பாலஸ்தீனியர் சார்பில் சிறிய, ஆனால் உறுதியான Oxfarm அழுத்தம்

பாலஸ்தீனியர் உரிமைகளுக்காக அவர்களை சுற்றியுள்ள அரபு மற்றும் இஸ்லாமிய நாட்டு தலைவர்கள் கடந்த காலங்களில் யுத்தங்கள் வரை சென்றிருந்தாலும் நாளடைவில் அவர்களின் நடவடிக்கைகள் அவரவர் சொந்த நலன்களையே நோக்காக கொண்டிருந்தன. அதன் விளைவு நாளாந்தம் பாலஸ்தீனியர்களின் நிலங்கள் இஸ்ரவேலினால் அபகரிக்கப்பட்டு வந்தன. இந்த விடயத்தில் தன்னை ஒரு நடுவராக உட்புகுத்தும் அமெரிக்காகூட இஸ்ரவேலின் நலன்களில் மட்டுமே நாட்டம் காட்டியது. ஆனால் அண்மையில் ஐரோப்பிய சமூகம் புதியதோர் நியாயமான சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அதன்படி பாலஸ்தீனியர்களின் நிலங்களில் சர்வதேச சட்டத்துக்கு […]

Snowden: NSA உளவில் பொருளாதார உளவும் அடங்கும்

NSA (National Security Agency) என்ற அமெரிக்காவின் உளவு நிறுவனத்தின் நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பு காரணமானது மட்டும்தான் என்று கூறினாலும் முன்னாள் NSA ஊழியர் Edward Snowden கருத்துப்படி NSA பொருளாதார உளவுகளிலும் ஈடுபட்டுள்ளது. இவரின் கூற்று குறிப்பாக ஜேர்மன் நிறுவனமான Siemens அடையாளம் கண்டுள்ளது. ஜேர்மன் தொலைக்காட்சி நிறுவனமான ARD TV உடனான உரையாடல் ஒன்றில் Snowden “அங்கே (Siemens இல்) அமெரிக்க நலனுக்கு தகுந்த தரவுகள் இருந்திருந்தால் – அவை அமெரிக்க பாதுகாப்பு சம்பந்தப்பட்டவை […]

இந்தியாவில் ஜப்பான் பிரதமர், $2 பில்லியன் கடனுதவி

ஜப்பானின் பிரதமர் Shinzo Abe தற்போது இந்தியாவுக்கு சென்றுள்ளார். இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட பலரை சனிக்கிழமை சந்தித்துள்ள Abe இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் பொருளாதார மற்றும் பாதுகாப்பு திட்டங்களுக்கு உடன்பட்டுள்ளார். இதன் ஒரு அங்கமாக ஜப்பான் இந்தியாவுக்கு $2 பில்லியன் (200 பில்லியன் யென் ) கடன் உதவி செய்யவுள்ளது. இந்த கடன் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் subway (நிலக்கீழ் train) கட்டவும், renewable energy உருவாக்களுக்கும் பயன்படுத்தப்படும். அத்துடன் […]

ஈரான்-மேற்கு முதல்படி இணக்கம் இம்மாதம் 20 முதல் நடைமுறை

அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, மற்றும் சீனா ஆகிய 6 பலம்மிக்க நாடுகளும் ஈரானும் அணுசக்தி விடயத்தில் இணங்கியுள்ள 6-மாத கால இடைக்கால இம்மாதம் 20 ஆம் திகதி நடைமுறைக்கு வருகின்றது. வழமை போல் மூடிய அறைகளுள் பேசி தீர்மானிக்கப்பட்ட இந்த உடன்படிக்கை விபரங்கள் முற்றாக வெளியிடப்படவில்லை. பகிரங்கப்படுத்தப்பட்ட விபரங்களின்படி எதிர்வரும் 6 மாத காலத்தில் ஈரான் தனது அணு வேலைகளை முற்றாக நிறுத்தவேண்டிய அவசியம் இல்லை என்றாலும் 5% இற்கும் மேற்பட்ட யுரேனியம் 235 […]

சீனாவின் புதிய தென்சீன கடல் சட்டம்

அண்மையில் கிழக்கு சீன கடலின் மேலான வான் பரப்பில் தனது பாதுகாப்பு வலயம் ஒன்றை உருவாக்கிய சீனா இப்போது தென் சீன கடலில் புதியதோர் கடல் சட்டத்தையும் அறிவித்துள்ளது. இந்த சட்டப்படி சீனாவினால் அடையாளம் காணப்பட்டுள்ள தென் சீன கடல் பரப்புள் நுழையும் மீன் பிடி வள்ளங்கள் சீனாவிடம் முன் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த கடல் பரப்பை Philippines, Malaysia, Brunei, Vietnam போன்ற நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன. இந்த புதிய சட்டத்துக்கு அடங்கும் […]

வடஅமெரிக்காவில் துருவம் போல் குளிர்

அமெரிக்காவின் மற்றும் கனடாவின் பகுதிகள் வழமைக்கும் அதிகமாககடும் குளிரிலும் snowவிலும் மூழ்கியுள்ளது. வழமையாக குளிர் பிரதேசமான வட அகலாங்கு 61.22 இல் உள்ள ஆங்கேராச் அலாஸ்காவை விட (Anchorage, Alaska) அமெரிக்காவின் பல தென் நகரங்கள் கடும் குளிருக்கு உள்ளாகியுள்ளன. உதாரணமாக ஆங்கேராச் வெப்பநிலை சுமார் +35 F  (+2 C) ஆக இருக்கையில், வட அகலாங்கு 41.88 இல் உள்ள சிக்காக்கோ (Chicago) வெப்பநிலை -17 F (-27 C), வட அகலாங்கு: 33.75 இல் […]

சிரியாவில் இப்போது மும்முனை யுத்தம்

சவூதி மற்றும் கட்டார் (Qatar) போன்ற நாடுகளில் இருந்து தாராளமான ஆயுதங்களை பெற்றுக்கொண்ட சிரியாவின் அரச எதிர்ப்பாளர் 2011 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் Bashar al-Assad தலைமையிலான சிரியாவின் அரசுக்கு எதிராக யுத்தத்தை ஆரம்பித்திருந்தனர். இதற்கு மேற்கும் இஸ்ரவேலும் ஆதரவு. இந்த யுத்தத்தின் இறுதி நோக்கு ஈரானை முடக்குவதே. சிரியா மத்திய கிழக்கில் உள்ள ஈரானின் நட்பு நாடு. இந்த யுத்தம் கடந்த 2 வருடம் 9 மாத காலத்தில் சுமார் 120,000 உயிர்களை பலிகொண்டுள்ளது என […]

வீட்டு வரி காரணமாக சீனாவில் விவாகரத்துக்கள்

சீனாவில் அண்மைக்காலங்களில் அதிகரித்துவரும் விவாகரத்துக்களுக்கு புதியதோர் காரணி தோன்றியுள்ளது. அந்த காரணி வீட்டுவரி. அதீத பொருளாதார வளர்ச்சியால் செல்வந்த சீனருக்கு தோன்றியுள்ளது இந்த புதிய தலையிடி. பணத்தில் மிதக்கும் பல சீன தம்பதியினர் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாங்கி வைத்துள்ளனர். பெய்ஜிங் (Beijing), சங்காய் (Shanghai)  போன்ற பெரு நகரங்களில் சராசரி வீடுகளின் விலை தற்போது U$200,000 முதல் U$400,000. இந்த வீடுகளின் விலைகள் விரைவில் சரியலாம் என்ற அச்சம் காரணமாக சிலர் தம்மிடம் உள்ள மேலதிக […]

எகிப்தின் இராணுவ அரசால் Muslim Brotherhood தடை

எகிப்தின் Muslim Brotherhood அல்லது Society of Muslim Brothers 1928 ஆம் ஆண்டு இஸ்லாத்தை அடிப்படையாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு சமூகசேவை இயக்கம். இதன் உறுப்பினர்கள் செலுத்தும் நன்கொடைகளால் இந்த இயக்கம் வைத்தியசாலைகள், சிறு வர்த்தகங்கள் மற்றும் பாடசாலைகள் போன்றவற்றை இயக்கி வந்தது. ஆனாலும் இந்த குழுவை நீண்ட காலமாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த எகிப்திய அரசு சட்டப்படி தடை செய்திருந்தது. 2011 இல் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த முபாரக் மக்கள் புரட்சியின் மூலம் வீசப்பட்ட […]

AK-47 கண்டுபிடிப்பாளர் Mikhail Kalashnikov மறைவு

ரஷ்யாவில் பிறந்த Mikhail Kalashnikov என்பவரே உலக பிரசித்தமான AK-47 என்ற தாக்குதல் ஆயுதத்தை உருவாக்கியவர் ஆவார். 1919 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 94 ஆவது வயதில் இன்று திங்கள் கிழமை காலமானார். AK-47 என்பதன் விரிவாக்கம் Avtomat Kalashnikov 47 அல்லது Automatic Kalashnikov 47 ஆகும். இங்கு K  அல்லது Kalashnikov என்பது இவரின் பெயரையும் 47 இந்த ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டையும் (1947) குறிக்கும். இந்த ஆயுதம் 1948 ஆம் […]