
இலங்கையில் தேடப்பட்டுவந்த அங்கொடை லொக்கா (Maddumage Chandana Lasantha Perera alias Angoda Lokka, from Kotikawatta, Colombo) கோயம்புத்தூரில் மரணமாகியதாக கோயம்புத்தூர் போலீசார் ஞாயிறு கூறி உள்ளனர். அங்கு ஒளித்து வாழ்ந்த அங்கொடை லொக்கா ஜூலை மாதம் 3 ஆம் திகதி மாரடைப்பால் மரணமாகியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒரு இலங்கையர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் கோயம்புத்தூர் போலீசார் கூறி உள்ளனர். சிவகாமி சுந்தரி, ஈரோடு தியனேஸ்வரன், இலங்கையரான Amani Thanji […]
புதன்கிழமை, 5 ஆம் திகதி, அயோத்தில் இராமர் கோவில் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு இந்திய பிரதமர் மோதி செல்வார் என்று கூறப்படுகிறது. கரோனா தாக்கத்தால் வீழ்ச்சி அடையும் ஆதரவு, அயோத்தியின் இந்த பயணத்தால் மீண்டும் வளர்ச்சி அடையலாம். அவருடன் கூடவே அமித் சா (Amit Shah), அத்வானி உட்பட பல இந்துவாதிகள் அங்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அமித் சா தற்போது கரோனா தொற்றி உள்ளார். Mughal ஆட்சி காலத்தில், 16 ஆம் நூற்றாண்டில், கட்டப்பட்ட […]
2012 ஆம் ஆண்டு 27 வயதுடைய Vorayuth Yoovidhya என்பவர் தனது விலை உயர்ந்த Ferrari காரால் மோதி Wichien Klanprasert என்ற போலீசாரை கொலை செய்து இருந்தார். சந்தேகநபரான Vorayuth Yoovidhya உலக பிரபலம் கொண்ட Red Bull என்ற குளிர்பானத்தை ஆரம்பித்தவரின் பேரன். விபத்து இடம்பெற்று 5 ஆண்டுகளின் பின் போலீசார் Yoovidhya வுக்கு அழைப்பாணை விடுத்திருந்தனர். ஆனால் Yoovidhya போலீசாரிடம் சரண் அடையவில்லை. குறைந்தது 8 தடவைகள் அழைப்பாணைகளை விடுத்த போலீசார் பின்னர் […]
அக்டோபர் மாதத்தில் நாடளாவிய அளவில் கரோனா தடுப்பு மருந்துகளை மக்களுக்கு வழங்கவுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது. இந்த செய்தியை Mikhail Murashko என்ற சுகாதார அமைச்சர் கூறியுள்ளார். அவ்வாறு ரஷ்யா செய்யுமானால் அதுவே உலகின் முதலாவது கரோனா தடுப்பு மருந்து வழங்களாகும். முதலில் வைத்திய துறை ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இந்த தடுப்பு மருந்து வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். மாஸ்கோவில் உள்ள Gamaleya Institute ஆய்வுகளை செய்து முடிந்துள்ளன என்றும் அமைச்சர் கூறியுள்ளார். அவ்வாறு அக்டோபர் மாதத்தில் பெரும் […]
Coutts & Co. என்ற சுவிஸ் வங்கியின் முன்னாள் வங்கியாளர் ஒருவருக்கு இன்று வெள்ளி Swiss Federal Criminal Court $55,000 (50,000 Swiss francs) தண்டம் விதித்துள்ளது. இவரை அடையாளம் காட்டாது, பதிலுக்கு ‘A’ என்று அடையாளம் இடப்பட்டு உள்ளது. மலேசியாவின் 1MDB வங்கி கணக்கில் இருந்து Jho Low என்பவர் கட்டுபாட்டில் உள்ள தனியார் வங்கி கணக்கு ஒன்றுக்கு களவாக $700 மில்லியன் நகர்த்தப்பட்டதை அறிந்திருந்தும் அதை உரியவர்களுக்கு அறிவிக்காமல் இருந்தமையை ‘A” செய்த […]
கரோனாவை காரணம் காட்டி அமெரிக்க சனாதிபதி தேர்தலை பின்போட முனைகிறார் அமெரிக்க தற்போதைய சனாதிபதியும், சனாதிபதி வேட்பாளருமான ரம்ப். இன்றைய தனது Tweet செய்தியில் மக்கள் “properly, securely, safely” வாக்களிக்க சந்தர்ப்பம் கிடைக்கும்வரை தேர்தலை பின்போட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். வழமையாக அமெரிக்க சனாதிபதி தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நவம்பர் மாத முதல் செய்வாய் கிழமை இடம்பெறும். இந்த விதியை சனாதிபதி இலகுவில் மாற்ற முடியாது. அமெரிக்க காங்கிரஸ் (House + Senate) […]
பெருமளவு கரோனா காரணமாகவும், ஓரளவு சீனாவுடனான பொருளாதார மோதல் காரணமாகவும் அமெரிக்காவின் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டு (ஏப்ரல், மே, ஜூன்) பொருளாதாரம் (GDP) 32.9% ஆல் வீழ்ந்து உள்ளது. இவ்வகை வீழ்ச்சி அமெரிக்காவில் என்றைக்குமே இடம்பெற்றது இல்லை. இதற்குமுன் குறிப்பிடக்கூடிய அளவில் 1958 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டு பொருளாதாரம் 10.0% ஆல் வீழ்ந்து இருந்தது. 1980 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு பொருளாதாரம் 8.0% ஆல் வீழ்ந்து இருந்தது. 2008 ஆம் ஆண்டின் நாலாம் […]
முன்னாள் மலேசிய பிரதமர் Najib க்கு 12 ஆண்டு சிறை தண்டனையும், $49.3 மில்லியன் தண்டமும் விதிக்கப்பட்டு உள்ளன. 1MDB என்ற அரச முதலீட்டு பணத்தின் $4.5 பில்லியன் வரை காணாமல் போனதே மேற்படி வழக்குக்கு காரணம். இது 67 வயதுடைய Najib க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 5 வழக்குகளில் ஒன்றாகும். Najib தீர்ப்பை அப்பீல் செய்யவுள்ளார். 2009 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை, Najib பிரதமராக பதவி வகித்த காலத்தில், […]